korg top cover

korg top cover mob

Vipulanandar

 • "வித்தகராம் விபுலானந்தர்" - திருவுருவச்சிலை திறப்பு விழா ஆக்கம்

  h

   

  கற்றோரும் மிக்கோரும் வாழும் கவின் பெறு ஊரின்
  வயலும் வயல்சூழ், வாழை கமுகும், மந்தை மேய்த்து
  மதியம் படரும் மருத நிலத்தின், மத்திய இடத்தின்
  காரால் கவிபெறு காரைதீவில் கற்புக்கரசி கண்ணகி பெயரால்
  ஊரே சிறந்துவிளங்க சாமித்தம்பிகரம் பிடித்த கண்ணம்மை
  தம்பதிகளுக்கோர் பிறந்தசேயே மயங்காமதி மயில்வாகனப்பேர்
  விளங்கும் விபுலானந்தரானாரே.

  கண்ணகையே கண்மணியே கற்பரசே கற்பகமே
  மண்ணுலகில் வாழ்வழிக்கும் வடிவழகே வல்லரசே
  விண்ணுலகம் வியப்புறு வித்ததகனாய் விபுலானந்த
  அண்ணல் தம்சீருரைக்க அம்மா அருள் தருவாய்.

  கல்வித்துறையாம் கல்முனையில் ஆங்கிலத்தை
  ஆரம்பித்துவரு நாளில் சாருமிசைச் சம்பத்திரியார்
  கல்லூரி தனிலே சீர்மிகுந்த விஞ்ஞான சிறப்பாசானாய்
  விளங்கி, மாநகராம் மட்டுநகர் புனித மைக்கலில் சிலகாலம்
  உயர்தொழில் ஆசிரியப்பணியாற்றி….

  திருவிளங்கத்தார் வேண்டுகோள் செவியேற்று……
  இந்துக்கல்லூரி அதிபராய்….
  கேண்மையோடு சங்க நூல்கள் கற்றுணர்ந்து
  தமிழ்வளர்ந்த சங்கமதில் தனியாக எண்தமிழில்
  பலகலையும் வாய்த்திட்ட முதல் தமிழ் பண்டிதராய்ச் சிறந்துவரு
  நன்நாளில் தமிழ் வளர்த்த சங்கமதில்
  புத்தியில் வித்தகனாய் பொலிவு பொங்க..

  சித்தாந்த நூல்களோடு தமிழில் மேவும் பன்மொழி அறிவால்
  பரந்தபார்வையும் தேடலும் வந்துதிக்க……..
  சீரான பண்டைத்தமிழ் இலக்கியத்தை, இலக்கணத்தை
  தென்கோவைக் கந்தையா பிள்ளையிடம்

  இலங்கவைக்கும் நாடறிந்த நன்நூலும்
  நிலத்தறிந்த நித்தியமாம் சூடாமணி நிகண்டும் தந்து
  இசைத்தமிழ் ஆய்வு பலவருடகாலத்தில்...….
  வந்ததே பொக்கிஷம் “யாழ்நூல்” வடிவில்

  நீர்க்குமிழி… நிலையிலா வாழ்க்கையென உணர்ந்துவருநாளில்
  சித்திரா பௌர்ணமியில்……..
  மேதக்க பி.எஸ்.சி பட்டங்கள் பதராக சார்வுற்றார்
  சுவாமி சென்னையில் காவியுடைநாயகனாய் தூய்மைசேர்
  துறவியாய்…..உலகே போற்ற உயர்வானார்..உயர்வானார்
  வித்தகர் விபுலானநத்தர்.

  ஆக்கம்: திரு.த.நடேசலிங்கம் - பிரதி அதிபர்,
  திருவுருவச்சிலைதிறப்பு விழாக்குழு சார்பாக

  குறிப்பு:- விபுலானந்த சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ள மாபெரும்  திருவுருவச்சிலை திறப்பு விழா (21.04.2016) நிகழ்வையொட்டிஇக்கவிதை பிரசுரிக்கப்படுகிறது.

 • 69வருடங்களின் பின் சுவாமி விபுலானந்தருக்கு மீண்டும் காரைதீவில் திருவுருவச்சிலை திறப்புவிழா!

  லை திறப்புவிழாவையொட்டிய சிறுகட்டுரை! 21.04.2016,

  vipu pre 17 copy

  69வருடங்களின் பின் இன்று சுவாமி விபுலானந்தருக்கு  மீண்டும் காரைதீவில் திருவுருவச்சிலை திறப்புவிழா!
   
  உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாருக்கு இன்று அவர்பிறந்த காரைதீவு மண்ணில் திருவுருவச்சிலை திறந்துவைக்கப்படுகிறது.
  அடிகளார் இவ்வவனியில் பிறந்து 124வருடங்களாகின்றன. அவர் பிறந்தது 1892.03.27 இல்.
  20ஆம் நூற்றாண்டின் ஈடிணையற்ற பேரறிஞர் சுவாமி விபுலாநந்த அடிகளார் ஆவார்.
  அவரது எல்லையற்ற மேதாவிலாசம் காரணமாக உலகின் பல பாகங்களிலும் அவருக்கு சிலை எழுப்பப்பட்டிருக்கின்றன. அவர் பெயரில் பல பாடசாலைகள் பல அமைப்புகள் இயங்கிவருகின்றன.அவருக்காக பல நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பல ஆய்வரங்குகள் நடாத்தப்பட்டிருக்கின்றன.
  அவர் சிவபதமடைந்தது 1947இல். அதன்பிறகு அவருக்கு பரவலாக திருவுருவச்சிலைகள் எழுப்பப்பட்டிருக்கின்றன.
  காரைதீவில்...
  அடிகளார் பிறந்தது கிழக்கிலங்கையின் பழம்பெரும் காரைதீவு மண்ணில் என்பது பலரும் அறிந்ததே.
  அந்த மண்ணில் அவர் சிவபதமடைந்து 22வருடங்களின் பின்னர் அதாவது 1969இல் பிரதானவீதியிலுள்ள விபுலாநந்த பொது நூலகத்தின் முன்றலில் சுவாமியின் திருவுருவச்சிலை டாக்டர் மா.பரசுராமன் தலைமையில் நிறுவப்பட்டது.
  இந்தியாவிலிருந்து வருகைதந்த தவத்திரு குன்றக்குடி அடிகளாரால் அச்சிலை 08.10.1969இல் திறந்துவைக்கப்பட்டது.அப்போது எழுத்தாளர் மா.சற்குணம் எம்.ஏ. தொகுத்த 'அடிகளார் படிவமலர்' எனும் சிலைதிறப்புவிழாமலர் வெளியிட்டுவைக்கப்பட்டது.
  அச்சிலை 1990 இனக்கலவரத்தின்போது சில விசமிகளால் சுக்குநூறாக உடைத்தெறியப்பட்டது.
  அதன்பின்பு 1999 இல் சுவாமி பிறந்த வீட்டிற்கு அருகில் அதாவது மணிமண்டப சூழலில் மற்றுமொரு அழகான சிலை வெ.ஜெயநாதன் தலைமையில்; நிருமாணிக்கப்பட்டது.
  அதனை இராமகிருஸ்ணமிசனின் இலங்கைக்கான அப்போதைய தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஆத்மகனானந்த மஹராஜ் 26.06.199இல் திறந்துவைத்தார். அத்தருணம் எழுத்தாளர் வி.ரி.சகாதேவராஜா எம்.எட். தொகுத்த 'அடிகளார் நினைவாலய மலர் 'எனும் சிலைதிறப்புவிழா மலர் வெளியிட்டுவைக்கப்பட்டது.
  இவ்விருசிலைகளையும் பழம்பெரும் சிற்பி மட்டக்களப்பு புல்லுமலை நல்லரெத்தினம் அவர்களே செய்திருந்தார்கள்.
  இன்று சித்ராபௌர்ணமியன்று..
  அடிகளார் சிவபதமடைந்து 69வருடங்களின் பின்னர் இன்று காரைதீவின் பிரதான முற்சந்தியில் அதாவது விபுலாநந்த சதுக்கத்தில் அழகான திருவுருவச்சிலை திறந்துவைக்கப்படுகிறது.
  இச்சிலையை இன்று காலை 10.30மணியளவில்  இந்துமத அலுவலல்கள் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு  அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திறந்துவைக்கவுள்ளார்.
  ஆன்மீக அதிதிகளாக இராமகிருஸ்ணமிசன் மட்டு.பொறுப்பாளர் சுவாமி பிரபுபிரேமானந்தா அம்பாறை பௌத்த விகாரையின் விகாராதிபதி வண.ரந்தின்திரிய ஆகியோர் கலந்துகொள்வார்கள்.
  முதன்மை அதிதியாக அம்பாறை மாவட்ட த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் கௌரவ அதிதிகளாக இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி இரா.இராதாகிருஸ்ணன் ஜீ இலங்கை இந்துசம்மேளனத்தலைவர் என்.அருண்காந் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
  விசேட அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரட்ணம் த.கலையரசன் மு.இராஜேஸ்வரன் ஆகியோருடன் சிறப்பதிதிகள் நட்சத்திரஅதிதிகள் எனப்பலரும் கலந்துகொள்வார்கள்.
  சுவாமியின் சிறப்புகள்.
  சுவாமி விபுலாநந்த அடிகளார் இலங்கையின் முதலாவது மதுரைத்த தமிழ்ச்சங்கப்பண்டிதராவார். அதேவேளை உலகின் முதலாவது தமிழ்ப்பேராசிரியராவார். இத்தகைய சிறப்புகள் யாருக்கும் கிடைக்கவில்லை.
  உலகில் ஆசிரியராக அதிபராக பேராசிரியராக எழுத்தாளராக திறனாய்வாளராக கலைஞராக கவிஞராக மேடைப்பேச்சாளராக  மொழிபெயர்ப்பாளராக பத்திரிகையாசிரியராக பல நடிபங்குகளை வகித்தவர்.
  இ.கி.மிசனின் 26 பாடசாலைகளுக்கு முகாமையாளராகவிருந்து பரிபாலனம் செய்ததோடு சிவானந்த வித்தியாலயம் போன்ற பாடசாலைகளை ஸ்தாபித்தவர். வண்ணார்பண்ணையிலும் கல்லடியிலும் காரைதீவிலும் சிறுவர் இல்லங்களை ஸ்தாபித்து குடபுலவியனார் கூறிடும் அன்னதானத்தினையும் பாரதியார் கூறிடும் வித்தியாதானத்தினையும் ஒருங்கே அளித்தவர்.
   
   
   சுவாமியின் பிறப்பில் இனியாவது தெளிவு காண்போம்!
  ஓர் ஆண்டு சித்திரையில் தொடங்கி அடுத்த பங்குனியில் நிறைவடைகிறது. நடைமுறையிலுள்ள மன்மத வருடம் பங்குனி 31ஆம் திகதி அதாவது 13.04.2016 முன்னிரவோடு நிறைவுக்கு வர புதிய தமிழ்ஆண்டான துர்முகி வருடம் பிறந்திருக்கின்றது. 
  அகிலம் போற்றும் முத்தமிழ்வித்தகர்  சுவாமி விபுலானந்தர் பிறந்த கரவருடம் பங்குனித்திங்கள் 16ஆம் நாளுக்கு நேரொத்த ஆங்கிலத்திகதி 27.03.1892 என கணிப்பிடப்படுகிறது. சுவாமியின் தந்தையாhர் பிந்திபதிவுவைத்த காரணத்தினால் பெற்ற பிறப்பத்தாட்சிப்பத்திரத்தை வைத்துக்கொண்டு சிலர் சுவாமி 5ஆம் மாதம் 03ஆம் திகதி பிறந்ததாக கூறுவதை முற்றாக மறுக்கின்றேன். 
  ஏனெனில் தமிழ்சித்திரைப்புத்தாண்டு பிறப்பது சித்திரை மாதம் 1ஆம் திகதி அதாவது ஏப்ரல் 14ஆம் திகதி. அப்படி 5ஆம் மாதம் எனின் கரவருடத்தில் சுவாமி பிறக்கவில்லை.மாறாக நந்தன வருடத்தில் பிறந்திருக்கவேண்டுமே. எந்த ஒரு இடத்திலும் சுவாமி பிறந்தது கரவருடத்திற்குப்பதிலாக நந்தன வருடம் என்று குறிப்பிட்டிருக்கவில்லை.
  எனவே சுவாமி பிறந்தது 27.03.1892இல்தான் என்பது நிருபணமாகிறது. 1892இல்தான் இரகுநாதையர் வாக்கியப்பஞ்சாங்கம் முதன்முதலில் அச்சில்வெளிவந்தது. அதில் சுவாமியின் பிறந்த திகதிக்கு விடைகாணமுடியும். அதன்பிரதி என்னிடமுள்ளது.
  எனவே இனியாவது தமிழ்கூறு நல்லுலகம் சுவாமியின் பிறந்த திகதி விடயத்தில் ஒற்றுமை காப்போம்.
  இலங்கை எதிர்பார்க்கும்  தேசியநல்லிணக்கம்!   
  இலங்கையில் கல்விமுறைமை எப்படி அமையவேண்டும்? இனநல்லிணக்கம் தேசியநல்லிணக்கம் எவ்வாறு அமையவேண்டும்? என்பதை இற்றைக்கு 100வருடங்களுக்கு முன்பே ஓரு தீர்க்கதரிசி சொல்லியிருந்தார்.
  அவர்தான் அகிலம் போற்றும் உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகன் சுவாமி விபுலாநந்த அடிகளார். ஆம் உண்மையில் அவர்  ஒரு தீர்க்கதரிசி.
  அவர் அன்று சொன்னது:
  ' பலமொழிக்கல்வி தேசிய ஒருமைப்பாட்டையும் நாட்டினுள்ளும் நாடுகளிடையேயும் ஜக்கியத்தையும் உறுதிப்படுத்துகின்றது. சர்வதேச நல்லுறவையும் நன்முறையில் விருத்திசெய்வதற்குப் பல மொழிகளை ஆண்களும் பெண்களும் கற்றல் வேண்டும்' என்றார்.
  பலதரப்பட்ட பாசைகளைக் கற்பதனால் அறிவு விசாலிக்கும் என்றுகூறிய அவர் 
  பாடசாலைகளில் கணிதம் விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கு அப்பால் தொழிற்கல்வியையும் வழங்குவதே விரிவுக்கல்வியாகும். நல்லதிடகாத்திரமான உடல்நிலை உவப்பான உளவளர்ச்சி பன்பனவும் கட்டாயமானது என 1941இல் கூறினார்.
  அதனால்தான் 1970களில் ஜேவிபி புட்சி அதனைத்தொடர்ந்து பிரதமர் ஸ்ரீமாவோ அம்மையார் இலங்கைமக்களை நாட்டுப்பற்றுடைய மக்களாக மாற்றவேண்டுமெனின் புதிய கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டுமென்றெண்ணி க.பொ.த. சா.த பரிட்சை நிறுத்தப்பட்டு பதிலாக தேசிய கல்விச்சான்றிதழ் எனும் புதிய பரிட்சை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
  முக்கிய பாடங்களுடன் தொழிற்கல்வியும் உடற்கல்வியும் கவின்கலைகளும் கட்டாயபாடமாக்கப்பட்டன.  இம்மாற்றம்  முழுக்கமுழுக்க விபுலானந்த அடிகளாரின் கல்விச்சிந்தனையில் எழுந்ததே என்பதை யாரும் மறக்கமுடியாது.
  விரிவுக்கல்வியில் பெரிதும் நாட்டமுள்ள தாகூர் காந்தி பிறந்த நாட்டினில் இன்னும் விரிவுக்கல்வி நடைமுறையில் இல்லையென்பது இவ்வண் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
  அப்படி இனங்கள் ஒன்றாக நல்லிணக்கத்துடனும் இனசௌயன்யத்துடனிருக்கவேண்டும் என்பதை அன்றே சிந்தித்தவர் சுவாமிகள். சிங்களமும் இஸ்லாமும் அறபும் சமஸ்கிருதமும் அவர் தோற்றுவித்த கல்லடி சிவானந்தாவில் கற்பிக்க ஏற்பாடுசெய்தவர். காத்தான்குடி முஸ்லிம்மாணவர்களும் பயிலவேண்டுமென்பதற்காக அவர் சிவானந்தாவை கல்லடியில் அமைத்தார்.
  சுவாமியின் சிலைதிறப்புவிழா சிறப்பாகஅமைய இறைவனைப்பிரார்த்திப்போமாக
  விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா (M.Ed.)  A.D.E..
  காரைதீவு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்ற முன்னாள் தலைவர்.
 • KSC இன் சுவாமி விபுலாந்தர் அவர்களின் 124 ஜனன தின சைவமும் தமிழும் போட்டிகள் !

  காரைதீவு விளையாட்டுகழகமானது வருடாந்தம் நடாத்தும் சைவமும் விபுலாந்தர் அவர்களின் ஜனன தின தமிழும் நிகழ்வின் ஓரங்கமான கட்டுரைப்போட்டிகள் அண்மையில் கழக தலைவர் திரு.வெ.அருட்குமரன் தலைமையில் விபுலாநந்த மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. காரைதீவு பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு 4 வயது பிரிவு அடிப்படையில் இவ் கட்டுரைபோட்டியானது இடம்பெற்றது.

  சைவமும் தமிழும் நிகழ்வின் நிகழ்வான விவாதப் போட்டி மற்றும் அனைத்துபோட்டிகளுக்குமான பரிசளிப்பு நிகழ்வும் ஞாயிறன்று சுவாமி விபுலாந்தர் அவர்களின் 124 ஜனன தினமன்று கழக தலைமையகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  ksc essay 1

  ksc essay 1

  ksc essay 1

  ksc essay 1

  ksc essay 1

  ksc essay 1

  ksc essay 1

  ksc essay 1

  ksc essay 1

  ksc essay 1

  ksc essay 1

  ksc essay 1

 • அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் விபுலனின் திருவுருவச் சிலை திறப்பு விழா......

  அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் சுவாமி விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தின் வெள்ளி விழாவும் சுவாமி விபுலானந்தரின் திருவுருவச் சிலை திறப்பு விழாவும் 19.08. 2017 அன்று மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

  akp vipu 17

  akp vipu 17

  akp vipu 17

  akp vipu 17

  akp vipu 17

  akp vipu 17

  akp vipu 17

  akp vipu 17

  akp vipu 17

  akp vipu 17

  akp vipu 17

  akp vipu 17

  akp vipu 17

  akp vipu 17

  akp vipu 17

  akp vipu 17

  akp vipu 17

  akp vipu 17

  akp vipu 17

 • அழைப்புப் பட்டய குழுவினரின் மட்டக்களப்பு நோக்கிய நடைப் பயணம் ஆரம்பம் !!!

  காரைதீவு விபுலானந்த சதுக்கத்தில் அமையப்பெறவுள்ள முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் சிலை திறப்பு விழாவுக்கான அழைப்புப்பட்டயத்தினை கல்லடியில் அமைந்துள்ள ராமகிருஷ்ண மிசன் சுவாமிகளுக்கு கால்நடையாக சென்று வழங்கும் முகமாக எமது மண்ணின் சைவ மைந்தர்களின் குழுவானது, காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்திலிலருந்து காலை 03. 30 மணியளவில் புறப்பட்டது

  vipwalk 3

  vipwalk 3

  vipwalk 3

  vipwalk 3

   மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்

   

  காணொளிக்கு இங்கே அழுத்தவும்

   

 • அழைப்புப் பட்டய குழுவினர் ,வாகனப்பேரணியின் மட்டக்களப்பு நோக்கிய நடைப் பயணம் வீடியோ

  காரைதீவு விபுலானந்த சதுக்கத்தில் அமையப்பெறவுள்ள முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் சிலை திறப்பு விழாவுக்கான அழைப்புப்பட்டயத்தினை கல்லடியில் அமைந்துள்ள ராமகிருஷ்ண மிசன் சுவாமிகளுக்கு கால்நடையாக சென்று வழங்கும் முகமாக எமது மண்ணின் சைவ மைந்தர்களின் குழுவானது, காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்திலிலருந்து காலை 03. 30 மணியளவில் புறப்பட்டது. காரைதீவிலிருந்து மதியம் 1.30 அளவில் புறப்பட்டடு மட்டக்களப்பில் அழைப்பு பட்டய குழுவினரோடு இணைந்தனர். இதன் போதான காணொளிகள்....

  thetativu 67

  அழைப்புப் பட்டய குழுவினரின் மட்டக்களப்பு நோக்கிய நடைப் பயணம்

   
  அழைப்புப் பட்டய குழுவினரின் மட்டக்களப்பு நோக்கிய நடைப் பயணம்

  காரைதீவு விபுலானந்த சதுக்கத்தில் அமையப்பெறவுள்ள முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் சிலை திறப்பு விழாவுக்கான அழைப்புப்பட்டய குழுவினர் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்திலிலருந்து காலை 03. 30 மணியளவில் புறப்பட்ட போதான காணொளி.....

  Posted by Karaitivu WebTeam on Sunday, April 3, 2016

  Click here for link

  மரபு பட்டைய அழைப்பிற்கான வாகன ரத பவனி கல்லடி நோக்கி தற்போது ஆரம்பம்...

   

  மரபு பட்டைய அழைப்பிற்கான வாகன ரத பவனி கல்லடி நோக்கி தற்போது ஆரம்பம்...#Vipulanandar#Karaitivu#Korg

  Posted by Karaitivu WebTeam on Sunday, April 3, 2016

  Click here for link

  காத்தான்கூடி நகரினூடாக விபுலாந்தர் சிலை திறப்புவிழா மரபு பட்டைய அழைப்பு ஊர்வலம்..

   

  காத்தான்கூடி நகரினூடாக விபுலாந்தர் சிலை திறப்புவிழா மரபு பட்டைய அழைப்பு ஊர்வலம்..

  Posted by Karaitivu WebTeam on Sunday, April 3, 2016

  நடைபவனியும் வாகண பேரணியும் இணைவு....

   
  நடைபவனியும் வாகண பேரணியும் இணைவு....

  நடைபவனியும் வாகண பேரணியும் இணைவு....

  Posted by Karaitivu WebTeam on Sunday, April 3, 2016

  Click here for link

   

   

 • காரைதீவின் பொது இடங்கள் பாடசாலைகளுக்கு சுவாமியின் திருவுருவப்படம் வழங்கும் நிகழ்வு....


  இன்று 27.03.2017 சுவாமி விபுலாநந்தரின் 125வது ஜனனதினத்தைமுன்னிட்டு காரைதீவு விபுலாநந்த பணிமன்றம் ஏற்பாடு செய்த நிகழ்வுகளின் மூன்றாம் கட்ட நிகழ்வான காரைதீவின் பொது இடங்களுக்கு சுவாமியின் திருவுருவப்படத்தை வழங்கிவைக்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.
  படங்கள்:கிந்துஜன்,ஜெனிக்ஷன்

  pub pad val 24

  pub pad val 24

  pub pad val 24

  pub pad val 24

  pub pad val 24 pub pad val 66

  pub pad val 66

  pub pad val 66

  pub pad val 66

  மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்.

   

 • காரைதீவில் சுவாமி விபுலாநந்தஅடிகளாரது ரதபவனி!

  உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாந்த அடிகளாரது அழகுநிறை திருவுருவச்சிலை அவர்பிறந்த காரைதீவில் எதிர்வரும் சித்ராபௌர்ணமியன்று பாரம்பரியரீதியில் திறந்துவைக்கப்படவுள்ளதையொட்டிய சுவாமிணின் ரதபவனி நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. காரைதீவு விளையாட்டுக்கழக விபுலானந்த சனசமுக நிலையமுன்றலில் ரதபவனிக்கான ஆரம்பவிழா இடம்பெற்றது. பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேசசெயலாளர் சிவ .ஜெகராஜன் உரையாற்றி ரதபவனியை ஆரம்பித்து வைத்ததுடன் ரதபவனியானது காரைதீவின் தேரோடும் வீதிவழியாக சென்று கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் சிறப்பாக நிறைவுபெற்றது.

  மேலும் இந்நிகழ்வுக்கு ஆத்மீக அதிதிகள் முதன்மை அதிதிகள் கௌரவ அதிதிகள் விசேட அதிதிகள் சிறப்பு அதிதிகள் நட்சத்திர அதிதிகள் மற்றும் காரைதீவு விளையாட்டு கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

  vip ksc 12

  vip ksc 12

  vip ksc 12

  vip ksc 12

  vip ksc 12

  vip ksc 12

  vip ksc 12

  vip ksc 12

  vip ksc 12

  12994444 1233546416658578 2783533279026158544 n

  மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்

 • காரைதீவில் சுவாமி விபுலாநந்தரின் 125வது ஜனனதின நிகழ்வுக்கான அழைப்பிதழ்.....

  vipu thumb

  vipu 125 invi 1

  vipu 125 invi 1

  vipu 125 invi 1

  vipu 125 invi 1

 • காரைதீவில் சுவாமி விபுலானந்தரின் 70வது சிரார்த்த தின நிகழ்வுகள்.....

  முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்தரின் 70வது சிரார்த்ததின நிகழ்வுகள் சுவாமி பிறந்த இடமாகிய காரைதீவில் அமையப்பெற்றுள்ள விபுலாந்த ஞாபகார்த்த நினைவாலயத்தில் இன்று 19.07.2017 இடம்பெற்றது. இங்கு ஆராதனைகள் சுவாமியின் உருவச்சிலைக்கு பூமாலை அணிவித்தல் இ புஸ்பாஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. சிறப்பாக இடம்பெற்ற சிரார்த்ததின நிகழ்வுகளை காரைதீவு விபுலாந்த ஞாபகார்த்த பணிமன்றத்தினர்இ காரைதீவு இந்து சமய விருத்தி சங்கத்தினர் ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தனர். காரைதீவு மண்ணில் பிறந்து உலகம் போற்றும் உத்தமத்துறவியாய் காரைதீவுக்கு முகவரியாய் விளங்கிய சுவாமியின் சிரார்த்ததின நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.

  vipu sirartham 4

  vipu sirartham 4

  vipu sirartham 4

  vipu sirartham 4

  vipu sirartham 4

  vipu sirartham 4

  vipu sirartham 4

  மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்.

 • காரைதீவில் மற்றுமோர் வரலாற்றுப்பதிவு: சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலை திறப்பு விழா (இணைப்பு - 02)

  உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாருக்கு சித்ராபௌர்ணமி தினமான  வியாழக்கிழமை அவர்பிறந்த காரைதீவு மண்ணில் விபுலானந்த சதுக்கத்தில் 'அரோகரா' கோசம் முழங்க உணர்வுபூர்வமாக திருவுருவச்சிலை திறந்துவைக்கப்பட்டது..
  அடிகளார் சிவபதமடைந்து 69வருடங்களின் பின்னர்  காரைதீவின் பிரதான முச்சந்தியில் அதாவது விபுலாநந்த சதுக்கத்தில் நிருமாணிக்கப்பட்ட அழகான திருவுருவச்சிலையை காலை 10.30மணியளவில் இந்துமத அலுவல்கள் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திறந்துவைத்தார். சுவாமியின் வெள்ளைநிற மல்லிகையோ.. என்ற பாடலும் இசைக்கப்பட்டது.
  முன்னதாக காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனாலத்திலும் அரசடிப்பிள்ளையார் ஆலயத்திலும் விசேட சிறப்புப்பூஜைகள் இடம்பெற்றன. அவற்றிலும் அமைச்சர் சுவாமிநாதன் உள்ளிட்ட அனைத்து அதிதிகளும் கலந்துகொண்டனர். ஆன்மீக அதிதிகளாக இராமகிருஸ்ணமிசன் மட்டு.பொறுப்பாளர் சுவாமி பிரபு பிரேமானந்தர் ஆசியுரை வழங்கினார்.
  முதன்மை அதிதியாக அம்பாறை மாவட்ட த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் கௌரவ அதிதியாக இலங்கை இந்துசம்மேளனத்தலைவர் என்.அருண்காந் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்.
  விசேட அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரட்ணம் த.கலையரசன் மு.இராஜேஸ்வரன் ஆகியோருடன் சிறப்பதிதிகள் நட்சத்திரஅதிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.விஸ்வப்பிரம்மஸ்ரீ காந்தன்குருக்கள் பாமாலை பாடினார்கள். இதனைவிட சுவாமிகளின் அபிமானிகள் பலர் கலந்துகொண்டார்கள்.
  சுவாமியின் வாழ்க்கை சிறுகுறிப்பு பற்றிய  சங்கப்பலகை திறந்துவைக்கப்பட்டது. இது விபுலானந்தசதுக்கத்திலமைந்துள்ள காரைதீவு பிரதேசசபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

  Vipulananda statue opening 2 157

  Vipulananda statue opening 2 157

  Vipulananda statue opening 2 157

  Vipulananda statue opening 2 157

  Vipulananda statue opening 2 157

  Vipulananda statue opening 2 157

  Vipulananda statue opening 2 157

  Vipulananda statue opening 2 157

  Vipulananda statue opening 2 157

  Vipulananda statue opening 2 157

  Vipulananda statue opening 2 157

  Vipulananda statue opening 2 157

  Vipulananda statue opening 2 157

  Vipulananda statue opening 2 157

  Vipulananda statue opening 2 157

  Vipulananda statue opening 2 157

  மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்

 • காரைதீவில் மற்றுமோர் வரலாற்றுப்பதிவு: சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலை திறப்பு விழா இணைப்பு - 01

  vipulanandar statute open 1 1

  vipulanandar statute open 1 1

  vipulanandar statute open 1 1

  vipulanandar statute open 1 1

  vipulanandar statute open 1 1

  மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்

 • காரைதீவில் வித்தகர் விபுலானந்தரின் ஆய்வரங்கு

  உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் அவர்களின் திருவுருவச் சிலை திறப்புவிழா தொடர்பான நிகழ்வுகளில் ஒன்றான விபுலரின் ஆய்வரங்கில் பேராசிரியர் எஸ்.இளங்குமரன், கலாநிதி.எஸ்.கணேசராஜா,கலாநிதி எஸ். சுதர்சன் மற்றும் கலாநிதி.எஸ்.அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

  aaivaranku 1

  aaivaranku 1

  aaivaranku 1

  aaivaranku 1

  aaivaranku 1

  aaivaranku 1

  aaivaranku 1

  மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்

 • காரைதீவில் விபுலானந்தரின் திருவுருவச்சிலை திறப்புவிழா வரவு-செலவு முழு விபரம் உள்ளே !!!

  அகிலம் போற்றும் மாபெரும் துறவி ஈழத்தை தட்டி எழுப்பிய பாவேந்தன் காரைதீவின் தவப்புதல்வன் முத்தமிழ் வித்தகர் ஸ்ரீமத் சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலை இலங்கையின் எங்கும் இல்லாதவாறு மிக பிரமாண்டமான 12 அடி உயரமுள்ள தத்துருவமான உருவச்சிலையை காரைதீவு விபுலாநந்த சதுக்கத்தில் (காரைதீவு முச்சந்தியில்) பிரதிஸ்டை செய்யும் நிகழ்வு கடந்த 20.12.2014 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் அழகுநிறை திருவுருவச்சிலை கடந்த சித்ரா பௌர்ணமி 21.04.2016 வியாழக்கிழமை காரைதீவில் கோலாகலமாகத் திறந்துவைக்கப்பட்டது.

  13055287 583457015154956 3605485348447146574 n

  vipu pre 17 copy

  காரைதீவு விபுலானந்தர் சதுக்கத்தில் முத்தமிழ் வித்தகர் ஸ்ரீமத் சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலைஅமைப்பதற்கு பயனை எதிர்பாராது உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் நிதி உதவியளித்த உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  விபுலானந்த அடிகளாரின் திருவுருவச் சிலை பிரதிஸ்டை முதல் கடந்த 18.02.2016 அன்றுவரை நடைபெற்று முடிந்த வேலைத்திட்டத்திற்கான வரவு செலவு அறிக்கை

  accccoVipu Accounts 2

  கடந்த 19.02.2016 அன்று முதல் வித்தகரின் திருவுருவச் சிலை திறப்புவிழா வரையான வேலைகளின் வரவு செலவு அறிக்கை.

  vipulnadar works 1

  vipulnadar works 1

  vipulnadar works 1

  vipulnadar works 1

  vipulnadar works 1

  'உள்ளக்கமலமடிஉத்தமனார் வேண்டுவது''
  சுவாமிவிபுலானந்தர்

  கௌரவசெயலாளர்
  ( 0779309257 )
  K.ஜெயராஜி 

  கௌரவபொருளாளர்
  (0778772786) 
  S.சிவராஜா

   

 • சித்திரா பௌர்ணமியன்று விபுலாந்த சதுக்கத்தில் பிரமாண்ட திருவுருவச்சிலை திறப்புவிழா !

  சித்திரா பௌர்ணமியன்று விபுலாந்த சதுக்கத்தில் பிரமாண்ட திருவுருவச்சிலை திறப்புவிழா !

  Invition 1 copy

  Invition 1

  Invition 1

 • சிலை திறப்பு விழாவிற்காக தயாராகிக்கொண்டிருக்கும் விபுலானந்தர்....

  ஸ்ரீமத் சுவாமி விபுலாந்த அடிகளின் சிலை திறப்புவிழா எதிர்வரும் 21-04-2016 அன்று இடம்பெவுள்ளத அதற்கான வேலைகள் மமுடிவுறும் தருவாயில் உள்ளன. இதன் போதான காணொளிகள் மற்றும் படங்கள்....

  சிலை திறப்பு விழாவிற்காக தயாராகிக்கொண்டிருக்கும் விபலானந்தர்

  சிலை திறப்பு விழாவிற்காக தயாராகிக்கொண்டிருக்கும் விபலானந்தர்....

  Posted by Karaitivu WebTeam on Tuesday, April 12, 2016

  Video link

  vipu 1

  vipu 1

  vipu 1

  vipu 1

  vipu 1

  vipu 1

  vipu 1

  vipu 1

  vipu 1

  vipu 1

 • சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த இல்லத்தின் புணர்நிர்மானத்துக்காக நிதி கையளிப்பு.....

  உலகின் முதல் தழிழ் பேராசிரியர் முத்தழிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரது பிறப்பின் 125வது ஆண்டு நிறைவையொட்டிய சுவாமி விபுலாநந்தர் மாநாடு-2017 நிகழ்வுகள் 05.10.2017, 06.10.2017 07,10.2017ஆம் திகதிகளில் மூன்று நாட்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் இராஜதுரை அரங்கில் இன்றைய தினத்திலிருந்து ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக பெற்று வருகின்றது. இன் நிகழ்வில் சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த காரைதீவு மண்ணிலுள்ள இல்லத்தின் புணர்நிர்மானத்துக்காக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஒரு தொகை நிதி சிறைச்சாலை மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் மற்றும் காரைதீவு சுவாமி விபுலாநந்த ஞாபகாத்த பணிமன்றத்திடமும் கையளிக்கப்பட்டது.

  nithi kaiyalippu 4

  nithi kaiyalippu 4

  nithi kaiyalippu 4

  nithi kaiyalippu 4

  nithi kaiyalippu 4

  nithi kaiyalippu 4

  nithi kaiyalippu 4

  nithi kaiyalippu 4

  nithi kaiyalippu 4

  nithi kaiyalippu 4

  nithi kaiyalippu 4

  nithi kaiyalippu 4

  nithi kaiyalippu 4

 • சுவாமி விபுலாநந்தரது பிறப்பின் 125 ஆண்டு நிறைவையொட்டிய சுவாமி விபுலாநந்தர் மாநாடு – 2017....

  LOGO

  சுவாமி விபுலாநந்தரது பிறப்பின் 125 ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்துமத அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பன கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்து சுவாமி விபுலாநந்தர் மாநாடு ஒன்றினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05, 06 , 07 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் மிக விமரிசையாக நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  இம்மாநாடு சுவாமி விபுலானந்தரின் அறிவு, ஆற்றல்களையும் அவரது பணிகளையும் அவற்றால் தமிழ்கூறு நல்லுலகம் எய்திய பயன்களையும் எடுத்துரைப்பனவாக அமையும். அருளாளர்களும் அறிஞர்களும் சமூகப்பிரமுகர்களும் கலந்து கொண்டு ஆற்றும் உரைகள் கலைஞர்களும் மாணவர்களும் வழங்கும் கலைநிகழ்ச்சிகள், நூல் வெளியீடு, நூற்கண் காட்சி, அறிஞர்கெளரவிப்பு, சுவாமி விபுலாநந்தர் வரலாற்று அறிவுப்போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு, கலாசார ஊர்வலம் என்று பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாக அமையும்.

  விழாவின் முதல்நாளான ஒக்டோபர் 05 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு கல்லடியில் உள்ள சுவாமி விபுலாநந்தரது சமாதியிலிருந்து சுவாமி விபுலானந்தரின் திரு உருவப்படம் சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் வரை எடுத்து வரப்பட்டு நிகழ்வுகள் இராஜதுரை அரங்கில் ஆரம்பமாகவுள்ளன.

  விழாவில் கலந்து கொள்ளும் அருளாளர்கள்

  மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இவ்விழாவினை சிறப்பிக்குமுகமாக கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சர்வரூபானந்தா மஹராஜ், மட்டக்களப்பு காயத்திரி பீடம் சிவயோகச் செல்வர் சாம்பசிவ சிவாச்சாரியார், தென் கைலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் ஆகியோர் வருகை தந்து அருளுரை வழங்கவுள்ளனர்.

  விழாவில் கலந்து கொள்ளும் அரசியல் பிரமுகர்கள்
  மாண்புமிகு இரா.சம்பந்தன் ( எதிர்க்கட்சித் தலைவர்), மாண்புமிகு டி. எம். சுவாமிநாதன் (அமைச்சர் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு), வே. இராதாகிருஷ்ணன் (கல்வி இராஜாங்க அமைச்சர்), மாண்புமிகு செல்லையா இராஜதுரை (முன்னாள் பிரதேச அபிவிருத்தி இந்து கலாச்சார அமைச்சர்) கெளரவ பிரின்ஸ் குணராசா காசிநாதர் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு மாவட்டம்} ஆகிய அரசியல் பிரமுகர்கள் பிரதம அதிதிகளாககலந்து சிறப்பிக்கவுள்ளனர். கெளரவ.க.துரைரட்ணசிங்கம் (பாராளுமன்ற உறுப்பினர், திருகோணமலை மாவட்டம்) கௌரவ சீனித்தம்பி யோகேஸ்வரன் (பாராளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு மாவட்டம்) கௌரவ ஞானமுத்து ஸ்ரீநேசன் (பாராளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு மாவட்டம்) கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன் (பாராளுமன்ற உறுப்பினர், அம்பாறை மாவட்டம்) ஆகிய அரசியல் பிரமுகர்களும் சிறப்பு அதிதிகளாககலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

  விழாவில் கலந்து கொள்ளும் பிரமுகர்கள் மற்றும் அறிஞர்கள்

  எந்திரி.பொ.சுரேஷ் (செயலாளர் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு) திருமதி. சாந்தி நாவுக்கரசன் (செயலாளர், புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சு) பேராசிரியர் சி. பத்மநாதன் (வேந்தர் யாழ். பல்கலைக்கழகம்) வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா (வேந்தர் ,கிழக்குப் பல்கலைக்கழகம்) ஆகியோர் உட்பட பேராசிரியர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், நிர்வாகிகள், விசேட அதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

  ஆய்வரங்க அமர்வுகள்

  மாநாட்டின் ஓர் அங்கமாக சுவாமி விபுலாநந்தரது யாழ் நூல், மதங்கசூளாமணி மற்றும் கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்பாக ஆய்வரங்க அமர்வுகள் இடம்பெறவுள்ளன இதில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் போன்றோரின் கருத்துரைகள் இடம்பெறவுள்ளன.

  கலை பண்பாட்டு நிகழ்வுகள்

  கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இசைத்துறை, நடனத் துறை மற்றும் நாடகத் துறையினர் வழங்கும் சிறப்பு கலை பண்பாட்டு நிகழ்வுககளும் அறநெறிப் பாடசாலை மாணவர்களது கலை நிகழ்வுகளும் மாநாட்டை அலங்கரிக்கவுள்ளது.

  நூல்கள் வெளியீடு

  சுவாமி விபுலாநந்தரின் எழுத்தாக்கப்பணிகளும் சேவைகளும் அளப்பரிய பணியினை தமிழ்கூறு நல்லுலகிற்கு வழங்கியுள்ளது. இம்மாநாட்டில் அவரது எழுத்தாக்கப்பணியினைப் போற்றும் வகையில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் சுவாமி விபுலாநந்தரது "யாழ் நூல்" , "மதங்க சூளாமணி" “சுவாமி விபுலாநந்தரது (தமிழ்) ஆக்கங்களின் தொகுப்பு” “சுவாமி விபுலாநந்தரது (ஆங்கில) ஆக்கங்களின் தொகுப்பு” என்பவற்றுடன் உடுவை.எஸ்.தில்லைநடரசா அவர்கள் தொகுத்த “தமிழிசைக்கு புத்துயிர் அளித்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார்” ஆகிய ஐந்து நூல்களின் வெளியீடும் இடம்பெறவுள்ளன.

  சுவாமி விபுலாநந்தர் நினைவு விருது மற்றும் விசேட பாராட்டுதல்கள் வழங்கும் நிகழ்வு

  இம்மாநாட்டில் சுவாமி விபுலாநந்தர்மேல் பூரண விசுவாசமுடையவராய் அவரதும் அவர் பற்றியனவுமான நூல்களைப் பதிப்பித்தல் அவரது பன்முகப்பட்ட பணிகள் தொடர்பாக ஆராய்ந்து அவற்றின் பெறுமானத்தை உலகறியச் செய்தல் முதலான பணிகளில் இடையறாது உழைத்தமைக்காக அமரர் இலக்கிய கலாநிதி வித்துவான்.சா.இ.காமலநாதன் அவர்களுக்கும், அமரர் திரு.வ.சிவசுப்பிரமணியம் அவர்களும் தமது தேகாந்த நிலையில் சுவாமி விபுலாநந்தர் நினைவு விருதைப் பெறுகிறார்கள். சுவாமி விபுலாநந்தரின் இலட்சியத்திற்கு அமைவாக ஆன் மிகப்பணிகளை ஆற்றி வருகின்றமைக்காக மட்டக்களப்பு காயத்திரி பீடத்தின் சிவயோகச் செல்வர் சாம்பசிவ சிவாச்சாரியார் அவர்கட்கும், சுவாமி விபுலாநந்தரின் பெருமைகளையும் பணிகளையும் உலகறியச் செய்யும் வகையில் அவர் பற்றிய ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்து வழங்கியமைக்காக புதுச்சேரி அரசு பட்டமேற்படிப்பு மையத்தின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கட்கும் சுவாமி விபுலாநந்தர் மாநாட்டினையொட்டிய விசேட பாராட்டுதல் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

  சுவாமி விபுலாநந்தர் வரலாற்று அறிவுப்போட்டியில் திறமையை வெளிக்காட்டிய மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு

  சுவாமி விபுலாநந்தர் மாநாட்டினையொட்டி கிழக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட சுவாமி விபுலாநந்தர் வரலாற்று அறிவுப்போட்டியில் திறமையை வெளிக்காட்டிய மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது

 • சுவாமி விபுலாநந்தரது பிறப்பின் 125வது ஆண்டு நிறைவையொட்டிய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு.......

  இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் உலகின் முதல் தழிழ் பேராசிரியர் முத்தழிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரது பிறப்பின் 125வது ஆண்டு நிறைவையொட்டிய சுவாமி விபுலாநந்தர் மாநாடு-2017 நிகழ்வுகள் 05.10.2017, 06.10.2017 07,10.2017ஆம் திகதிகளில் மூன்று நாட்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் இராஜதுரை அரங்கில் மிகவும் சிறப்பாக இடம் பெறவுள்ளது.

  இதன் ஆரம்ப வைபவம் இன்றைய தினம் கோலாகலமாக கல்லடியில் உள்ள சுவாமி விபுலானந்தரது சமாதியிலிருந்து சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனம் வரை ஊர்வலத்துடன் ஆரம்பமானது.

  மாண்புமிகு செல்லையா இராஜதுரை முன்னாள் பிரதேச அபிவிருத்தி இந்து கலாச்சார அமைச்சர் முன்னிலையுடனும் எந்திரி.பொ.சுரேஷ் செயலாளர் சிறைச்சாலை மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு அவர்களின் தலைமையுடன் ஆரம்பமான நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாண்மிகு டி.எம்.சுவாமிநாதன் சிறைச்சாலை மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் கௌரவ அதிதியாக மாண்மிகு வே.இராதாகிருஷ்ணன் கல்வி இராஜாங்க அமைச்சர் சிறப்பு அதிதிகளாக கௌரவ சீனித்தம்பி யோகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு மாவட்டம், கௌரவ ஞானமுத்து ஸ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் அறநெறிப்பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

  இன் நிகழ்வில் கொழும்பு இராமகிருஷ்ண மிசன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சர்வரூபானந்தா மஹராஜ் அவர்களின் ஆசியுரை, கொளரவிப்புகள், சுவாமி விபுலாநந்தர் நினைவு விருது வழங்குதல், யாழ் நூல், மதங்க சுளாமணி நூல்களின் வெளியீடு அதிதிகளின் உரை மற்றும் சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் மாணவர்களின் நடன நிகழ்வுகளும் மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது.

  vipu 125 maaanadu 10

  vipu 125 maaanadu 10

  vipu 125 maaanadu 10

  vipu 125 maaanadu 10

  vipu 125 maaanadu 10

  vipu 125 maaanadu 10

  vipu 125 maaanadu 10

  vipu 125 maaanadu 10

  vipu 125 maaanadu 10

  vipu 125 maaanadu 10

  மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்.

 • சுவாமி விபுலானந்தரின் 69 ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு கல்லடியில் சமாதிக்கு மலரஞ்சலியும் ஊர்வலமும் !

  கல்லடி சிவானந்தா வித்தியாலய ஸ்தாபகரும் உலகின் முதல் தமிழ் பேராசிரியருமான முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 69 ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு ஊர்வலம் மற்றும் சமாதிக்கு மலரஞ்சலி நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்றன.

  மலரஞ்சலியின்போது கிழக்குப் பல்கலைக் கழக அழகியற் கற்கைகள் நிறுவன விரிவுரையாளர்களினால் ' வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ' எனும் பாடல் பாடப்பட்டது.

  சுவாமி விபுலானந்தர் சிவானந்தா நூற்றாண்டு விழாச் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லடி இராமகிருஷ்ணமிசன் தலைவர் சுவாமி பிரபு பிரபானந்தா மகராஜ் முதலில் சமாதிக்கு மலர் மற்றும் கற்பூர தீபமேற்றி அஞ்சலி செலுத்தினார்.

  சமாதியிலிருந்து ஆரம்பமான ஊர்வலம் மட்டக்களப்பு-கல்முனை வீதி வளியாக அனுமார் வீதி, பழைய கல்முனை வீதி ஊடாக கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று பாடசாலையைச் சென்றடைந்தது.

  நூற்றாண்டு சபையின் தலைவர் கே. பாஸ்கரன், செயலாளர் ச. ஜெயராஜா, சிவானந்த வித்தியாலய அதிபர் கே. மனோஜ்ராஜ், விவேகானந்தா மகளிர் வித்தியாலய அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  batti vipuu 1

  batti vipuu 1

  batti vipuu 1

  batti vipuu 1

  batti vipuu 1

  batti vipuu 1

  batti vipuu 1

  batti vipuu 1