korg top cover

korg top cover mob

SLEAS

  • SLEAS நேர்முக பரிட்சைக்கு காரைதீவை சேர்ந்த மூவர் தெரிவு.....

    அண்மையில் இடம்பெற்ற SLEAS Class III பரிட்சைகளின் முடிவுகள் இன்று வெளியாகியது. இவ் முடிவுகளின் அடிப்படையில் நேர்முகப் பரீட்சைக்கு காரைதீவை சேர்ந்த மூவர் தெரிவாகியுள்ளனர். இதன் அடிப்படையில்திரு.பார்தீபன் ஆறுமுகம், திரு.சஞ்சீவன் ஆனந்தகுமாரசுவாமி, திருமதி.தேவதர்ஷிகா, அமீர்தானந்தன், ஆகியோர் தெரிவாகி எமது மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    காரைதீவில் இருந்து தெரிவான எம்மவர் மூவருக்கும் எமது இணையக்குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

    sleas

  • எமது மண்ணின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள்.......

    அகில இலங்கை சேவைகளில் ஒன்றான இலங்கை கல்வி நிர்வாக சேவையின் ( SLEAS) மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட எமது மண்ணின் மைந்தர்களான அ.சஞ்சீவன் (கணிதம்) மற்றும் ஆ.பார்த்தீபன் (தகவல் தொழில்நுட்பம்) ஆகியோருக்கு எமது சமூகம் சார்பான வாழ்த்துக்கள்.

    sleas

  • கணக்காய்வாளர்கள் சேவைக்கு காரைதீவிலிருந்து இருவருக்கு நியமனம் !

    இலங்கை கணக்காய்வு சேவை தரம் 2 ற்கு கடந்தவருடம் நடாத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் காரைதீவில் திரு.எஸ்.திருபிரகாசம், திரு.எஸ்.ஜெயகோபன் ஆகிய இருவரும் நியமனம் பெற்றுள்ளனர்.


    இவர்கள் இவருக்கும் எமது இணையக்குழு சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம்.

    odit 1

    odit 1

    odit 1

  • கணக்காய்வாளர்கள் சேவைக்கு போட்டிப்பரீட்சையிலிருந்து 321பேர் தெரிவு

    கணக்காய்வாளர்கள் சேவைக்கு போட்டிப்பரீட்சையிலிருந்து 321பேர் தெரிவு:
    சிங்களவர் 278 :தமிழர் 41 :முஸ்லிம் 02 :விரைவில் நியமனம்!
    (காரைதீவு நிருபர்)
     
