korg top cover

korg top cover mob

 
மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் தாண்டவன்வெளி தேவாலயத்திற்கு அருகாமையில் நேற்று (10) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
 பஸ் வண்டியின் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமலே வீதியால் பயணித்த இச் சிறுவன் மீது மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
 
கூழாவடி முதலாம் ஒழுங்கையை சேர்ந்த மட்டு போதனா வைத்தியசாலையில், பணிபுரியும் அற்புதவடிவேல் என்பவரின் மகனான கேஷான் வயது (13) எனும் சிறுவனே இவ்விபத்தில் பலியாகியுள்ளார்.
இவர் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் தரம் (08) இல் கல்வி கற்ற மாணவன் என்பதுடன்,  அண்மையில் ஈழத்து திருச்செந்தூர் சிவானந்தா ஆச்சிரமத்தின் ஸ்தாபகர் சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்களின் 10ம் நினைவு தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட யோகாசனப் போட்டியில் கூழாவடி விபுலானந்தா அறநெறிப் பாடசாலை சார்பாக போட்டியிட்டு மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
  
இவ்விபத்து தொடர்பாக மட்டக்களப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

DSC 8317

bati ac 1

DSC 8352

bati ac 5

bati ac 6

bati ac 2

bati ac 3

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை