korg top cover

korg top cover mob

கல்முனையில் முதன்முதலாக நடைபெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறியின் இறுதிப்பரீட்சைக்குத் தோற்றிய 29 பயிலுனர் ஆசிரியர்களும் சித்தியடைந்துள்ளனர். அதிலும் 17பேர் மெரிட் அதிவிசேடசித்திபெற்றுள்ளமை பாராட்டுக்கும் பெருமைக்குமுரியது.சம்பந்தப்பட்ட பொறுப்பாளர் சிவப்பிரகாசம் விரிவுரையாளர்கள் ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டுகின்றேன்.
 
இவ்வாறு ஆறுதல் ஸ்ரீலங்கா – கல்முனைப்பிராந்திய முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா ஆசிரியர்களின் ஒன்றுகூடல்
நிகழ்வில் பிரதமஅதிதியாகக்கலந்துகொண்ட கல்முனை றோட்டரிக்கழக தலைவர் றோட்டரியன் மா.சிதம்பரநாதன் புகழாரம் சூட்டினார்.
 
கல்முனை நிலைய முன்பள்ளி ஆசிரியர்கள் வட்டம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வ(2) சனிக்கிழமை கல்முனை பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் நடைபெற்றது..
 
ஆறுதல் அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பி.சிவப்பிரகாசம்; சிறப்புரையாற்றினார். விரிவுரையாளர் வி.ரி.சகாதேவராஜா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி தொகுத்தளித்தார்.
 
இந்நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியைகளின் பல வித கலைநிகழ்வுகள் மேடையேறியதுடன் வளவாளர்களுக்கு நினைவுப்பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன கல்முனை நிலைய முன்பள்ளி ஆசிரியர்கள் வட்டச்செயலாளர் திருமதி எஸ்.கலைவதனி நன்றி தெரிவித்தார்.

dddd 1

dddd 1

dddd 1

dddd 1

dddd 1

dddd 1

dddd 1

dddd 1

dddd 1

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை