korg top cover

korg top cover mob

வரலாற்றில் முதற்றடவையாக சம்மாந்துறைவலயத்தில் ஒளிவிழா சிறப்பாக நடைபெற்றது. சம்மாந்துறை கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்  நஜீம் தலைமையில்  சம்மாந்துறை  அப்துல் மஜிட்  மண்டபத்தில் இவ்விழா கோலாகலமாக கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன்இடம்பெற்றது. 
 
 விழாவிற்கு  பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஷாம் கௌரவ அதிதியாக மட்டு அம்பாரை மறை மாவட்ட ஆயர்  அதிவண்க்கத்தக்குரிய ஆர்.பி.ஜோ சப் பொன்னையா ஆண்டகை  மற'றும்  பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் கோட்டக்கல்வி அதிகாரிகள் உதவிக் கல்வி அதிகாரிகள்  ஆசிரிய ஆலோசகர்கள்  என அனைத்து பாடசாலையின் அதிபர்களும் மற்றும்  இந்து இஸ்லாம் மத மாணவர்களும் கலந்தகொண்ணடனர். விழாவில்  இஸ்லாம் மத மாணர்களும் கிறிஸ்த மாணவர்களுடன் கண்கவர்  கலைநிகழ்வுகள் கோலாகலமாக இடம் பெற்றது .
 
இனங்களுக்கிடையிலான ஜக்கியத்தினை மதங்களினுடாக இணைப்பதற்குஇ சமாதானத்தையும் சகவாழ்வையும் இளம்  தலமுறையான மாணவர்கள் மூலம் சமூகத்தில் மேலோங்கிஇன ஐக்கியம் எழுச்சி பெற வேண்டும் எனும் தூர சிந்தனை நோக்கில்  வலயக்கல்விப் பணிப்பாளரால் இந் நிகழ்வு  முதல் தடவையாக சம்மாந்துறை கல்வி வலயத்தில்  நிகழ்த்தப்பட்டுள்ளது.
 
 ஒரு நல்ல தருணத்திற்கான இவ் ஆரம்பத்தினை பாராட்டி வரவேற்றுபலரும் உரையாற்றினர்.. இதே போன்று இஸ்லாமிய மதம்  சார்ந்த  இப்தார் நிகழ்வு இந்து மதம் சார்ந்த  புதுவருட சிறப்பு நிகழ்வு  சரஸ்வதி பூஜை நிகழ்வு என்பன சிறப்பாக ஏலவே இடம்பெற்மைறு வருகின்மை குறிப்பிடத்தக்கது.இம்முறைதான் முதற்றடவையாக நடைபெற்றது.
 
(வி.ரி.சகாதேவராஜா)
 
oli 1
 
oli 1
 
oli 1
 
oli 1
 
oli 1
 
oli 1
 
oli 1
 
oli 1
 
oli 1
 
oli 1
 
oli 1
 

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை