korg top cover 0 thwww

karaitivu logo mobile

images

ஆலயத்தின் பாராம்பரியமான வருடத்திற்கு ஒருமுறை நடைபொறுகின்ற திருக்குளிர்ச்சிப் பூசையானது வழமைபோண்ற அன்ற தொடக்கம் இன்று வரை நடைபெற்று வருவது யாவரும் அறிந்த விடயமே.

ஊர்மக்கள் தினமும் அம்பாளை தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக ஆகமமுறைப்படி தினப்பூசையும் வருடத்திற்கு ஒரு அலங்கார பூசையும் சங்காபிசேகமும் நடைபெறுகின்றது.

இதற்குமேலாக சேனாதிராஜன் குடியினர் ஊரில் உள்ள ஏழை இந்து மக்களின் நன்மை கருதி குடியிருப்பதற்கு காணி இல்லாதவர்களுக்கு பராமரிப்பற்றுக்கிடந்த எல்லைக்காணிகளை பாரிய நிதி கொடுத்து கொள்வனவு செய்து பகிர்ந்தளிக்கப்பட்து.
ஆலயத்தினால் வழங்கப்பட்ட காணிகளுக்கு தகுந்த ஆவணம் வழங்காத காரணத்தால். அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானியங்கள், நிதியுதவிகள், வீட்டுத்திட்டங்கள் போன்றவற்றிற்கு இடையூறாக இருந்ததை அறிந்த தற்போதய நிர்வாகம் நிபந்தனையுடன் கூடிய ஆவணப்பத்திரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வெகுவிரைவில் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.

திருவாதிரை தீர்தோற்சவத்தில் அகோர உயிரிழப்புகள் தொடர்ச்சியாக ஏற்பட்டுவந்ததாலும். திருவாதிரைதினத்தின் இறுதிநாள் அன்று சுனாமிப் பேரலையின் பேரழிவாலும் திருவாதிரை தீர்தோட்சவம் சம்பந்தமான கேள்விக்குறி ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து காரைதீவை உள்ளடக்கிய அனைத்து ஆலயங்களின் ஒன்றியம் ஊர்மக்களை இவ்வாறான அனர்த்தங்களில் இருந்து மீட்பதற்காக ஆகம சிரோன்மனிகளை அழைத்து ஆலோசனைகளை பெற்ற போது ஊர்பிரவேசம் மற்றும் தீர்த்த உற்சவமானது வருடத்தில் ஒருமுறை மட்டுமே அந்தந்த ஆலயங்களில் உள்ள தெய்வங்கள் தீர்த்தமாடவேண்டும். என்ற நியதிக்கும் தீர்மானத்திற்கும் அமைவாக நடராஜப்பெருமான் மட்டுமே நமது ஊரைப்பொறுத்தமட்டில் திருவாதிரை தீர்த்தமாடலாம்.

மார்கழி கடலானது சீற்றம் கொண்டிருப்பதனால் 2005ம் ஆண்டு அதாவது சுனாமிக்கு பின்பு நடராஜப்பெருமான் மட்டும் ஊர்வலம் நிகழ்த்தி ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய புராதன தீர்த்தக்கிணற்றில் வெகுசிறப்பாக இன்றுவரை தீர்த்தமாடி ஊர்மக்கள் எம்பெருமானின் நல்லருளைப் பெற்று வருகின்றனர்.
நன்றி
இப்படிக்கு
என்றும் இறைபணியில் தர்மகர்த்தாக்கள் நிர்வாக சபையினரும்

 

சூடான செய்திகள்*

தொடர்பான செய்திகள்

புதியவை