இலங்கை இராமகிருஷ;ணமிசன் புதிய தலைவருக்கு மட்டக்களப்பில் வரவேற்பு - Karaitivu.org

Breaking

Friday, August 31, 2018

இலங்கை இராமகிருஷ;ணமிசன் புதிய தலைவருக்கு மட்டக்களப்பில் வரவேற்பு

(சிவம்)
இலங்கை இராமகிருஷ;ணமிசன் புதிய தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தாவின் மட்டக்களப்பு விஜயத்தையொட்டி வரவேற்பளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ;ணமிசன் தலைவர் சுவாமி தக்ஷஜானந்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மங்கள வாத்தியங்கள் முழங்க மாணவர்கள் மற்றும் அடியார் சகிதம் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
சுவாமி அக்ஷராத்மானந்தா அடியார்களை ஆசீர்வதித்ததோடு அருள்மொழியுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் சுவாமி பிரபு பிரேமானந்தா, கல்லடி காயத்திரி பீடத்தைச் சேர்ந்த சாம்பசிவம் சிவாச்சாரியார், மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பானர் கே. மனோகரன் மட்டக்களப்பு இந்து வர்த்த சங்கத் தலைவர் எஸ்.அமிர்தலிங்கம் உள்ளிட்ட வர்த்தக சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments:

Post a Comment