korg top cover

korg top cover mob

12 கழகங்களை கொண்டு காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட மோகன்-கணேஷ் ஞாபகார்த்த இருபதுக்கு இருபது கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இப்போட்டியானது திரு.எஸ்.நேசராசா (தலைவர்,விவேகானந்தா விளையாட்டுக்கழகம்) தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாகாணசபை உறுப்பினர் கௌரவ.இரா.துரைரெட்ணம் அவர்களும் கௌரவ.கோ.கருணாகரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மற்றும் பல சிறப்பதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

இதில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகம் வெற்றிவாகை சூடியது.

சாய்ந்தமருது டஸ்கஸ் அணியிற்கும் விவேகானந்தா அணியிற்கும் இடையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் முதலாவதாக டஸ்கஸ் அணியினர் துடுப்பெடுத்தாடினர் 135 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  விவேகானந்தா அணியினர் 19 வது ஓவரின் போது 136 ஓட்டங்களை பெற்று மூன்று விக்கெட்டுக்களால் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றினர். இத்போதான படங்களை கீழே காணலாம்..

படங்கள்-தனுசாந்தன்

vsc 1

vsc 1

vsc 1

vsc 1

vsc 1

vsc 1

vsc 1

vsc 1

 மேலதிகபடங்களுக்கு இங்கே அழுத்தவும்

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை