மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பம் ! - Karaitivu.org

Breaking

Friday, August 31, 2018

மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பம் !இந்த ஆண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 3ம் திகதி ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிரூபத்தில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கல்விப் பொதுத்தராதர பத்திர (உயர் தர) பரீட்சை முதல் கட்ட விடைத்தாள் திருத்தும் நிலையங்களாக உள்ள 37 பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த 6 விடயம் தொடர்பான சுற்று நிரூபம் சகல பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், உயர் தரப் பரீட்சை தாள்கள் மதிப்பிடும் நிலையங்களாக முப்பத்தேழு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அச்சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment