karaitivu org logo

Notice*

We are currently updating our website. We sincerely apologize for the inconvenience.

- WebTeam -

 

ஞானம் அறக்கட்டளை நிதிய நிறுவுனரின் பிறந்ததின நிகழ்வுகள்

லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தால் இலங்கையில் பல மாவட்டங்களில் பல உதவிகளை வழங்கி வருகின்றுது அந்த வகையில் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிறுவுனரும் லைக்கா மொபைல் நிறுவனத்தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் தேவைகளை கருத்திற்கொண்டு தெரிவு செய்யப்பட்ட 1400 மாணவர்களுக்கு மாதாந்த கல்வி ஊக்கத் தொகையாக 1000 ரூபா வழங்கும் திட்டத்தின் முதற் கட்டமாக 600 மாணவர்களுக்கு 1000 ரூபா வைப்பிலிடப்பட்ட வங்கிப்புத்தகமும், பாடசாலை புத்தகப்பையும் வழங்கப்பட்டன. அத்துடன் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஐந்து பேருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பொறுமதியான காசோலைகளும், மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு முச்சக்கரவண்டிகள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன. இந்தவைபம் ஞானம் அறக்கட்டளையின் அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று காரியாலயத்தில் நடைபெற்றது.

அத்துடன் சம்மாந்துறையில் க.பொ.த. சாதாரணத்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள தேவைப்பாடுள்ள மாணவர்களுக்கான கணிதம் மற்றும் ஆங்கிலப்பாடங்களுக்கு விசேட வகுப்புகள் என்பனவும் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் மல்வத்தை மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிறுவுனரும் லைக்கா மொபைல் நிறுவனத்தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு வடக்குகிழக்கு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

பயன் பெற்ற பயனாளிகள் அனைவரும் லைக்காமொபைல் நிறுவனத்தின் தலைவர் திரு.சுபாஸ்கரன் அல்லிராஜாவை வாழ்த்தி தங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

lyca 7

lyca 7

lyca 7

lyca 7

மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்

 

காரைதீவு கோட்டமட்ட மெய்வலுனர் போட்டிகளின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்

காரைதீவு கோட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வலுனர் விளையாட்டுப் போட்டிகள் இன்றும் இரண்டாவது நாளாக நடைபெற்றது. அந்தவகையில் சில மெய்வலுனர் போட்டி நிகழ்வுகள் காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற போதான படங்களை காணலாம்.
(படங்கள்-பிரசன்னா)

koodammm 34

koodammm 34

koodammm 34

மேலும்படங்களுக்கு இங்கே அழுத்தவும்

காரைதீவு சக்தி சமூக முன்னேற்ற சங்கத்தின் 14வது ஆண்டு நிறைவு தின விழா
ரைதீவு சக்தி சமூக முன்னேற்ற சங்கத்தின் 14வது ஆண்டு நிறைவு தின விழா காரைதீவு ஆறாம் பிரிவு பல்தேவைக் கட்டிட மண்டபத்தில்  இடம்பெற்றது.
 
சக்தி சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கண்ணப்பன் சண்முகம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் வை.கோபிகாந்த் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
 
இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரீ.கலையரசனின் பிரத்தியேக செயலாளர் எஸ்.புவிராஜ்,காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.பாஸ்கரன், கிராம சேவக உத்தியோகத்தர்களான செல்வி. வி. சுபாஜினி, ஜெயசுந்தரம், சக்தி சமூக முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் ரீ.கோபிநாத் உள்ளிட்ட சங்கத்தின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
இதன்போது பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பாலர் பாடசாலைக்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. 
 
மேலும் சங்கத்திற்கான நிரந்தரக் காரியாலயத்தினை நிர்மாணித்துத் தருமாறு கோரி சங்க பிரதிநிதிகளினால் காரைதீவு பிரதேச சபை தவிசாளரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.

shakthi 1

shakthi 1

shakthi 1

shakthi 1

More Articles...

 1. காரைதீவு கோட்டமட்ட மெய்வலுனர் போட்டிகளின் முதலாம் நாள் நிகழ்வுகள்
 2. விறுவிறுப்பாக இடம்பெற்ற காரைதீவு கோட்டமட்ட கிரிகட்போட்டி
 3. சிறப்பாக இடம்பெற்ற KSC பிரிமியர் லீக் போட்டிகள்
 4. காரைதீவு பற்றி தொலைகாட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் பாகம்-01
 5. ஜொலிகிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் புலமையாளர் கௌரவிப்பு விழா
 6. சில தினங்களாக கடலில் அதிமாக பிடிபடும் நெத்தலி மீன்கள்
 7. ஜேர்மன் நம்பிக்கை ஒளி ஸ்தாபனத்தின் முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்
 8. காரைதீவுக்கு விஜயம் செய்த சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன்அலி !!!
 9. பல்கலைக்கழகமாணவர் சமூகசேவைஒன்றியத்jpd; தரம் 5 புலமைப்பரிசில் பயிற்சிவகுப்புக்கள்
 10. விபுலாநந்தாவின் இல்லவிளையாட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள்(இணைப்பு-03)
 11. விபுலாநந்தாவின் இல்லவிளையாட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள்(இணைப்பு-02)
 12. வெகுசிறப்பாக இடம்பெற்ற விபுலாநந்தாவின் இல்லவிளையாட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள்
 13. KUGAன் தரம் 5 மாணவர்களுக்கான இலவச வகுப்புக்கள்
 14. இறுதிநாள் நிகழ்வுகளுக்கு சுறுசுறுப்போடு தயாராகும் இல்லங்கள் !!!
 15. விபுலாநந்தாவின் மெய்வலுனர் போட்டிகளின் மூன்றாம் நாள் நிகழ்வுகள்
 16. காரைதீவு-மாவடிப்பள்ளி சின்னப்பால அபிவிருத்தி வேலைகள் ஆரம்பம்
 17. விபுலாநந்தாவின் மெய்வலுனர் போட்டிகளின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்
 18. நந்தவன சித்திவிநாயகர் ஆலயத்தில் சிவராத்திரிவிரத கலைநிகழ்வுகள்
 19. அறநெறி பாடசாலை ஆசிரியா்களுக்கான ஒன்று கூடல் நிகழ்வு
 20. காரைதீவு பிரதேச முன்பள்ளி ஆசிரியர் ஒன்றியத்தின் ஆரம்ப கலந்துரையாடல் கூட்டம்