posted Dec 25, 2011 2:19 AM by Arunsanth Thadsanamoorthy
[
updated Dec 25, 2011 8:43 AM by Kiruthikan Sothiswaran
]
தாயின் அன்பு கடனதீர்க்க...... தட்டு தட்டா சோறு திண்ணும் வயிறு நெரயல ஏ தாய் கொடுத்த உருண்டைசோற்றில் பசிய காணல.....
பாய் விரிச்சி படுத்த போதும் தூங்க தோனல ஏ தாய் மடியில் படுத்துகிட்டே வேறெதுவும் தேவல.....
கட்டு கட்டா காசிருந்தும் கணக்கு முடியல ஏ தாய் கொடுத்த ஒற்றை காசில் குத்தம் குறையில்ல....
ஆயிரந்தா உறவிருந்தும் கவலை தீரல ஏ தாய் அருகில் இருக்கும் போது கண்ணீர் காணல.....
வித விதமா உடையிரிந்து எதுவும் பிடிக்கல ஏ தாய் கொடுத்த கைக்குட்டைக்கு நிகர் எதுவுஇல்ல.....
காலையில கண்விழிக்கும் கஷ்டம் புரியல ஏ தாய் முகத்த பார்க்கும் போது நஷ்டம் அரியல.....
சின்ன சின்ன நட்சத்திரம் அழகா தெரியல ஏ தாய் கொடுத்த பாசமுத்தம் இன்னும் காயல.....
வண்ண வண்ண வானவில்ல பிடிக்க முடியல ஏ தாயின் அன்பு கடனதீர்க்க ஈடு இணையில்ல..... |
|