korg top cover

korg top cover mob

Layer 6

அகிலம் போற்றும் உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் காரைதீவு மண்ணில் பிறந்து 125 வருடங்களாகின்றன.125 வருடங்களைக் கடந்த ஒரு பெருமகனின் பிறந்த நாளை துல்லியமாக அறியமுடியாத எமது வரலாற்று ஆய்வாளர்கள் எப்படி பல நூறு அல்லது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறுகளை அறிவார்கள்?இது உண்மையுள்ள ஆய்வாளர்களின் வினாவாகும். இதற்கு விடையளிப்பதே இதன் நோக்கமாகும். 

சுவாமி விபுலானந்த அடிகளார் பற்றி இதுவரை வந்த நூற்றுக்கணக்கான நூல்களில் அவரது பிறப்பு பற்றி தமிழ் திகதி தொடர்பில் எந்தவொரு மாறுபாடான தகவலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.அதாவது சுவாமிகள் 1892 கர வருடம் பங்குனித்திங்கள் 16ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை உதயத்தில் பூரட்டாதி நட்சத்திரத் இந்த தமிழ் திகதிக்கான ஆங்கிலத்திகதியை பெறுவதில் பலர் தவறுவிட்டிருக்கின்றார்கள். இம்மண்ணிலிருந்து வெளிவந்த அடிகளார் படிவமலர் கூட தவறு விட்டிருக்கிறது. அதில் அடிகளார் 26,27,28,29ஆந் திகதிகளில் பிறந்ததாக வேறு கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் நான்கு தினங்களில் பிறக்க முடியுமா? இல்லை.

சுவாமிகளின் நூற்றாண்டை ஒட்டி என்னால் தொகுக்கப்பட்ட 'அடிகளார் நினைவாலய மலரில் 'சரியான திகதி தொடர்ந்து பேணப்பட்டு வந்தமை இவ்வண் சுட்டிக்காட்டப்படுதல் பொருத்தமாகும்.

இலங்கையில் முதன்முதல் வாக்கிய பஞ்சாங்கம் வெளிவந்த ஆண்டு 1892 ஆகும். யாழ்ப்பாணம் கொக்குவிலை சேர்ந்த சந். இரகுநாதையவர்களால் கணிக்கப்பட்டது. வாக்கிய பஞ்சாங்கம் அதுவரை கையnழுத்துப்பிரதியாகவே வெளிவந்துகொண்டிருந்தது.
1892இல்தான் முதன்முதல் அப்பஞ்சாங்கம் அச்சில் வெளியிடப்பட்டது.அதே ஆண்டிலேதான் சுவாமி விபுலானந்தரும் பிறந்தார்.

எனவே அந்த 1892 கர வருட பஞ்சாங்கத்தை பார்த்தால் பிறந்த நாள் (ஆங்கிலத்தில்) தெரிந்து கொள்ள முடியும். ஆனால் அதை பெறுவதென்பது முயற்கொம்பாக இருந்தது.
ஆதலால் எனது இலக்கிய நண்பர் களுதாவளையைச்சேர்ந்த பிரபல வரலாற்றாய்வாளர் ஒய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர்; கலாபூசணம் திரு. ஆ.அரசரெத்தினம் அவர்களை தொடர்பு கொண்டு அப்பஞ்சாங்கத்தை பெறமுயற்சித்தேன்.அவரும் சுவாமி விபுலானந்தரின் நேரடி அபிமானி. வரலாற்றாய்வாளர் எவ்.எக்ஸ்.சி.நடராஜா அவர்களின் நேரடி சீடர். அவர் பலத்த பிரயத்தனத்தின் மத்தியில் அப்பஞ்சாங்கத்தை யாழ்ப்பாணத்தில் இருக்க கூடிய இலக்கிய ஆய்வாளர்களிடம் இருந்து பெற்றெடுத்து எனக்கும் பிரதியை அனுப்பி இருந்தார்.

