korg top cover 0 thwww

karaitivu logo mobile

26அடி உயரமான கொடித்தம்பம் திருக்கோவிலில் சுபநேரத்தில் நடப்பட்டது!
 
வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் புதிய கொடித்தம்பம் நடல் வைபவம்  (06) வெள்ளிக்கிழமை ஊர்வலம் மற்றும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்களின் சமயகிரியைகளுடன் சமயசடங்குகளுடன் வெகுசிறப்பாக  நடைபெற்றது.
 
 
  காலை கொடித்தம்பம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பிற்பகல் 2மணி முதல் 3மணிவரையுள்ள சுபமுகூர்த்தவேளையில் கொடித்தம்பம் ஆலயபரிபாலனசபைத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையில் நடப்பட்டது.
 
ஆலயபரிபாலனசபையினர் உபயகாரர் பாக்கியராஜா குடும்பத்தினர் உள்ளிட்ட அடியார்கள் லந்தகொண்டனர்.ஆலயகுரு சிவஸ்ரீ அங்குசநாதக்குருக்கள் சிறப்பு கிரியைகளை நடாத்தினார்.
 
கொடிமரத்தம்பம்கொண்டுவரப்பட்டு நடப்படும் குழியில் நவதானியம் வலம்புரிச்சங்கு உட்பட பஞ்சதிரவியங்கள் அனைத்தும் சமயசம்பிரதாயப்படி குழிக்குள் போடப்பட்டு அரோஹரா கோசத்தின் மத்தியில் 26அடி உயர கொடிமரம் அடியார்களால் உயர்த்தப்பட்டு நடப்பட்டது. 
 
 
காட்டிலிருந்துகொண்டுவரப்பட்ட 26அடி உயரமுடைய 2அடி விட்டமுடைய நாகமரத்திலான இக்கொடிமரம் மற்றும் அதன்அமைப்புவேலைகளை களுவாஞ்சிக்குடி லாவண்யா நகைமாட உரிமையாளர் கே.பாக்கியராஜா உபயகாரராக பொறுப்பேற்று நடாத்திருந்தார் ர். 
 
இதற்கென சுமார் 15லட்சருபா செலவாகியிருந்தது.அண்மையில் ஆலயத்தலைவர் சு.சுரேஸ் தலைமையிலான பரிபாலனசபையினர் விடுத்த வேண்டுகோளை யேற்ற திரு.பாக்கியராஜா கொடிமரத்தின்கீழுள்ள மண்டப மாபிள் வேலைகளையும் பொறுப்பேற்றுள்ளார் அவருக்கு ஆலயம்சார்பான  நன்றிகள் என ஆலயபரிபாலனசபைச் செயலாளர் ஏ.செல்வராஜா தெரிவித்தார்.
 
15ஆண்டுகளுக்குப்பிற்பாடு எதிர்வரும் ஜூன்மாதம் 25ஆம் திகதி புனராவர்த்தன மகா கும்பாபிசேகம் நடைபெறவிருப்பது தெரிந்ததே. அதனையொட்டி ஆலயம் புதுப்பொலிவுபெற்று வருகின்றது.
 
18 result
 
 24 result
 
27 result
 
 
28 result
 
 
29 result
 
30 result
 
 

 

 

சூடான செய்திகள்*

தொடர்பான செய்திகள்

புதியவை