korg top cover 0 thwww

karaitivu logo mobile

ht4451497

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைபெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடலுக்கு பலம் தரக்கூடியதும், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதும், குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய கஞ்சி வகைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.ஒவ்வொரு மணத்துக்கும், ஒவ்வொரு சுவைக்கும் நோய்களை தீர்க்கும் தன்மை உண்டு. பல சுவைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் நம்மை தாக்காது. இளம்வயதில் சத்தூட்டாமான உணவு சாப்பிட்டு வந்தால், எதிர்காலத்தில் நோய் வராமல் காத்துக்கொள்ளலாம்.

பாதாம் பருப்பை பயன்படுத்தி உடலுக்கு பலம் தரும் கஞ்சி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பாதாம், பச்சரிசி, கற்கண்டு பொடி அல்லது வெல்லம், ஏலக்காய் பொடி.செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். பாதாம் பருப்பு மற்றும் பச்சரிசியை ஊறவைத்து அரைத்து இதில் சேர்க்கவும். கஞ்சி பதத்தில் வந்தவுடன் சுவைக்காக கற்கண்டு பொடி அல்லது வெல்லம், ஏலக்காய் பொடி சேர்க்கவும். பின்னர் காய்ச்சிய பால் ஊற்றவும். இந்த கஞ்சியை குடித்துவர உடல் பலம் அடையும். குழந்தைகளுக்கு சிறந்த உணவாகிறது.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பாதாம் பருப்பில் புரதம், இரும்பு சத்துக்கள் உள்ளன. இது, ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி உடையது. பச்சரிசி அற்புதமான உணவாகி குடல் புண்களை ஆற்றும். கொண்டை கடலையை பயன்படுத்தி சத்தூட்டமான கஞ்சி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கொண்டை கடலை, கசகசா, கற்கண்டு பொடி, பால், ஏலக்காய். ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். கொண்டை கடலை, கசகசாவை இரவு முழுவதும் ஊறவைத்து அரைத்து வடிகட்டி பால் எடுத்து இதில் சேர்க்கவும். கஞ்சி பதத்தில் வந்தவுடன் கற்கண்டு பொடி சேர்க்கவும்.

பின்னர், காய்ச்சிய பால், ஏலக்காய் சேர்க்கவும். இதை சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். நோய் வராமல் தடுக்கும். பல்வேறு நன்மைகளை கொண்ட கசகசா மலச்சிக்கலை போக்கும். குடல் புண்களை ஆற்றும். சத்தூட்டமான உடலுக்கு பலம் தரக்கூடிய இந்த கஞ்சி வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் நலம் பெறலாம். சிராய்ப்பு காயங்களுக்கான மருத்துவத்தை பார்க்கலாம். கீழே விழுந்து சிராய்ப்பு ஏற்படும்போது அந்த காயம் விரைவில் ஆறாது. மூன்று வாரங்கள் வரைகூட ஆறாமல் இருக்கும். இதற்கு துளசி அற்புதமான மருந்தாகிறது. துளசி இலைகளை நசுக்கி சாறு எடுத்து பூசிவர சிராய்ப்பு காயங்கள் சரியாகும். வடு தெரியாமல் மறையும்.

சூடான செய்திகள்*

தொடர்பான செய்திகள்

புதியவை