2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 10 ஜூலை, 2019

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை பரீட்சைகளை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2 678 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகளை நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உயர்தரப் பரீட்சையில் இந்தத் தடவை 3 37 704 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
அவர்களில், 1 39 475 பேர் பழைய பாடத்திட்டத்திற்கு அமைய விண்ணப்பித்துள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 1 98 229 பேர் புதிய பாடத்திட்டத்திற்கு அமைய பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.




Post Bottom Ad

Responsive Ads Here

Pages