Vipulaadar 12thbtop

korg top bdlogo

nvely
சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் இம்முறை வெளியான க.பொ.த.உயர்தரப்பரீட்சை முடிவுகளின்படி 12மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்.
 
80வருடவரலாற்றைக்கொண்ட இக்கல்லூரியில் முதனிலை மாணவனாகத்தெரிவான எஸ்.விதுர்சன்  ஏ2பி  பெற்றதன்மூலம் கலைத்துறையில் மாவட்டத்தில் 3ஆம் இடம் பெற்று மற்றுமொரு சாதனை நிகழ்த்தியுள்ளார் என வித்தியாலய அதிபர் என்.பிரபாகர் தெரிவித்தார்.
 
கலைத்துறையில் பெற்று ரி.சிந்துஜன் எம்.பகீரதி ஆகிய இருமாணவர்களும் 2ஏ1பி பெற்று முறையே  மாவட்டத்தில் 50மற்றும் 60வது நிலையிலுள்ளார். 
ஜே.ருக்சன் மற்றும் எஸ்.அஜித்குமார் ஆகியேர் ஏ2பி சித்தியை    பெற்றுத் தெரிவாகியுள்ளனர்.
 
ஏபிசி என்ற முடிவை என்.சர்மினி ஜே.தர்சினி எஸ்.அனுசியை பி.சுரேணிகா எஸ்.தர்சா ஆகிய 05மாணவர்கள் பெற்றுள்ளனர்.
 
2பி1சி என்ற முடிவை ஆர்.ஜெயந்தன் பெற்றுள்ளர் என உயர்தரப்பிரிவுக்கான இணைப்பாளரும் பிரதிஅதிபருமான திருமதி என்.ரவிச்சந்திரன்  குறிப்பிட்டார்.
 
கணிதத்துறையில் 3மாணவர் தோற்றியிருந்தனர். முதல் மாணவன் பி.கதிர்சன் 2சி1எஸ் சித்தியும் அடுத்த வி.தருட்சன் எஸ்.நிலக்சனதாஸ் ஆகிய இரு மாணவர்களும் 3எஸ் சித்திகளையும் பெற்றுள்ளனர்.
 
அரசியல்விஞ்ஞானம் இந்து நாகரீகம் ஆகிய இருபாடங்களில் 100வீதம் சித்தியடைந்திருப்பதாக பாடத்துறைப்பொறுப்பானர் என்.கோடீஸ்வரன் தெரிவித்தார்.
 
நாவிதன்வெளிக்கோட்டத்தில் அதிகூடிய மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புகின்ற ஒரேயொரு பாடசாலை இதுவாகும்.
 
பின்தங்கிய பிரதேசத்திலுள்ள இப்பாடசாலை இத்துணை சாதனை படைத்திருப்பதையிட்டு வலயக்கல்விப்பணிப்பார் எம்.எஸ்.சஹதுல்நஜீம் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து ஆகியோர் வாழ்த்துக்களைத்தெரிவித்துள்ளனர்.
 
(வி.ரி.சாகாதேவராஜா)
 

சூடான செய்திகள்

காரைதீவில் அகோர விபத்து....
வியாழக்கிழமை, 09 மார்ச் 2017
மரண அறிவித்தல்-அமரர்.பிரேமா கமலநாதன்
வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017

தொடர்பான செய்திகள்

புதியவை

காரைதீவில் உள்ள அதிசய வாழை மரம்....
வியாழக்கிழமை, 23 மார்ச் 2017
உலக நீர் தினம் இன்று
புதன்கிழமை, 22 மார்ச் 2017