korg top cover

korg top cover mob

vipu125

  • காரைதீவின் பொது இடங்கள் பாடசாலைகளுக்கு சுவாமியின் திருவுருவப்படம் வழங்கும் நிகழ்வு....


    இன்று 27.03.2017 சுவாமி விபுலாநந்தரின் 125வது ஜனனதினத்தைமுன்னிட்டு காரைதீவு விபுலாநந்த பணிமன்றம் ஏற்பாடு செய்த நிகழ்வுகளின் மூன்றாம் கட்ட நிகழ்வான காரைதீவின் பொது இடங்களுக்கு சுவாமியின் திருவுருவப்படத்தை வழங்கிவைக்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.
    படங்கள்:கிந்துஜன்,ஜெனிக்ஷன்

    pub pad val 24

    pub pad val 24

    pub pad val 24

    pub pad val 24

    pub pad val 24 pub pad val 66

    pub pad val 66

    pub pad val 66

    pub pad val 66

    மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்.

     

  • சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த இல்லத்தின் புணர்நிர்மானத்துக்காக நிதி கையளிப்பு.....

    உலகின் முதல் தழிழ் பேராசிரியர் முத்தழிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரது பிறப்பின் 125வது ஆண்டு நிறைவையொட்டிய சுவாமி விபுலாநந்தர் மாநாடு-2017 நிகழ்வுகள் 05.10.2017, 06.10.2017 07,10.2017ஆம் திகதிகளில் மூன்று நாட்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் இராஜதுரை அரங்கில் இன்றைய தினத்திலிருந்து ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக பெற்று வருகின்றது. இன் நிகழ்வில் சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த காரைதீவு மண்ணிலுள்ள இல்லத்தின் புணர்நிர்மானத்துக்காக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஒரு தொகை நிதி சிறைச்சாலை மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் மற்றும் காரைதீவு சுவாமி விபுலாநந்த ஞாபகாத்த பணிமன்றத்திடமும் கையளிக்கப்பட்டது.

    nithi kaiyalippu 4

    nithi kaiyalippu 4

    nithi kaiyalippu 4

    nithi kaiyalippu 4

    nithi kaiyalippu 4

    nithi kaiyalippu 4

    nithi kaiyalippu 4

    nithi kaiyalippu 4

    nithi kaiyalippu 4

    nithi kaiyalippu 4

    nithi kaiyalippu 4

    nithi kaiyalippu 4

    nithi kaiyalippu 4

  • சுவாமி விபுலாநந்தரது பிறப்பின் 125 ஆண்டு நிறைவையொட்டிய சுவாமி விபுலாநந்தர் மாநாடு – 2017....

    LOGO

    சுவாமி விபுலாநந்தரது பிறப்பின் 125 ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்துமத அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பன கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்து சுவாமி விபுலாநந்தர் மாநாடு ஒன்றினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05, 06 , 07 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் மிக விமரிசையாக நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இம்மாநாடு சுவாமி விபுலானந்தரின் அறிவு, ஆற்றல்களையும் அவரது பணிகளையும் அவற்றால் தமிழ்கூறு நல்லுலகம் எய்திய பயன்களையும் எடுத்துரைப்பனவாக அமையும். அருளாளர்களும் அறிஞர்களும் சமூகப்பிரமுகர்களும் கலந்து கொண்டு ஆற்றும் உரைகள் கலைஞர்களும் மாணவர்களும் வழங்கும் கலைநிகழ்ச்சிகள், நூல் வெளியீடு, நூற்கண் காட்சி, அறிஞர்கெளரவிப்பு, சுவாமி விபுலாநந்தர் வரலாற்று அறிவுப்போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு, கலாசார ஊர்வலம் என்று பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாக அமையும்.

    விழாவின் முதல்நாளான ஒக்டோபர் 05 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு கல்லடியில் உள்ள சுவாமி விபுலாநந்தரது சமாதியிலிருந்து சுவாமி விபுலானந்தரின் திரு உருவப்படம் சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் வரை எடுத்து வரப்பட்டு நிகழ்வுகள் இராஜதுரை அரங்கில் ஆரம்பமாகவுள்ளன.

    விழாவில் கலந்து கொள்ளும் அருளாளர்கள்

    மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இவ்விழாவினை சிறப்பிக்குமுகமாக கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சர்வரூபானந்தா மஹராஜ், மட்டக்களப்பு காயத்திரி பீடம் சிவயோகச் செல்வர் சாம்பசிவ சிவாச்சாரியார், தென் கைலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் ஆகியோர் வருகை தந்து அருளுரை வழங்கவுள்ளனர்.

    விழாவில் கலந்து கொள்ளும் அரசியல் பிரமுகர்கள்
    மாண்புமிகு இரா.சம்பந்தன் ( எதிர்க்கட்சித் தலைவர்), மாண்புமிகு டி. எம். சுவாமிநாதன் (அமைச்சர் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு), வே. இராதாகிருஷ்ணன் (கல்வி இராஜாங்க அமைச்சர்), மாண்புமிகு செல்லையா இராஜதுரை (முன்னாள் பிரதேச அபிவிருத்தி இந்து கலாச்சார அமைச்சர்) கெளரவ பிரின்ஸ் குணராசா காசிநாதர் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு மாவட்டம்} ஆகிய அரசியல் பிரமுகர்கள் பிரதம அதிதிகளாககலந்து சிறப்பிக்கவுள்ளனர். கெளரவ.க.துரைரட்ணசிங்கம் (பாராளுமன்ற உறுப்பினர், திருகோணமலை மாவட்டம்) கௌரவ சீனித்தம்பி யோகேஸ்வரன் (பாராளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு மாவட்டம்) கௌரவ ஞானமுத்து ஸ்ரீநேசன் (பாராளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு மாவட்டம்) கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன் (பாராளுமன்ற உறுப்பினர், அம்பாறை மாவட்டம்) ஆகிய அரசியல் பிரமுகர்களும் சிறப்பு அதிதிகளாககலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

    விழாவில் கலந்து கொள்ளும் பிரமுகர்கள் மற்றும் அறிஞர்கள்

    எந்திரி.பொ.சுரேஷ் (செயலாளர் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு) திருமதி. சாந்தி நாவுக்கரசன் (செயலாளர், புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சு) பேராசிரியர் சி. பத்மநாதன் (வேந்தர் யாழ். பல்கலைக்கழகம்) வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா (வேந்தர் ,கிழக்குப் பல்கலைக்கழகம்) ஆகியோர் உட்பட பேராசிரியர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், நிர்வாகிகள், விசேட அதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

    ஆய்வரங்க அமர்வுகள்

    மாநாட்டின் ஓர் அங்கமாக சுவாமி விபுலாநந்தரது யாழ் நூல், மதங்கசூளாமணி மற்றும் கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்பாக ஆய்வரங்க அமர்வுகள் இடம்பெறவுள்ளன இதில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் போன்றோரின் கருத்துரைகள் இடம்பெறவுள்ளன.

    கலை பண்பாட்டு நிகழ்வுகள்

    கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இசைத்துறை, நடனத் துறை மற்றும் நாடகத் துறையினர் வழங்கும் சிறப்பு கலை பண்பாட்டு நிகழ்வுககளும் அறநெறிப் பாடசாலை மாணவர்களது கலை நிகழ்வுகளும் மாநாட்டை அலங்கரிக்கவுள்ளது.

    நூல்கள் வெளியீடு

    சுவாமி விபுலாநந்தரின் எழுத்தாக்கப்பணிகளும் சேவைகளும் அளப்பரிய பணியினை தமிழ்கூறு நல்லுலகிற்கு வழங்கியுள்ளது. இம்மாநாட்டில் அவரது எழுத்தாக்கப்பணியினைப் போற்றும் வகையில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் சுவாமி விபுலாநந்தரது "யாழ் நூல்" , "மதங்க சூளாமணி" “சுவாமி விபுலாநந்தரது (தமிழ்) ஆக்கங்களின் தொகுப்பு” “சுவாமி விபுலாநந்தரது (ஆங்கில) ஆக்கங்களின் தொகுப்பு” என்பவற்றுடன் உடுவை.எஸ்.தில்லைநடரசா அவர்கள் தொகுத்த “தமிழிசைக்கு புத்துயிர் அளித்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார்” ஆகிய ஐந்து நூல்களின் வெளியீடும் இடம்பெறவுள்ளன.

    சுவாமி விபுலாநந்தர் நினைவு விருது மற்றும் விசேட பாராட்டுதல்கள் வழங்கும் நிகழ்வு

    இம்மாநாட்டில் சுவாமி விபுலாநந்தர்மேல் பூரண விசுவாசமுடையவராய் அவரதும் அவர் பற்றியனவுமான நூல்களைப் பதிப்பித்தல் அவரது பன்முகப்பட்ட பணிகள் தொடர்பாக ஆராய்ந்து அவற்றின் பெறுமானத்தை உலகறியச் செய்தல் முதலான பணிகளில் இடையறாது உழைத்தமைக்காக அமரர் இலக்கிய கலாநிதி வித்துவான்.சா.இ.காமலநாதன் அவர்களுக்கும், அமரர் திரு.வ.சிவசுப்பிரமணியம் அவர்களும் தமது தேகாந்த நிலையில் சுவாமி விபுலாநந்தர் நினைவு விருதைப் பெறுகிறார்கள். சுவாமி விபுலாநந்தரின் இலட்சியத்திற்கு அமைவாக ஆன் மிகப்பணிகளை ஆற்றி வருகின்றமைக்காக மட்டக்களப்பு காயத்திரி பீடத்தின் சிவயோகச் செல்வர் சாம்பசிவ சிவாச்சாரியார் அவர்கட்கும், சுவாமி விபுலாநந்தரின் பெருமைகளையும் பணிகளையும் உலகறியச் செய்யும் வகையில் அவர் பற்றிய ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்து வழங்கியமைக்காக புதுச்சேரி அரசு பட்டமேற்படிப்பு மையத்தின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கட்கும் சுவாமி விபுலாநந்தர் மாநாட்டினையொட்டிய விசேட பாராட்டுதல் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

    சுவாமி விபுலாநந்தர் வரலாற்று அறிவுப்போட்டியில் திறமையை வெளிக்காட்டிய மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு

    சுவாமி விபுலாநந்தர் மாநாட்டினையொட்டி கிழக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட சுவாமி விபுலாநந்தர் வரலாற்று அறிவுப்போட்டியில் திறமையை வெளிக்காட்டிய மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது

  • சுவாமி விபுலாநந்தரது பிறப்பின் 125வது ஆண்டு நிறைவையொட்டிய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு.......

    இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் உலகின் முதல் தழிழ் பேராசிரியர் முத்தழிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரது பிறப்பின் 125வது ஆண்டு நிறைவையொட்டிய சுவாமி விபுலாநந்தர் மாநாடு-2017 நிகழ்வுகள் 05.10.2017, 06.10.2017 07,10.2017ஆம் திகதிகளில் மூன்று நாட்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் இராஜதுரை அரங்கில் மிகவும் சிறப்பாக இடம் பெறவுள்ளது.

    இதன் ஆரம்ப வைபவம் இன்றைய தினம் கோலாகலமாக கல்லடியில் உள்ள சுவாமி விபுலானந்தரது சமாதியிலிருந்து சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனம் வரை ஊர்வலத்துடன் ஆரம்பமானது.

    மாண்புமிகு செல்லையா இராஜதுரை முன்னாள் பிரதேச அபிவிருத்தி இந்து கலாச்சார அமைச்சர் முன்னிலையுடனும் எந்திரி.பொ.சுரேஷ் செயலாளர் சிறைச்சாலை மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு அவர்களின் தலைமையுடன் ஆரம்பமான நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாண்மிகு டி.எம்.சுவாமிநாதன் சிறைச்சாலை மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் கௌரவ அதிதியாக மாண்மிகு வே.இராதாகிருஷ்ணன் கல்வி இராஜாங்க அமைச்சர் சிறப்பு அதிதிகளாக கௌரவ சீனித்தம்பி யோகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு மாவட்டம், கௌரவ ஞானமுத்து ஸ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் அறநெறிப்பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

    இன் நிகழ்வில் கொழும்பு இராமகிருஷ்ண மிசன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சர்வரூபானந்தா மஹராஜ் அவர்களின் ஆசியுரை, கொளரவிப்புகள், சுவாமி விபுலாநந்தர் நினைவு விருது வழங்குதல், யாழ் நூல், மதங்க சுளாமணி நூல்களின் வெளியீடு அதிதிகளின் உரை மற்றும் சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் மாணவர்களின் நடன நிகழ்வுகளும் மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது.

    vipu 125 maaanadu 10

    vipu 125 maaanadu 10

    vipu 125 maaanadu 10

    vipu 125 maaanadu 10

    vipu 125 maaanadu 10

    vipu 125 maaanadu 10

    vipu 125 maaanadu 10

    vipu 125 maaanadu 10

    vipu 125 maaanadu 10

    vipu 125 maaanadu 10

    மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்.

  • சுவாமி விபுலானந்தர் எப்போது பிறந்தார்? ஆய்வுக்கட்டுரை..

    Layer 6

    அகிலம் போற்றும் உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் காரைதீவு மண்ணில் பிறந்து 125 வருடங்களாகின்றன.125 வருடங்களைக் கடந்த ஒரு பெருமகனின் பிறந்த நாளை துல்லியமாக அறியமுடியாத எமது வரலாற்று ஆய்வாளர்கள் எப்படி பல நூறு அல்லது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறுகளை அறிவார்கள்?இது உண்மையுள்ள ஆய்வாளர்களின் வினாவாகும். இதற்கு விடையளிப்பதே இதன் நோக்கமாகும். 

    சுவாமி விபுலானந்த அடிகளார் பற்றி இதுவரை வந்த நூற்றுக்கணக்கான நூல்களில் அவரது பிறப்பு பற்றி தமிழ் திகதி தொடர்பில் எந்தவொரு மாறுபாடான தகவலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.அதாவது சுவாமிகள் 1892 கர வருடம் பங்குனித்திங்கள் 16ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை உதயத்தில் பூரட்டாதி நட்சத்திரத் இந்த தமிழ் திகதிக்கான ஆங்கிலத்திகதியை பெறுவதில் பலர் தவறுவிட்டிருக்கின்றார்கள். இம்மண்ணிலிருந்து வெளிவந்த அடிகளார் படிவமலர் கூட தவறு விட்டிருக்கிறது. அதில் அடிகளார் 26,27,28,29ஆந் திகதிகளில் பிறந்ததாக வேறு கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் நான்கு தினங்களில் பிறக்க முடியுமா? இல்லை.

    சுவாமிகளின் நூற்றாண்டை ஒட்டி என்னால் தொகுக்கப்பட்ட 'அடிகளார் நினைவாலய மலரில் 'சரியான திகதி தொடர்ந்து பேணப்பட்டு வந்தமை இவ்வண் சுட்டிக்காட்டப்படுதல் பொருத்தமாகும்.

    இலங்கையில் முதன்முதல் வாக்கிய பஞ்சாங்கம் வெளிவந்த ஆண்டு 1892 ஆகும். யாழ்ப்பாணம் கொக்குவிலை சேர்ந்த சந். இரகுநாதையவர்களால் கணிக்கப்பட்டது. வாக்கிய பஞ்சாங்கம் அதுவரை கையnழுத்துப்பிரதியாகவே வெளிவந்துகொண்டிருந்தது.
    1892இல்தான் முதன்முதல் அப்பஞ்சாங்கம் அச்சில் வெளியிடப்பட்டது.அதே ஆண்டிலேதான் சுவாமி விபுலானந்தரும் பிறந்தார்.

    எனவே அந்த 1892 கர வருட பஞ்சாங்கத்தை பார்த்தால் பிறந்த நாள் (ஆங்கிலத்தில்) தெரிந்து கொள்ள முடியும். ஆனால் அதை பெறுவதென்பது முயற்கொம்பாக இருந்தது.
    ஆதலால் எனது இலக்கிய நண்பர் களுதாவளையைச்சேர்ந்த பிரபல வரலாற்றாய்வாளர் ஒய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர்; கலாபூசணம் திரு. ஆ.அரசரெத்தினம் அவர்களை தொடர்பு கொண்டு அப்பஞ்சாங்கத்தை பெறமுயற்சித்தேன்.அவரும் சுவாமி விபுலானந்தரின் நேரடி அபிமானி. வரலாற்றாய்வாளர் எவ்.எக்ஸ்.சி.நடராஜா அவர்களின் நேரடி சீடர். அவர் பலத்த பிரயத்தனத்தின் மத்தியில் அப்பஞ்சாங்கத்தை யாழ்ப்பாணத்தில் இருக்க கூடிய இலக்கிய ஆய்வாளர்களிடம் இருந்து பெற்றெடுத்து எனக்கும் பிரதியை அனுப்பி இருந்தார்.

    (இங்கு அதன் முதற் பிரதியின் முன்பக்கம் தரப்படுகிறது)

    அப் பஞ்சாங்கத்தில் தமிழ் திகதியாம் கர வருடம் 1892 பங்குனித்திங்கள் 16ஆந் திகதிக்குநேர்ஒத்த ஆங்கிலத்திகதியை பார்த்தோம்.
    அஃது 27.3.1893 என இருந்தது.
    அரபுத்திகதி ஷஃபான் 27 . ஆங்கிலத்திகதி; மார்ச் 27 . தமிழ்திகதி பங்குனி 16
    ஞாயிறுஇ திதி- சதுர்த்திஇ நட்சத்திரம் - பூரட்டாதிஇ யோகம் - சுப்ரம்இ கரணம் - விட் எனக்குறிப்பட்டுள்ளது.

    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    (இங்கு அதன் பிரதியும் தரப்படு;கிறது)

    இப்படியாக சுவாமியின் பிறந்த தினம் 1892.03.27 என வெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எந்த சர்ச்சையும் ஏற்பட நியாயம் இல்லை.

    சுவாமிகள் பிறந்த திகதியைக் குறிக்கும் தனித்தமிழ் எழுத்துக்களாலான பஞ்சாங்கத்தின் பிரதியையும் இங்கு தருகின்றேன். இலக்கங்களை தமிழ் எழுத்துக்களில் வாசிக்கத் தெரிந்த சான்றோருக்கு இது நன்கு புலப்படும் எனக் கருதுகிறேன்.


    பிறப்பு அத்தாட்சி பத்திரம்

    அந்த காலத்தில் பிறப்பு சான்றிதழுக்கு பதிவது என்பது பொதுவாக காலம் தாழ்த்தியே என்பது அனைவரும் அறிந்ததாகும்.

    இதற்கு சுவாமியின் தந்தையாரும் விதி விலக்கல்ல.
    காரணம் சுவாமி பிறந்து ஒரு சில தினத்தில் ஜனன ஜோதிடம் பார்க்க ஜோதிடரிடம் சென்ற போது தற்போது ஜாதகம் கணிக்க முடியாது என சூசகமாகக் கூறிவிட்டார் ஜோதிடர்.

    விதானையாரான சாமித்தம்பி அவர்கள் பிள்ளைக்கு தத்து (கண்டம்) இருப்பதனை ஊகித்தவராக பிள்ளைக்கு பெயரும் வைக்கவில்லை. இந் நாளில் பிள்ளைக்கு ஒருவித நோய் தொற்றிக்கொண்டது. ஜோதிடர் கூறிய விடயமும் நோயும் தந்தை சாமித்தம்பி விதானையாருக்கு மேலும் பீதியையும்இ அச்சத்தையும் ஏற்படுத்தியது. உடனே பிள்ளையை தூக்கிக் கொண்டு கதிர்காமத்திற்குச் சென்று அங்கு பிள்ளையை முருகனிடம் ஒப்படைத்து பிள்ளையைக் காப்பாற்று என அங்கேயே பெற்றோர் மண்டாடி விரதமிருந்தனர்.

    சில நாளில் பிள்ளையின் நோய் தீர்ந்தது. அந்த இடத்திலேயே பிள்ளைக்கு முருகனின் நாமமான 'மயில்வாகனன்' எனப் பெயரிட்டனர். இந்தத் தருணத்தில்தான் பெயரிடப்பட்டதென்பதை கவனத்தில் கொள்ளவும். முருகப் பெருமானின் வாகனமான மயில்வாகனம் என்று சிலர் இளமைப்பெயரைக்; குறிப்பிடுவது பொருத்தமில்லை என்பதையும் கவனத்தில் கொள்க.

    பின்பு பிள்ளையை ஊருக்குக் கொண்டுவந்தார்கள். ஜனன ஜோதிடம் பார்த்தார்கள். இவைகள் எல்லாம் இடம் பெற்று ஓரிரு மாதங்களின் பின்னர் தான் தந்தையார் பிறப்புக்காகப் பதிவு வைத்துள்ளார்.
    சுவாமியின் தந்தை ஒரு விதானையார்.அக்காலத்தில் கிராமத்தலைவர் என்றால் அது விதானையாகத்தானிருக்கும். அப்படிப்பட்ட அவருக்கு சுவாமி பிறந்த உடனே பதிவு வைக்கத் தெரியாதா? ஆனால் பிறந்தபின்பு ஏற்பட்ட நோயும் அதனோடிணைந்த காரணிகளும்தான் பிந்திய பதிவுக்குக் காரணம்.

    இவையனைத்தும் இன்றும் காரைதீவில் வாழும் உதிர உறவுகளால் கூறப்பட்டவை. அந்த பிறப்பத்தாட்சிப்பத்திரமே இன்று ஒரு சாராரின் பிறந்த நாள் விழாவிற்குக் காரணமாயிற்று என்பது துரதிஸ்டமே.

    தர்க்கநியாயம்

    அப்படி பிறப்புப் பத்திரத்தில் குறிக்கப்பட்டவாறு 1892.05.03 என எடுத்துக் கொண்டால் கர வருடம் பங்குனித் திங்கள் 16ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமையில் சுவாமி பிறக்கவில்லை என்று அர்த்தப்படுமே? அது சரியா?

    அது மட்டுமல்ல சாதாரணமாக ஒரு தமிழ் வருடம் ஏப்ரல் மாதம் 13இ14 தொடங்கி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 13இ14இல் முடிவடைவது தெரிந்ததே.
    உதாரணமாக இந்த வருடப்பிறப்பைப் பாருங்கள். கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி நள்ளிரவு வரை ' மன்மத வருடம்' எனும் தமிழ்வருடம் இருந்தது. ஏப்ரல் 14ஆம் திகதி புதிய தமிழ் வருடமாக 'துர்முகி வருடம் 'அமுலுக்கு வந்தது.
    இதேபோன்று அடுத்த வருடம் ஹேவிளம்பி எனும் புதிய வருடம் 14 ஏப்ரல் 2017இல் பிறக்கும்.

    எனின் தமிழுக்கு கர வருசத்தில் வரும் பங்குனித் திங்கள் 16ஆந் திகதி என்பது கர வருசத்திற்குரியது. பிறப்புப் பத்திரத்தின்படிவரும் ஆங்கிலத் திகதியான 1892.05.03 ஜப் பார்த்தால் அவரது பிறந்த தமிழ் திகதி அடுத்த வருடமான 'நந்தன' வருடமாக கொள்ளப்பட வேண்டுமே!. ஏனெனில் ஆங்கிலத்தில் 5ம் மாதம் என்பது தமிழுக்கு அடுத்த வருடமாகக் (நந்தன)கொள்ளப்படவேண்டும் என்பதனை யாரும் அறிவார்கள்.

    60 ஆண்டு கால வருடச்சுழற்சியில் 25ஆவது வருடமான கர வருடம் (1891 - 1892) 1892 ஏப்ரல் 17ஆந் திகதியுடன் முடிவடையஇ அதற்கடுத்த 26ஆவது வருடமான நந்தன வருடம் (1892 – 1893) 1893 ஏப்ரல் 14ஆந் திகதியுடன் முடிவடையும்.

    aaaivu katt 2

    aaaivu katt 2

    aaaivu katt 2

    aaaivu katt 2

    பிறப்புப்பத்திர 1892.05.03 ஆங்கிலத் திகதியின்படி பார்த்தால் சுவாமிகள் தமிழுக்கு நந்தன வருடம் சித்திரை மாதம் 22ஆந் திகதி பிறந்ததாக கருதப்படும். அது செவ்வாய்க்கிழமையில் ஏகாதசி திதியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்ததாக கொள்ளப்படும். இது சாத்தியமா?
    அப்படியெனின் இதற்கு முன்பு எழுதப்பட்ட சுவாமிகள் பற்றிய நூற்றுக்கணக்கான நூல்களில் இடப்பட்ட தமிழ்தேதி பிழையென கொள்ளப்படவேண்டும்.

    எந்தவொரு நூலிலும் சுவாமிகள் கர வருடத்தில் பிறந்ததாகவே சொல்லப்படுகின்றது. இன்னும் இன்றும் காரைதீவில் வாழும் உதிர உறவுகள சுவாமி கரவருடத்தில் பிறந்ததாகவே கூறுகின்றனர்.

    உதிரஉறவின் நேரடி தகவல்!
    சுவாமிகளது மருமகளார் கண்ணம்மாக்கா என எல்லோராலும் அழைக்கப்படும் திருமதி கோமேதகவல்லி செல்லத்துரை இன்றும் உயிரோடு இருக்கிறார். அவருக்குவயது 90. எனினும் கண்ணாடி போடாமல் வாசிக்கக்கூடியவர். பழையஞாபகங்களை மீட்டச்சொல்கிறார். அதுமட்டுமல்ல அவரிடமுள்ள ஆதாரங்களை வைத்தே அவர் சில உறுதியான உண்மைகளைச்சொல்கிறார்.
    அவரை அவரது வீட்டில் சுவாமியின்பிற்நதநாள் தொடர்பாக சந்தித்தபோது அறுதியாகவும் உறுதியாகவும் சிலவிடயங்களை அவரது பொக்குவாயால் ஆணித்தரமாகச்சொன்னார்.இதற்கான வீடியோவும் உண்டு.
    சுவாமி மூத்தவர்.அரண்டாவது சகோதரி அமிர்தவல்லி மூன்றாவது சகோதரி மரகதவல்லி. இவர்கள் மூவரும் காரைதீவில் அதுவும் வீட்டிலே பிறந்தவர்கள்.
    நான் மரகதவல்லியின் புதல்வி.
    சுவாமி பிறந்தது கரவருடம் பங்குனித்திங்கள் 16ஆம் திகதி அதாவது 1892 ஆண்டு மார்ச்மாதம் 27ஆம் திகதி ஆகும். இதற்கு எனது தாயார் பல கதைகளைச்சொல்லியிருக்கிறார். மார்ச்மாதம் பிறந்த காரணத்தினால் மேதாவிலாசம் பெற்றார் என்று.
    எனவே தமிழ்கூறுநல்லுலகம் அனைத்தும் இனிமேலாவது சுவாமியின் பிறந்த தினத்தை மார்ச் 27ஆம் திகதியே கொண்டாடுமாறு அன்போடு வேண்டிக்கொள்கின்றேன். என்றார்.

    இந்நிலையில் காலந்தாழ்த்தி வைக்கப்பட்ட பதிவின் அடிப்படையில் பெறப்பட்ட பிறந்த ஆங்கிலத் திகதியான 1892.05.03 சுவாமிகள் பிறந்த திகதியாக கொள்ளமுடியுமா? அத்தினத்தில் பிறந்த தின விழாவை நடாத்துவது பொருத்தமா? இல்லைவே இல்லை. இதனை மட்டுநகர் வாழ் சக சுவாமி அபிமானிகள் கவனத்திற்கொள்வார்கள் என நம்புகின்றேன்.

    சமாதியிலுள்ள திகதியை அழிக்கலாமே?

    சுவாமிகளின் சமாதி இன்றும் கல்லடியிலுள்ள சிவபுரி வளாகத்தில் உள்ளது. அந்தச்சமாதியில் வெள்ளைநிறமல்லிகையோ பாடலும் அத்தோடு சுவாமியின் பிறப்பு இறப்பு திகதிகளும் இடப்பட்டிருக்கின்றன.
    அதிலும் 27.03.1892 என இடப்பட்டிருக்கின்றது.
    அப்படியென்றால் அது பிழையா? 1947களில் இருந்தவர்கள் இந்த அறிவில்லாதவர்களா? சரி பிறப்புபதிவுமான் சரியென்றால் இந்தக்கல்லறைதகிதியையும் மாற்றிவ்டலாமே.

    சுவாமிகள் யாழ்ப்பாணமா?

    கரந்தைத்தமிழச்சங்கத்தினர் ஒருதடவை உலக அறிஞர்கள் அரங்கிற்கு தலைமைதாங்க சுவாமிகளை அழைத்திருந்தார்கள். அங்கு அவரைப்பாராட்டி கரந்தைத்தமிழச்சங்கத்தினர் ஒரு வாழ்த்துப்பத்திரத்தை சுவாமிகளுக்கு வழங்கியிருந்தனர்.
    அதில் சுவாமிகள் யாழ்ப்பாணம் காரைநகரைச்சேர்ந்தவர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
    அப்படியெனின் இந்தப்பதிவைப்பார்த்துவிட்டு சுவாமிகள் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்தவர் என்று கருதிவிடமுடியுமா? இதுவும் எழுத்தாவணம்தானே. அதுவும் அறிஞர்பெருமக்கள் நிறைந்த அவை.அவர்களால் வழங்கப்பட்டது.நிராகரிகக்முடியுமா? பிறப்பத்தாட்சிப்பத்திரத்தைப்போல் இதனையும் ஏற்றால் எமக்கு இந்த விழாக்கள் ஊர்வலங்கள் தேவையா? காரைதீவில் சுவாமி பிறந்த வீடு உதிரஉறவுகள் இன்னும் பலசான்றுகள். அவற்றையெல்லாம் அழித்துவிடமுடியுமா? அல்லது பிழையென்று சொல்லிவிடமுடியுமா?

    ஆக ஒரு பதிவை மாத்திரம் வைத்துக்கொண்டு அதனை இமாலயச்சாதனை என நினைத்துக்கொண்டு தான்பிடித்தமுயலுக்கு 3கால் எனும்போக்கில் அவர் மே மாத்தில்தான் பிறந்தார் என்று கூறுதல் பொருத்தமல்ல. மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டுவிழாச்சபை இதனை ஆராய்தல் பொருத்தமாகும். சுவாமிகள் உருவாக்கிய சிவானந்தாவை ஏன் இ.கி.மிசனைச்சேர்ந்தவர்கள் நிறைந்த கற்றறிந்தவர்கள் நிறைந்த அந்தச்சபையில் இவ்வாறான பிழையான எடுகோளுக்குப்பின்hல்; செல்வது நியாயமா?

    காரைதீவு மண்ணில் ஒரு நூற்றாண்டு காலத்துள் பிறந்து புகழ்பெற்ற ஒரு மகானின் பிறந்த நாளை அங்கு அவரோடுபிறந்த அவரது உதிரஉறவுகள் கல்விமான்கள் அவரது அபிமானிகள் ஊர்ப்பிறந்தவர்கள் கூறுவதற்கு போதுமான அருகதையுடையவர்கள். இவற்றைவிட விட பிறப்பத்தாட்சிப்பத்திரம் ஒரு வலிதான ஆதாரமா?


    முடிவுரை

    சுவாமிகள் 1892 கர வருடம் பங்குனித்திங்கள் 16ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை உதயத்தில் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை

    இந்த தமிழ் திகதிக்கான ஆங்கிலத்திகதியை உரிய பஞ்சாங்கத்தில் பார்க்குமிடத்து அது 27.03.1892 என வருகின்றது. அதாவது இந்த தமிழ்த்தேதிக்குரிய நேரொத்த ஆங்கிலத்திகதி27.03.1892 ஆகும் என்பதை கவனத்திற்கொள்ளவேண்டும்.

    எனவே. மட்டக்களப்பிலிருக்கக்கூடிய ஒருசில சுவாமி அபிமானிகள் சுவாமியின் பிறந்த தினத்தை மே மாதத்தில் தொடர்ந்து கொண்;டாடுவதென்பது அவரைக் கேலிசெய்வதாக கொச்சைப்படுத்துவதாக உள்ளது.
    இனிமேலாவது சுவாமிகளது பிறந்த தினத்தில் தேவையற்ற விவாதங்களை விடுத்து அவரது பெயரில் பல அமைப்புகள் வீணே காலத்தைக் கடத்துவதைத் தவிர்த்து தமிழ் கூறுநல்லுலகம் சுவாமிகள் பற்றிய மேலும் பல ஆராய்ச்சிகளை செய்தல் பொருத்தமாகும்.

    விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா(ADE,JP)

    முன்னாள் தலைவர் - சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றம்               

    இந்து சமய விருத்திச் சங்கம் காரைதீவு

    aaaivu katt 2

  • சுவாமியின் இல்லத்தில் இடம்பெற்ற விபுலாநந்தரின் கால்கோள் விழா.......

    சுவாமி விபுலாநந்தரின் 125வது ஜனனதினத்தை முன்னிட்டு விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றத்தின் ஏற்பாட்டில் இன்று 27.03.2017 சுவாமியின் இல்லத்தில் காரைதீவின் பாடசாலை மாணவர்கள் சூழ நந்திக் கொடி ஏற்றி துறவற கீதம் இசைக்கப்பட்டு அன்னாரது இல்லத்தில் விஷேட பூஜையும் , விபுலாநந்தா பணிமன்றத்தில் உள்ள அன்னாரின் சிலைக்கு மாலை அணிவித்தலுடன், புஷ்பாஞ்சலி நிகழ்வும் அன்னாரது ஞாபகார்த்தமாக அதிதிகளுக்கு சுவாமியின் படம் வழங்கிவைக்கப்பட்டு, இந்த வருட நிகழ்வுக்கான பட்டய அழைப்பிதழ் வாசிக்கப்பட்டது. பின்னர் சுவாமியின் வீடு அமையப்பெற்ற வீதிக்கான பெயர் பலகை திறந்துவைக்கப்பட்டது. இதில் அம்பாரைமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காரைதீவு,திருக்கோவில் மற்றும் ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

    படங்கள்: ஜெனிக்ஷன், கிந்துஜன்

    1st kattam janna 98

    1st kattam janna 98

    1st kattam janna 98

    1st kattam janna 98

    1st kattam janna 98

    1st kattam janna 98

    1st kattam janna 98

    1st kattam janna 98

    1st kattam janna 98

    1st kattam janna 98

    1st kattam janna 98

    1st kattam janna 98

    மேலதிக படங்களுக்கு இங்கேஅழுத்தவும்.

  • மட்டுநகரில் இடம்பெறும் விபுலனின் கால்கோள்விழா ஊர்வலம்......

    vipu 125 batti 8

    vipu 125 batti 8

    vipu 125 batti 8

    vipu 125 batti 8

    vipu 125 batti 8

    vipu 125 batti 8

    vipu 125 batti 8

    vipu 125 batti 8

    vipu 125 batti 8

    vipu 125 batti 8

    vipu 125 batti 8

    vipu 125 batti 8

    vipu 125 batti 8

  • முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் ஆவணப்பட வெளியீடு....

    உலகெலாம் பரந்துவாழும் தமிழினத்தின் பெருமைக்கு அடையாளமாய் விளங்கும் காரைதீவு மண்ணின் வித்து முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் பெருமைகளை வெளிப்படுத்தும் ஆவணப்பட வெளியீடானது அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு உற்சவ நல்லையா உடையார் குடும்பத்தினரின் 7ம் திவிருவிழா நடைபெறும் 2017.07.20ம் திகதியன்று பி.ப. 6.30 மணியளவில் விநாயகர் அரங்கில் நடைபெறவுள்ளது. திரு. பாபு வசந்தகுமார் (கனடா) அவர்களின் தயாரிப்பிலும் திரு. பூபாலரட்ணம் சீவகன் அவர்களின் மேற்பார்வையின்கீழும் திரு. ரகுலன் சீவகன் அவர்களின் இயக்கதில் இவ்வரலாற்றுப் படைப்பானது விபுலானந்தர் பற்றி நாம் அறிந்திராத பல்வேறு தகவல்களை உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

    இன்றைய தினம் திரு. பாபு வசந்தகுமார் (கனடா), திரு.திருமதி சீவகன் ஆகியோர் சுவாமியின் பிறந்த இல்லத்திற்கு நேரில் சமூகமளித்தபோது காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றம், காரைதீவு இந்துசமய விருத்திச் சங்கம் ஆகிய அமைப்புககளின் உறுப்பினர்கள் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் அனைத்து காரைதீவுவாழ் மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆவணப்பட வெளியீட்டாளர்கள் அன்புடன் அழைப்பதாகத் தெரிவித்தனர்.

    avna vipu 2

    avna vipu 1

  • விபுலனின் 125வது பிறந்தநாள் விழா நிகழ்வுகள் கனடாவில்......

    cah vipu

  • விபுலாநந்த சதுக்கத்தில் அமையப்பெற்ற சிலைக்கு புஷ்பாஞ்சலி நிகழ்வு........

    சுவாமி விபுலாநந்தரின் 125வது ஜனனதினத்தை முன்னிட்டு விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றத்தின் ஏற்பாட்டில் 2ம் கட்ட நிகழ்வாக இன்று 27.03.2017 காரைதீவின் விபுலாந்த சதுக்கத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்று அமையப்பெற்ற மாபெரும் சிலைக்கு மாலை அணிவித்தலும், புஷ்பாஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.


    படங்கள்:கிந்துஜன்,ஜெனிக்ஷன்

    2aam kata 33

    2aam kata 33

    2aam kata 33

    2aam kata 33

    2aam kata 33

    2aam kata 33

    2aam kata 33

    2aam kata 33

    2aam kata 33

    மேலதிக படங்களுக்கு இங்கேஅழுத்தவும்.

  • விபுலாநந்தரின் ஆவணப்பட முன்னோட்டக் காணொளி........

    ssss

  • விபுலாநந்தா மற்றும் பெண்கள் பாடசாலையின் ஜனனதின ஊர்வலம்.....

    சுவாமி விபுலாநந்தரின் 125வது ஜனனதினத்தை முன்னிட்டு காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரி மற்றும் காரைதீவு இ.கி.மி பெண்கள் பாடசாலை மாணவர்களால் சுவாமியின் இல்லத்தை நோக்கிய ரதபவனி ஊர்வலம் மிகச்சிறப்பாக இன்று 27.03.2017 இடம்பெற்றது.

    vipu girls uurvala 33

    vipu girls uurvala 33

    vipu girls uurvala 33

    vipu girls uurvala 33

    vipu girls uurvala 33

    மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்.