காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழத்தினால் நடாத்தப்பட்ட இலவச கல்விக் கருத்தரங்கு. - Karaitivu.org

Breaking

Thursday, August 2, 2018

காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழத்தினால் நடாத்தப்பட்ட இலவச கல்விக் கருத்தரங்கு.

காரைதீவு  விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தின் விவேகானந்தா இலவசக்கல்வி சமூகவள நிலையம் மற்றும் கல்வி அபிவிருத்தி ஒன்றியம் வாகரை இணைந்து 17 பாடசாலைகளை இணைத்து 5ம்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான இலவச கல்விக்கருத்தரங்கு நேற்று (30.07.2018) அன்று வாகரை வம்மிவெட்டுவான் மகாவித்தியாலயத்தில் விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் செயலாளர் கோ.உமாரமணன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக சித்தர்களின் குரல் சிரேஷ்ட விரிவுரையாளர் சிவசங்கர் அவர்களும் வாகரை பிரதேசத்தின் தவிசாளரும் மற்றும் கல்லூரியின் அதிபர் அவர்களும் கலந்து கொண்டனர். மேலும் இக்கருத்தரங்கில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதோடு கருத்தரங்கிற்கு வளவாளராக காரைதீவு வ.துஷ்யந்தன் அவர்கள் கடமையாற்றினார். மேலும் இக்கருத்தரங்கினை ஏற்பாடு செய்ததோடு வாகரை வம்மிவெட்டுவான் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றும் அப்பிரதேச கல்வி நடவடிக்கையினை முன்னெடுக்கும் ஆசிரியர் ம.குமுதன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். மேலும் இக்கருத்தரங்கு நடாத்துவதற்கு விவேகானந்தா விளையாட்டுக்கழகம் முழு அனுசரணை வழங்கியதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.


No comments:

Post a Comment