சுயதொழிலில் ஈடுபடும் வருமானம் குறைந்த சமுர்த்தி உதவி பெறும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு. - Karaitivu.org

Breaking

Wednesday, February 27, 2019

சுயதொழிலில் ஈடுபடும் வருமானம் குறைந்த சமுர்த்தி உதவி பெறும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் ஏற்பாட்டிலும் மற்றும் தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் 2017ம் ஆண்டின் நிதி ஒதுக்கீட்டில்
விசேட முயற்சியான்மை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு சுயதொழிலில் ஈடுபடும் வருமானம் குறைந்த சமுர்த்தி உதவி பெறும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று(27) காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.வேதநாயகம் ஜெகதீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பிரதேச செயலக கணக்காளர் செல்வி.என்.ஜயசர்மிகா அவர்களும், அபிவிருத்தி  இணைப்பாளர் ஜனாப்.ஐ.எல்.எம்.ராபிஊ அவர்களும் கலந்துகொண்டதோடு கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள் ஜனாப்.எம்.ஜலீல் மற்றும் ஜனாப்.எ.ஆர். எம்.பஸ்மீர் அவர்களும் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்களை வழங்கி வைத்தார்கள்.

No comments:

Post a Comment