korg top cover

korg top cover mob

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கதிர்காம வருடாந்த உற்சவத்திற்கு பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை நேற்று 15.07.2017 விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து திறந்துவைக்கப்பட்டது. அதிகாலை விசேட பூசை வழிபாடுகள்இ சம்பிரதாயபூர்வ வைபவம் நடைபெற்று பின் காட்டுப்பாதையானது திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மொனராகல மாவட்ட பிரதி அரசாங்க அதிபர் திரு.கீதா பத்மகுலசூரிய இ உகந்தை முருகன் ஆலய வண்ணக்கர்இ ஆலய பிரதம குருஇ ஆலய திருப்பணிச்சபை குழுவினரும் இராணுவத்தினரும் கலந்துகொண்டிருந்தனர்.மேலும் கதிர்காம ஆடிவேல்விழா உற்சவம் ஜூலை மாதம் 24ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும்.

நேற்றயதினம் பாதயாத்திரைக்காக வேல்சாமி தலைமையிலான குழுவினர் உட்பட சுமார் 1500ற்கும் மேற்பட்ட பாதயாத்திரியர்கள் திறந்துவைக்கப்பட்ட காட்டு்பாதையினூடாக சென்று கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் வனப்பகுதிகளில் ஆங்காங்கே கடைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

kathir gate open 1

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை