இன்று நள்ளிரவு திருக்கோவில் ஆலயத்தில் சாதனையாளர் பாராட்டுவிழா! - Karaitivu.org

Breaking

Friday, August 10, 2018

இன்று நள்ளிரவு திருக்கோவில் ஆலயத்தில் சாதனையாளர் பாராட்டுவிழா!

இன்று நள்ளிரவு திருக்கோவில்  ஆலயத்தில்  சாதனையாளர் பாராட்டுவிழா!

(காரைதீவு  நிருபர்)

வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலய ஆடிஅமாவாசை  தீர்த்தோற்சவத்தையொட்டிய வருடாந்த சாதனையாளர் பாராட்டுவிழா இன்று(7) வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11-12மணியளவில் ஆலயபரிபாலனசபைத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.

பிரதமஅதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கதிர்காமத்தம்பி விமலநாதன் விசேட அதிதியாக திறைசேரி முகாமைத்துவசேவைகள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கலாநிதி மூத்ததம்பி கோபாலரெத்தினம் சிறப்பதிதியாக திருக்கோவில் பிரதேசசெயலாளர் சிவஞானம் ஜெகராஜன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

திருக்கோவில் வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து  கடந்தாண்டு தரம் 5புலமைப்பரிசில் பரீட்சை க.பொத. சா.த. மற்றும் க.பொத. உயர்தரப்பரீட்சையில் சாதனை படைத்த 19 மாணவர்கள் பாராட்டிக்கௌரவிக்கப்படவுள்ளனர்.
மேலும் ஆலயவளர்ச்சியில் பங்கேற்ற அதிகாரிகள் முதல் திருப்பணிச்சபை பிரதிநிதிகள் 16பேர் வரை கௌரவிக்கப்படவுள்ளனர் என ஆலயபரிபாலனசபைச் செயலாளர் அ.செல்வராஜா தெரிவித்தார்.

தரம் 5புலமைச் சாதனையாளர்கள் 3பேர்.
ரவீந்திரன் கீனசயன் - 184புள்ளிகள் - குமர வித்.. திருக்கோவில்.
கனகநாயகம் பவனிதா -183புள்ளிகள் -திருவள்ளுவர் வித்..அ.பற்று
இலங்கராசா சுபிலாஸ் - 181புள்ளிகள்- சரஸ்வதி வித். தம்பிலுவில்

க.பொ.த(சா.த.) 9ஏ சாதனையாளர்கள் 11பேர்.
சிறிபிரபாகரன் இந்துஜா – திருநாவுக்கரசு வித்.. ஆலை.வேம்பு
புவனேந்திரராஜா அட்சனா –தம்பிலுவில் ம.ம.வித். தம்பிலுவில்
செல்வரெத்தினம் தேவஜோதி;- இ.கி.மிசன் ம.வித்.. அ.பற்று.
கணேசமூர்த்தி ஜூனதா- தம்பிலுவில் ம.ம.வித்.. தம்பிலுவில்
கமலேந்திரன் சஞ்ஜீவிகா - இ.கி.மிசன் ம.வித்.. அ.பற்று.
ஜெகநாதன் மதுஜா- பொத்துவில் மெ.மி.த.க.பா.. பொத்துவில்
சந்திரகுமார் சனுஜிகா- தம்பிலுவில் ம.ம.வித்.. தம்பிலுவில்
மதியழகன் சரனிகரன் - இராமகிருஸ்ணா தே.பா. அ.பற்று.
புவனேந்திரன் டிலானி- இ.கி.மிசன் ம.வித்.. அ.பற்று.
ராஜேஸ்வரன் கர்சிகா- தம்பிலுவில் ம.ம.வித்.. தம்பிலுவில்
ஜெயக்குமார் சுவஸ்ரிகா-இ.கி.மிசன் ம.வித்.. அ.பற்று.

க.பொ.த. (உயர்தரம்) சாதனையாளர்கள் 05பேர்.
ரவிச்சந்திரன் றக்சனா-சட்டம்– தம்பிலுவில் ம.ம.வித். தம்பிலுவில்
சண்முகம் நோர்ஜினி-வர்த்தகம்- இராமகிருஸ்ணா தே.பா..அ.பற்று.
அசோகன் தனுசாபவன்-பொறியியல்-இராமகிருஸ்ணா தே.பா.அ.பற்று.
திருஞானசீலன்சதீஸ்பிரநாத்-பொறியியல்-திருக்கோவில் மெ.மி.த.க.பா.
கமலநாதன் கேமபிரதீப்-மருத்துவம்- இராமகிருஸ்ணா தே.பா..அ.பற்று.

ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ மகேஸ்வரக்குருக்களின் ஆசியுரையுடன் ஆரம்பமாகும் இந்நிகழ்வு கலைநிகழ்ச்சிகள் சகிதம் 3கட்டங்களாக பாராட்டுவிழா நடைபெறும். இறுதியில் ஆலயசெயலாளர் அ.செல்வராஜா நன்றியுரை நிகழ்த்துவார்.


No comments:

Post a Comment