(இங்கு அதன் முதற் பிரதியின் முன்பக்கம் தரப்படுகிறது)

அப் பஞ்சாங்கத்தில் தமிழ் திகதியாம் கர வருடம் 1892 பங்குனித்திங்கள் 16ஆந் திகதிக்குநேர்ஒத்த ஆங்கிலத்திகதியை பார்த்தோம்.
அஃது 27.3.1893 என இருந்தது.
அரபுத்திகதி ஷஃபான் 27 . ஆங்கிலத்திகதி; மார்ச் 27 . தமிழ்திகதி பங்குனி 16
ஞாயிறுஇ திதி- சதுர்த்திஇ நட்சத்திரம் - பூரட்டாதிஇ யோகம் - சுப்ரம்இ கரணம் - விட் எனக்குறிப்பட்டுள்ளது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

(இங்கு அதன் பிரதியும் தரப்படு;கிறது)

இப்படியாக சுவாமியின் பிறந்த தினம் 1892.03.27 என வெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எந்த சர்ச்சையும் ஏற்பட நியாயம் இல்லை.

சுவாமிகள் பிறந்த திகதியைக் குறிக்கும் தனித்தமிழ் எழுத்துக்களாலான பஞ்சாங்கத்தின் பிரதியையும் இங்கு தருகின்றேன். இலக்கங்களை தமிழ் எழுத்துக்களில் வாசிக்கத் தெரிந்த சான்றோருக்கு இது நன்கு புலப்படும் எனக் கருதுகிறேன்.


பிறப்பு அத்தாட்சி பத்திரம்

அந்த காலத்தில் பிறப்பு சான்றிதழுக்கு பதிவது என்பது பொதுவாக காலம் தாழ்த்தியே என்பது அனைவரும் அறிந்ததாகும்.

இதற்கு சுவாமியின் தந்தையாரும் விதி விலக்கல்ல.
காரணம் சுவாமி பிறந்து ஒரு சில தினத்தில் ஜனன ஜோதிடம் பார்க்க ஜோதிடரிடம் சென்ற போது தற்போது ஜாதகம் கணிக்க முடியாது என சூசகமாகக் கூறிவிட்டார் ஜோதிடர்.

விதானையாரான சாமித்தம்பி அவர்கள் பிள்ளைக்கு தத்து (கண்டம்) இருப்பதனை ஊகித்தவராக பிள்ளைக்கு பெயரும் வைக்கவில்லை. இந் நாளில் பிள்ளைக்கு ஒருவித நோய் தொற்றிக்கொண்டது. ஜோதிடர் கூறிய விடயமும் நோயும் தந்தை சாமித்தம்பி விதானையாருக்கு மேலும் பீதியையும்இ அச்சத்தையும் ஏற்படுத்தியது. உடனே பிள்ளையை தூக்கிக் கொண்டு கதிர்காமத்திற்குச் சென்று அங்கு பிள்ளையை முருகனிடம் ஒப்படைத்து பிள்ளையைக் காப்பாற்று என அங்கேயே பெற்றோர் மண்டாடி விரதமிருந்தனர்.

சில நாளில் பிள்ளையின் நோய் தீர்ந்தது. அந்த இடத்திலேயே பிள்ளைக்கு முருகனின் நாமமான 'மயில்வாகனன்' எனப் பெயரிட்டனர். இந்தத் தருணத்தில்தான் பெயரிடப்பட்டதென்பதை கவனத்தில் கொள்ளவும். முருகப் பெருமானின் வாகனமான மயில்வாகனம் என்று சிலர் இளமைப்பெயரைக்; குறிப்பிடுவது பொருத்தமில்லை என்பதையும் கவனத்தில் கொள்க.

பின்பு பிள்ளையை ஊருக்குக் கொண்டுவந்தார்கள். ஜனன ஜோதிடம் பார்த்தார்கள். இவைகள் எல்லாம் இடம் பெற்று ஓரிரு மாதங்களின் பின்னர் தான் தந்தையார் பிறப்புக்காகப் பதிவு வைத்துள்ளார்.
சுவாமியின் தந்தை ஒரு விதானையார்.அக்காலத்தில் கிராமத்தலைவர் என்றால் அது விதானையாகத்தானிருக்கும். அப்படிப்பட்ட அவருக்கு சுவாமி பிறந்த உடனே பதிவு வைக்கத் தெரியாதா? ஆனால் பிறந்தபின்பு ஏற்பட்ட நோயும் அதனோடிணைந்த காரணிகளும்தான் பிந்திய பதிவுக்குக் காரணம்.

