korg top cover

korg top cover mob

நமது வாழ்க்கையில் ஆயிரம் நண்பர்கள் உடனிருந்தாலும், நாம் அவர்களைப் பெரும்பாலும் நினைத்துக் கவலைப்படுவதில்லை. ஒரே ஓர் எதிரி இருந்தாலும், நம் எண்ணங்கள் அனைத்தும் அந்த நபரைச் சுற்றியே சுழல்கின்றன. அந்த எண்ணங்கள்தான் நம்மை அதிகம் பாதிக்கின்றன; அந்த எதிரிதான் நம்மை அதிகம் பாதிப்புக்கு ஆளாக்குகிறான்.சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், எதிரியால்தான் ஒரு மனிதன் முழுமை அடைகிறான். எதிரிகள் இல்லாதவன் வாழ்க்கை உப்புச் சப்பில்லாத அரைத்த மாவை அரைப்பதற்குச் சமம். சவால்களை எதிர்கொள்ள, சாகசம் புரிய நமக்கு அவசியத் தேவை ஓர் எதிரி.‘எந்த வினைக்கும் எதிர் வினை ஒன்று’ உண்டு என்பதுபோல, எந்தக் குணத்துக்கும் முடிவு என்ற நிலை ஒன்று உண்டு. அதேபோல எதிரியும் ஒரு நாள் நண்பனாக மாறும் நிலை ஏற்படும்.முதலில் பார்க்கும்போதே ஒருவரைப் பற்றி முழுமையாக முடிவு செய்துவிட முடியாது. இன்று நம்மை நேசிப்பவர்கள், நாளை அதிகம் வெறுக்கக்கூடியவர்களாக மாறலாம்: அதிகம் வெறுக்கக்கூடியவர்கள், நாளை அதிகம் விரும்பக்கூடியவர்களாகக்கூட ஆகலாம். அதாவது எதிரியும் ஒரு நாள் நண்பனாவான், நெருங்கிய நண்பனும் ஒரு நாள் எதிரியாவான். இதுதான் வாழ்க்கைச் சக்கரம். எனவே, எதுவும் நிலையானதல்ல. இதைத்தான் ஓஷோ தான் எழுதிய `The Book of Wisdom’ என்ற புத்தகத்தில், சால், பால் (Paul) ஆக மாறிய கதை மூலம் விளக்கிச் சொல்கிறார்.

download

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை