காதல் எனும் Theoretical Physics

posted Sep 30, 2011 9:48 PM by Thineskanth Ponnampalam



தனி வழி என் வழி என
தவறாமல் இயங்கிய என்னை
புற விசை என நீ தாக்க
பறம் தள்ளி உன் வழி விழவே
நியுட்டனின் முதலாம் விதி தெளிந்தேன்..

An object at rest tends to stay at rest and an object in motion tends to stay in motion with the same speed and in the same direction unless acted upon by an unbalanced force.

போதுமென்றிருந்த என் வாழ்வில்
போட்டி ஒன்றை தோன்ற வைத்தாய்
உன் உள்ளம் நோக்கிய தேறிய ஈர்ப்பு
உந்த மாற்றத்தில் என் வாழ்க்கை
நியுட்டனின் இரண்டாம் விதி தெளிந்தேன்..

Total vector sum of the forces on a body is proportional to the rate of change of its momentum.

பேதையவள் மேற்கொண்ட காதல்
பெரு விசைப் பெருக்குக் கொப்ப
வேல் விழி வஞ்சி உமிழும்
வெறுப்பும் வளர்வது கண்டு
நியுட்டனின் மூன்றாம் விதி தெளிந்தேன்..


To every action there is always an equal and opposite reaction: or the forces of two bodies on each other are always equal and are directed in opposite directions.



காதல் எனும் Theoretical Physics ல் நியுட்டனின் இயக்கவிதிகள் முற்றும்..

PS:காதல் எனும் Theoretical Physics தொடரும்...

கவிதை by:- வம்பன்