இவையனைத்தும் இன்றும் காரைதீவில் வாழும் உதிர உறவுகளால் கூறப்பட்டவை. அந்த பிறப்பத்தாட்சிப்பத்திரமே இன்று ஒரு சாராரின் பிறந்த நாள் விழாவிற்குக் காரணமாயிற்று என்பது துரதிஸ்டமே.

தர்க்கநியாயம்

அப்படி பிறப்புப் பத்திரத்தில் குறிக்கப்பட்டவாறு 1892.05.03 என எடுத்துக் கொண்டால் கர வருடம் பங்குனித் திங்கள் 16ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமையில் சுவாமி பிறக்கவில்லை என்று அர்த்தப்படுமே? அது சரியா?

அது மட்டுமல்ல சாதாரணமாக ஒரு தமிழ் வருடம் ஏப்ரல் மாதம் 13இ14 தொடங்கி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 13இ14இல் முடிவடைவது தெரிந்ததே.
உதாரணமாக இந்த வருடப்பிறப்பைப் பாருங்கள். கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி நள்ளிரவு வரை ' மன்மத வருடம்' எனும் தமிழ்வருடம் இருந்தது. ஏப்ரல் 14ஆம் திகதி புதிய தமிழ் வருடமாக 'துர்முகி வருடம் 'அமுலுக்கு வந்தது.
இதேபோன்று அடுத்த வருடம் ஹேவிளம்பி எனும் புதிய வருடம் 14 ஏப்ரல் 2017இல் பிறக்கும்.

எனின் தமிழுக்கு கர வருசத்தில் வரும் பங்குனித் திங்கள் 16ஆந் திகதி என்பது கர வருசத்திற்குரியது. பிறப்புப் பத்திரத்தின்படிவரும் ஆங்கிலத் திகதியான 1892.05.03 ஜப் பார்த்தால் அவரது பிறந்த தமிழ் திகதி அடுத்த வருடமான 'நந்தன' வருடமாக கொள்ளப்பட வேண்டுமே!. ஏனெனில் ஆங்கிலத்தில் 5ம் மாதம் என்பது தமிழுக்கு அடுத்த வருடமாகக் (நந்தன)கொள்ளப்படவேண்டும் என்பதனை யாரும் அறிவார்கள்.

60 ஆண்டு கால வருடச்சுழற்சியில் 25ஆவது வருடமான கர வருடம் (1891 - 1892) 1892 ஏப்ரல் 17ஆந் திகதியுடன் முடிவடையஇ அதற்கடுத்த 26ஆவது வருடமான நந்தன வருடம் (1892 – 1893) 1893 ஏப்ரல் 14ஆந் திகதியுடன் முடிவடையும்.

aaaivu katt 2

aaaivu katt 2

aaaivu katt 2

aaaivu katt 2

பிறப்புப்பத்திர 1892.05.03 ஆங்கிலத் திகதியின்படி பார்த்தால் சுவாமிகள் தமிழுக்கு நந்தன வருடம் சித்திரை மாதம் 22ஆந் திகதி பிறந்ததாக கருதப்படும். அது செவ்வாய்க்கிழமையில் ஏகாதசி திதியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்ததாக கொள்ளப்படும். இது சாத்தியமா?
அப்படியெனின் இதற்கு முன்பு எழுதப்பட்ட சுவாமிகள் பற்றிய நூற்றுக்கணக்கான நூல்களில் இடப்பட்ட தமிழ்தேதி பிழையென கொள்ளப்படவேண்டும்.

எந்தவொரு நூலிலும் சுவாமிகள் கர வருடத்தில் பிறந்ததாகவே சொல்லப்படுகின்றது. இன்னும் இன்றும் காரைதீவில் வாழும் உதிர உறவுகள சுவாமி கரவருடத்தில் பிறந்ததாகவே கூறுகின்றனர்.

உதிரஉறவின் நேரடி தகவல்!
சுவாமிகளது மருமகளார் கண்ணம்மாக்கா என எல்லோராலும் அழைக்கப்படும் திருமதி கோமேதகவல்லி செல்லத்துரை இன்றும் உயிரோடு இருக்கிறார். அவருக்குவயது 90. எனினும் கண்ணாடி போடாமல் வாசிக்கக்கூடியவர். பழையஞாபகங்களை மீட்டச்சொல்கிறார். அதுமட்டுமல்ல அவரிடமுள்ள ஆதாரங்களை வைத்தே அவர் சில உறுதியான உண்மைகளைச்சொல்கிறார்.
அவரை அவரது வீட்டில் சுவாமியின்பிற்நதநாள் தொடர்பாக சந்தித்தபோது அறுதியாகவும் உறுதியாகவும் சிலவிடயங்களை அவரது பொக்குவாயால் ஆணித்தரமாகச்சொன்னார்.இதற்கான வீடியோவும் உண்டு.
சுவாமி மூத்தவர்.அரண்டாவது சகோதரி அமிர்தவல்லி மூன்றாவது சகோதரி மரகதவல்லி. இவர்கள் மூவரும் காரைதீவில் அதுவும் வீட்டிலே பிறந்தவர்கள்.
நான் மரகதவல்லியின் புதல்வி.
சுவாமி பிறந்தது கரவருடம் பங்குனித்திங்கள் 16ஆம் திகதி அதாவது 1892 ஆண்டு மார்ச்மாதம் 27ஆம் திகதி ஆகும். இதற்கு எனது தாயார் பல கதைகளைச்சொல்லியிருக்கிறார். மார்ச்மாதம் பிறந்த காரணத்தினால் மேதாவிலாசம் பெற்றார் என்று.
எனவே தமிழ்கூறுநல்லுலகம் அனைத்தும் இனிமேலாவது சுவாமியின் பிறந்த தினத்தை மார்ச் 27ஆம் திகதியே கொண்டாடுமாறு அன்போடு வேண்டிக்கொள்கின்றேன். என்றார்.

இந்நிலையில் காலந்தாழ்த்தி வைக்கப்பட்ட பதிவின் அடிப்படையில் பெறப்பட்ட பிறந்த ஆங்கிலத் திகதியான 1892.05.03 சுவாமிகள் பிறந்த திகதியாக கொள்ளமுடியுமா? அத்தினத்தில் பிறந்த தின விழாவை நடாத்துவது பொருத்தமா? இல்லைவே இல்லை. இதனை மட்டுநகர் வாழ் சக சுவாமி அபிமானிகள் கவனத்திற்கொள்வார்கள் என நம்புகின்றேன்.

சமாதியிலுள்ள திகதியை அழிக்கலாமே?

சுவாமிகளின் சமாதி இன்றும் கல்லடியிலுள்ள சிவபுரி வளாகத்தில் உள்ளது. அந்தச்சமாதியில் வெள்ளைநிறமல்லிகையோ பாடலும் அத்தோடு சுவாமியின் பிறப்பு இறப்பு திகதிகளும் இடப்பட்டிருக்கின்றன.
அதிலும் 27.03.1892 என இடப்பட்டிருக்கின்றது.
அப்படியென்றால் அது பிழையா? 1947களில் இருந்தவர்கள் இந்த அறிவில்லாதவர்களா? சரி பிறப்புபதிவுமான் சரியென்றால் இந்தக்கல்லறைதகிதியையும் மாற்றிவ்டலாமே.

சுவாமிகள் யாழ்ப்பாணமா?

கரந்தைத்தமிழச்சங்கத்தினர் ஒருதடவை உலக அறிஞர்கள் அரங்கிற்கு தலைமைதாங்க சுவாமிகளை அழைத்திருந்தார்கள். அங்கு அவரைப்பாராட்டி கரந்தைத்தமிழச்சங்கத்தினர் ஒரு வாழ்த்துப்பத்திரத்தை சுவாமிகளுக்கு வழங்கியிருந்தனர்.
அதில் சுவாமிகள் யாழ்ப்பாணம் காரைநகரைச்சேர்ந்தவர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்படியெனின் இந்தப்பதிவைப்பார்த்துவிட்டு சுவாமிகள் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்தவர் என்று கருதிவிடமுடியுமா? இதுவும் எழுத்தாவணம்தானே. அதுவும் அறிஞர்பெருமக்கள் நிறைந்த அவை.அவர்களால் வழங்கப்பட்டது.நிராகரிகக்முடியுமா? பிறப்பத்தாட்சிப்பத்திரத்தைப்போல் இதனையும் ஏற்றால் எமக்கு இந்த விழாக்கள் ஊர்வலங்கள் தேவையா? காரைதீவில் சுவாமி பிறந்த வீடு உதிரஉறவுகள் இன்னும் பலசான்றுகள். அவற்றையெல்லாம் அழித்துவிடமுடியுமா? அல்லது பிழையென்று சொல்லிவிடமுடியுமா?

