korg top cover

korg top cover mob

கிழக்கிலிருந்து வெளிவரும் விருந்து சிற்றிதழின் மூன்றாவது வெளியீட்டு விழா கல்முனையில் எழுத்தாளர் எஸ்.அரசரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆர் முரளீஸ்வரன் கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக கலாநிதி எஸ்.கணேஸ், கௌரவ அதிதியாக குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியால அதிபர் க.சத்தியமோகன், இலக்கிய அதிதியாக கவிஞர் மு.சடாட்சரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
வரவேற்புரையினை ஒய்வு நிலை அதிபர் இ.இராஜரெத்தினம் நிகழ்த்தினார் நூல் முதற்பிரதியினை குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலய பிரதி அதிபர் கு.பிரபாகரன் பெற்றுக்கொண்டார். நூல் வெளியீட்டுரையினை யோகாசனக் கலாநிதி கா.சந்திரலிங்கம் நிகழ்த்தினார். நூல் நயவுரையினை மகுடம் வி. மைக்கல்கொலின் நிகழ்த்தினார்.
நூல் சிறப்பு பிரதியினை முன்னாள் மாநகர சபை உறுப்பினர் காத்தமுத்து காணேஸ், களுதாவளை திருஞான சம்பந்தர் குருகுலம் தலைவர் ப.குணசேகரன், கல்முனை சம்சுங் சிங்ககிரி முகாமையாளர் ரி.இளங்கோ, மனிதாபிமான அபிவிருத்திதாபன பணிப்பாளர் கி.சாருகாஸ், பிராந்திய விற்பனை முகவர் முகாமையாளர் பொ.ஜெகநாத், சேனைக்குடியிருப்பு வின்னர் விளையாட்டுக்கழக தலைவர் கே.செல்வராஜ், ஊடகவியலாளர் கே.விஜயரெத்தினம், பாண்டிருப்பு சுகா விடியோ உரிமையாளர் ரா.ரகு, ஊடகவியலாளர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இம்முறை வெளிவந்துள்ள விருந்து சிற்றிதழின் அட்டைப்படத்தினை கலைஞர் ஆனந்தத்தில் ஒர் அனல் வரைந்துள்ளார். விருந்தின் உள்ளே....
ஆசிரியர் தலையங்கம், நல்ல எழுத்து, சுஜாந்தனின் இரு கவிதைகள், சுவாமி விபுலானந்தரும் புத்தகப்பண்பாடும், மறைந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம் தொடர்பான சிறப்பு கட்டுரைகள், சசியின் நினைவுகள் பற்றி கவிஞர் மு.சடாட்சரன், சண்முகம் சிவலிங்கம் அழியா எழுத்தின் பிரதி பற்றி ஜெஸ்மி எம்.மூசா, ஆகியோர் எழுதியுள்ளனர். சண்முகம் சிவலிங்கம் எழுதிய காற்றில் தேய்ந்த காலடிகள் சிறுகதையும், மகுடம் வி.மைக்கல்கொலினின் மாயக்கல்லி மலை, மு.சடாட்சரனின் அக்கினி நாட்கள், சபா புத்திரனின் அகலாத அதர்வம், சபா.மதனின் ஒளிப்படக்கலை, செங்கதிரேனின் பரிமாற்றம் உருவாக கதை, ரியாஸ்குரானாவின் எமக்குத் தொழில் கவிதை, அழகுதனுவின் பொடிநடை, கல்லூரானின் நான் இலங்கைப் பிரஜையானால், தேவலோஜனின் கொலைப்பசி கொண்டவர்கள், எஸ்.அரசரெத்தினத்தின் ஆண்டவரே இவர்களை மன்னித்தருளும் சிறுகதை, அகரத்தின் உச்சரிப்புக்கள், லக்ஸ்மி பிரியனின் வள்ளுவர் நேரில் வரவேண்டும், சுவாமி விபுலானந்தா கற்கைகள் நிறுவன நடன, நாடகத் துறை விரிவுரையாளர் அ.விமல்ராஜ் எழுதியுள்ள மட்டக்களப்பில் நவீன அரங்க வருகைக்குப் பின்னரான அரங்க முறைமைகளும், மாற்றங்களும் கட்டுரை, யோகாசனக்கலாநிதி கா.சந்திரலிங்கம் எழுதியுள்ள உடலை ஆட்டிப்படைக்கும் சக்கரங்கள், கு.கிலேசனின் மிளிரா வாழ்வு ஆகிய படைப்புக்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vrunthu 1

vrunthu 1

vrunthu 1

vrunthu 1

vrunthu 1

vrunthu 1

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை