korg top cover

korg top cover mob

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச கலை, இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கலைஞர் அம்பிளாந்துறையூர் அழகு தனுவின் சுமைகள் குறும்படம் வெளியீட்டு விழா 2017-07-16 ஞாயிற்றுக்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் கவிஞர் த.மேகராசா (மேரா) தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஆன்மீக அதிதியாக சிவயோகச் செல்வன் சாம்பசிவ சிவாச்சாரியார் கலந்து கொண்டார். பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். சிறப்பு அதிதியாக தேசிய கல்வி நிறுவகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் முருகு தயாநிதி கலந்துகொண்டார். வெளியீட்டுரையினை கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சு.சந்திரகுமார், இறுவட்டு நயவுரையினை விரிவுரையாளர் க.மோகனதாசன் ஆகியோர் நிகழ்த்தியதுடன் இறுவட்டின் முதற்பிரதியினை வர்த்தகர் சா.குணசேகரம் பெற்றுக்கொண்டார். அழகு தனுவின் சுமைகள் குறும்படம் எமது சமூகத்தில் நடைபெறும் அவலங்களை தத்ரூபமாக படம் பிடித்துக்காட்டியுள்ளது. இக் குறும்படத்தின் இயக்கம் அழகு தனு, தயாரிப்பு தில்லை ரமேஸ், இசை யாழ் அருணா கேதீஸ், தொகுப்பு கிரிதாஸ் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர் இவ் வெளியீட்டு விழாவில் பெருமளவிலான கலைஞர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டதுடன் ஆன்மீக அதிதியாக கலந்து கொண்ட சிவயோகச் செல்வன் சாம்ப சிவாச்சாரியாரினால் குறும்பட இயக்குனர் அழகு தனு கலை சிற்பி எனும் கௌரவ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். என்பதும் குறிப்பிடத்தக்கது.


தகவல்: துஜியந்தன்

cd velirrde 8

cd velirrde 8

cd velirrde 8

cd velirrde 8

cd velirrde 8

cd velirrde 8

cd velirrde 8

cd velirrde 8

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

'மனக்கோயில் மணவாளன்' இறுவெட்டு வௌியீடு
புதன்கிழமை, 03 செப்டம்பர் 2014

புதியவை