ஆக ஒரு பதிவை மாத்திரம் வைத்துக்கொண்டு அதனை இமாலயச்சாதனை என நினைத்துக்கொண்டு தான்பிடித்தமுயலுக்கு 3கால் எனும்போக்கில் அவர் மே மாத்தில்தான் பிறந்தார் என்று கூறுதல் பொருத்தமல்ல. மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டுவிழாச்சபை இதனை ஆராய்தல் பொருத்தமாகும். சுவாமிகள் உருவாக்கிய சிவானந்தாவை ஏன் இ.கி.மிசனைச்சேர்ந்தவர்கள் நிறைந்த கற்றறிந்தவர்கள் நிறைந்த அந்தச்சபையில் இவ்வாறான பிழையான எடுகோளுக்குப்பின்hல்; செல்வது நியாயமா?

காரைதீவு மண்ணில் ஒரு நூற்றாண்டு காலத்துள் பிறந்து புகழ்பெற்ற ஒரு மகானின் பிறந்த நாளை அங்கு அவரோடுபிறந்த அவரது உதிரஉறவுகள் கல்விமான்கள் அவரது அபிமானிகள் ஊர்ப்பிறந்தவர்கள் கூறுவதற்கு போதுமான அருகதையுடையவர்கள். இவற்றைவிட விட பிறப்பத்தாட்சிப்பத்திரம் ஒரு வலிதான ஆதாரமா?


முடிவுரை

சுவாமிகள் 1892 கர வருடம் பங்குனித்திங்கள் 16ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை உதயத்தில் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை

இந்த தமிழ் திகதிக்கான ஆங்கிலத்திகதியை உரிய பஞ்சாங்கத்தில் பார்க்குமிடத்து அது 27.03.1892 என வருகின்றது. அதாவது இந்த தமிழ்த்தேதிக்குரிய நேரொத்த ஆங்கிலத்திகதி27.03.1892 ஆகும் என்பதை கவனத்திற்கொள்ளவேண்டும்.

எனவே. மட்டக்களப்பிலிருக்கக்கூடிய ஒருசில சுவாமி அபிமானிகள் சுவாமியின் பிறந்த தினத்தை மே மாதத்தில் தொடர்ந்து கொண்;டாடுவதென்பது அவரைக் கேலிசெய்வதாக கொச்சைப்படுத்துவதாக உள்ளது.
இனிமேலாவது சுவாமிகளது பிறந்த தினத்தில் தேவையற்ற விவாதங்களை விடுத்து அவரது பெயரில் பல அமைப்புகள் வீணே காலத்தைக் கடத்துவதைத் தவிர்த்து தமிழ் கூறுநல்லுலகம் சுவாமிகள் பற்றிய மேலும் பல ஆராய்ச்சிகளை செய்தல் பொருத்தமாகும்.

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா(ADE,JP)

முன்னாள் தலைவர் - சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றம்               

இந்து சமய விருத்திச் சங்கம் காரைதீவு

aaaivu katt 2

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

டிசம்பர் 1 - உலக எய்ட்ஸ் தினம்
திங்கட்கிழமை, 01 டிசம்பர் 2014
அச்சுறுத்தும் 1000 அடி நீள கண்ணாடிப் பாலம்
வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014
புலி பிடிப்பது எப்படி?
புதன்கிழமை, 27 ஆகஸ்ட் 2014
நவம்பர் மாத சிறப்பு சோதிட தகவல்
ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014
நன்மைகளை அள்ளித்தரும் மகாசிவராத்திரி
வியாழக்கிழமை, 27 பிப்ரவரி 2014

புதியவை