    இலங்கை கணக்காய்வு சேவை தரம் 2 ற்கு கடந்தவருடம் நடாத்தப்பட்ட திறந்த போட்டிப்பரீட்சையின் அடிப்படையில் 321பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார அறிவித்துள்ளார்.
    பரீட்சைக்குத் தோற்றியோரில் 415புள்ளிகளுக்கு மேல் பெற்றுத் தெரிவான  321 பரீட்சார்த்திகளின் பெயர்விபரங்கள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
    அவர்களுள் 278பேர் 41பேர் தமிழர்களாகவும் சிங்களவராகவும் 02பேர் முஸ்லிம்களாகவும் திறமையடிப்படையில் தெரிவாகியுள்ளனர்.
    வரலாற்றில் சிறுபாண்மையினம் கூடுதலாகத் தெரிவானமை இதுவே முதற்றவையாகும். இதற்கு முன்பு 2009 இல் தெரிவானோரில் ஆக 06 பேரே தமிழராவார்.1998 இல் தெரிவான கணக்காய்வாளர்களுள் 28பேரே தமிழராவார் என்பது குறிப்பிடத்தக்கது.
    அதிகூடிய 511புள்ளிகளைப்பெற்று 1வது நிலையில் கே.ஜெயசேகரவும் இறுதிப்புள்ளியான 415 புள்ளிகளைப்பெற்று 313வது நிலையில் எஸ்.ஜெயகோபனும் தெரிவாகியுள்ளனர். 
    தெரிவான 43சிறுபான்மையினரின் விபரம்!
    கடந்தவருடம் இடம்பெற்ற போட்டிப்பரீட்சையில் 415 புள்ளிகளுக்கு மேல் புள்ளிபெற்றுத் தெரிவான 321பேரில் சிறுபான்மையினர் 43பேரின் விபரம் இங்கு தரப்படுகின்றது.
    எஸ்.கஸ்தூரி-(485புள்ளி -யாழ்ப்பாணம் நல்லூர்) பி.பிரதீபன் (483புள்ளி-கிளிநொச்சி) கே.புலேந்திரன்(475புள்ளி-திருமலை) ரி.டெசிகா(யாழ்.சங்கானை) எஸ்.எச்.சபீக்(474புள்ளி) கே. பிரியதர்சினி(471-சாவகச்சேரி)என்.பிரதாப்(471-மட்டக்களப்பு) கே.தர்மிலா(470- நல்லூர்) வி.ஹானிதா(468-அளவெட்டி)கே.மயுரன்(462- கிளிநொச்சி)எஸ்.தினேசன்(456-யாழ்நகர்) எ.ஆதவன்(455-யாழ்ப்பாணம்) ரி.தர்சனா(455-சுன்னாகம்) எஸ்.அனுசியா9455- முள்ளியவளை)எம்.நிசாந்தன்(448-அம்பாறை) ரி.றசிதா(447-கிளிநொச்சி)ரி.நவநீதன்(446-மட்டக்களப்பு) எஸ்.விஜிதா(444- கொக்குவில்) ரி.நிருபன்(444-அல்வாய்)ரி.பார்த்தீபன்-443-கரவெட்டி)வி.அனோஜன்(442- நேரியகுளம்) கே.நிவேகா(441-யாழ்ப்பாணம்) எஸ.;ஹரிகரன்(441-கொக்குவில்) எஸ்.திருபிரகாசம்(440- காரைதீவு) வி.கஜந்தன்(440-அல்வாய்) வி.சுபாசன்(440-பருத்தித்துறை) பி.விமல்ராஜ்(440-மன்னார்) ஆர்.கிரிகரன்(439- பருத்துத்துறை) கே.கலையரசி(438- அச்சுவேலி) ஆப்.பிரதீபன்(436-வவுனியா) கே.சுகந்தராஜ்(434-கொழும்பு)எஸ்.சிவகரன்(433-திருமலை) எஸ்.துஸ்யந்தன்(432-கல்முனை) சி.சதீஸ்ராஜா(430- கல்லடி) கே.மயுரன்(428-திருமலை) ஆர்;.தனருபன்(427-பருத்துத்துறை)ர்P.ரதிகரமூர்த்தி(426-அக்கரைப்பற்று) என்.பர்மிளா(426-தெல்லிப்பளை)வி.குகேந்திரன்(423-கைதடி) பி.நிருசன்( 422-நல்லூர்) பி.சேகுராஜ்(421-அக்கரைப்பற்று)  எம்.எஸ்.எம்.இப்திகார்(421- சாய்ந்தமருது) N.மயுரன்( 421-கிளிநொச்சி)எம்.சிந்துஜா( 418-கைதடி)எஸ்.ஜெயகோபன்(415-காரைதீவு)
    exam wishes 7
  • கல்வி நிருவாக சேவை 852வெற்றிடங்களுக்கு மூன்று முறையில் ஆட்சேர்க்க விண்ணப்பம் கோரல் !

    கல்வி நிருவாக சேவை 852வெற்றிடங்களுக்கு மூன்று முறையில் ஆட்சேர்க்க விண்ணப்பம் கோரல்: இறுதித்திகதி 01.02.2016!
     
     
    இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 3 இல் நிலவுகின்ற 852 வெற்றிடங்களை நிரப்புவதற்கு தகைமையான உத்தியோகத்தர்களிடமிருந்து மூன்றுமுறைகளில் ஆட்சேர்க்க விண்ணப்பங்களை கல்வியமைச்சு கோரியுள்ளது.
    மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை; திறந்த பரீட்சை மற்றும் சேவைஅனுபவம் தகைமை  அடிப்படையிலான பரீட்சை மூலம் இவ்வாட்சேர்ப்பு இடம்பெறவிருக்;கின்றது.
    இதற்கான போட்டிப்பரீட்சை ஏப்ரல்மாதமளவில் கொழும்பில் நடாத்தப்படுமென கல்வியமைச்சின் செயலாளர் டி.எம்.பந்துசேன தெரிவித்துள்ளார்.
    மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை!
    இ.க.நி.சேவை தரம் 3இல் காணப்படுகின்ற பொது மற்றும் விசேடசேவை பதவிக்கான வெற்றிடங்கள் 515 உள்ளன.குறிப்பாக  அவை நாட்டின் தென் சப்பிரகமுவ மத்திய வடமேல் வடமத்திய ஊவா கிழக்கு மற்றும் வட மாகாணத்தில் காணப்படுகின்றன. தகுதியான அதிபர் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கமுடியும். 50வயது வயதெல்லையாகக்கொள்ளப்படும்.
    எழுத்துப்பரீட்சை மற்றும் வாய்மொழிநேர்முகப்பரீட்சை மூலம் தெரிவு இடம்பெறும். பரீட்சைக்கட்டணம் 1000ருபா.
    பொதுஊழியர் சேவைக்கு தெரிவாகுபவர்கள் அரசபாடசாலையொன்றில் 3வருடங்கள் கட்டாயம் அதிபர் சேவையாற்றவேண்டும்.
    திறந்த போட்டிப்பரீட்சை!
    இ.க.நி.சேவை தரம் 3 இல் காணப்படுகின்ற பொதுஊழியர்  பொறியியல்தொழினுட்பம் உயிரியல் தொழினுட்பம் தகவல்தொழினுட்பம் ஆகிய  பதவிக்கான வெற்றிடங்கள் 219 உள்ளன. தகுதியான பட்டதாரிகள்  விண்ணப்பிக்கமுடியும். 22-30வயதுக்கிடைப்பதாக  வயதெல்லை கொள்ளப்படும்.
    எழுத்துப்பரீட்சை மற்றும் வாய்மொழிநேர்முகப்பரீட்சை மூலம் தெரிவு இடம்பெறும். பரீட்சைக்கட்டணம் 1000ருபா.
    சேவைஅனுபவம் தகைமை  அடிப்படையிலான போட்டிப்பரீட்சை!
    இ.க.நி.சேவை தரம் 3இல் காணப்படுகின்ற சேவைஅனுபவம் தகைமை  அடிப்படையிலான பதவிக்கான வெற்றிடங்கள் 118 உள்ளன. 03வருடங்கள்  தரம் 1 அதிபர் சேவையைப்பூர்த்தி செய்த தகுதிவாய்ந்த அதிபர்கள்  விண்ணப்பிக்கமுடியும். 55வயது வயதெல்லையாகக்கொள்ளப்படும்.
    எழுத்துப்பரீட்சை மற்றும் வாய்மொழிநேர்முகப்பரீட்சை மூலம் தெரிவு இடம்பெறும். பரீட்சைக்கட்டணம் 1000ருபா.
    இம்மூன்றுவகை வெற்றிடங்களுக்குமான மேலதிக விபரங்களுக்கு கடந்த 01.01.2016 அரச வர்த்தமானியைப் பார்க்கவும்.
     
    (திரு.வி.ரி.சகாதேவராஜா)

    SLEAS Front Cover 215x300 copy copy