korg top cover

korg top cover mob

rio kicks off games with ode to forests favelas and funk

 

ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் இறுதி நாளான இன்று ஆண்கள் மாரத்தான் உள்பட எஞ்சிய போட்டிகள் நடைபெற்றன.முன்னதாக, கூடைப்பந்து மகளிர் பிரிவு போட்டியில், அமெரிக்க மகளிர் அணி, தங்கப் பதக்கம் வென்றது.ஸ்பெயின் அணிக்கு எதிராக நடந்த இறுதி ஆட்டத்தில், அமெரிக்க அணியின்  அபார திறனால், 101-72 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்க அணி வெற்ற பெற்றது.ரியோ ஒலிம்பிக்ஸ் தங்கப் பதக்கத்தோடு, தொடர்ந்து ஆறாவது முறையாக அமெரிக்க மகளிர் கூடைப்பந்து அணி தங்கம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கால்பந்து விளையாட்டு போட்டியில், ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை நடத்துகின்ற பிரேசில் அணி தனது முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.நேற்றிரவு ஜெர்மனிக்கு எதிராக நடந்த இறுதி போட்டியில், சமநிலை ஏற்பட்டதால், பெனால்டி ஷூட்-அவுட் முறைப்படி முடிவு தீர்மானிக்கப்பட்டது.இதில் அதிக கோல் அடித்த பிரேசில் அணி பிரேசில் அணி தங்க பதக்கம் வென்றது.மகளிர் 800 மீட்டர் ஓட்டப்போட்டியில், தென்னாப்பிரிக்க வீராங்கனை காஸ்டர் செமன்யா தங்கப்பதக்கம் பெற்றார்.ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளின், ஆண்கள் மாரத்தான் போட்டியில் கென்யாவின் எல்யூட் கிப்சோகி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.தற்போதைய நிலவரப்படி, பதக்கப் பட்டியலில், அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

அடுத்த 2020 க்கான ஒலிம்பிக் டோக்கியோவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

rio 1

rio 1

rio 1

rio 1

rio 1

rio 1

rio 1

rio 1

rio 1

rio 1

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை