korg top cover 2

korg top cover mob

தெற்காசிய நவீன சிந்தனை மரபில் சுவாமி விபுலாநந்தர்
(முத்தமிழ் வித்தகர் ஸ்ரீமத் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 125 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை வெளிவருகிறது)


கலாநிதி.க.கணேசராஜா
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

swami1

தெற்காசியப் பண்பாட்டையும், தமிழ்ச் சமூகத்தின் நவீனகாலப் பண்பாட்டு வரலாற்றையும், தமிழ் இலக்கிய வரலாற்றையும் கற்க முனையும் ஒருவர்இ சுவாமி விபுலாநந்தரைப் பற்றி அறிந்து கொள்வதன் மூலம் பல விடயங்களைக் கற்று விடலாம். அத்துறையளவு தகைசார் சிந்தனையாளராகவும், நவீன புலமையாளராகவும் சுவாமி விபுலாநந்தர்; காணப்படுகின்றார். இவர் அம்பாரை (ஆரம்பத்தில் மட்டக்களப்பு என்று அழைக்கப்பட்டது, பின்னர் மாவட்ட ரீதியாக பிரிந்ததால் தற்போது அம்பாரை எனப்படுகிறது) மாவட்டத்திலுள்ள காரைதீவு என்ற பழம்பெரும் கிராமத்திலே பிறந்தார். (1892 – 1947) 'வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ' என்ற பாடலை கேட்டதும் எமது மனம் விபுலானந்தரையே ஞாபகப்படுத்துகிறது. அந்தப்பாடலில் இளையோடிக் காணப்படும் சமய ஒருமைப்பாட்டுத்தன்மையும் உள்ளக்கமலமும், கூப்பியகைக்காந்தளும்இ நாட்ட விழி நெய்தலும்இ இந்துசமயத்துக்கு மட்டுமல்ல உலக சமய நெறிகள் அனைத்துக்கும் பொதுவானதாகும். இதனாலேயே இவரைப் பற்றியும் இவரது எழுத்துக்கள் பற்றியும் அனைவரும் ஆராய முனைகின்றார்கள்.


சுவாமி விபுலாநந்தரின் பணிகளை மதீப்பீடு செய்யும்போது இவர் கல்வி, சமூகம், கலை, இலக்கியம், அறிவியல், அறவியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கினார். அத்தோடு விபுலாநந்தர் தமிழியல் சிந்தனையாளராக சம காலத்தில் விளங்கியவர் என்பதற்கு அவரது பல்வேறு பணிகளும் படைப்புகளும் அடிப்படையாக இருந்தன. ஆசிரியராகஇ அதிபராக, விரிவுரையாளராக, பேராசிரியராக, பத்திரிகையாசிரியராக, கவிஞராக, மொழிபெயர்ப்பாளராக, எழுத்தாளராக, ஆய்வாளராக, புதிது புனைபவராகஇ தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழியில் தேர்ச்சி பெற்றவராக, பௌதீகதீத வாதியாக, ஆன்மீக வழிகாட்டியாக, பாடசாலை ஸ்தாபகராக, கல்விசார் குழுக்களின் உறுப்பினராக, சிறந்த சொற்பொழிவு செய்பவராக, கலைச் சொல் படைப்பாளியாக, சங்கங்களின் அல்லது பேரவைகளின் தலைவராக பன்முக பரிமாணங்களை தமது பணியோடு வெளிப்படுத்தி நின்றவர். அதுமட்டுமல்ல மொழி, பண்பாடு, சமயம் சார்ந்த விடயத்தில் மிகுந்த பற்று கொண்ட இவர் குடும்ப உறவுசார்ந்த விடயத்திலும் மிகவும் அக்கறையாக இருந்தார்.


விபுலாநந்தரின் படைப்புகள்

சுவாமி விபுலாநந்த அடிகளார் அவ்வப்போது பத்திரிகைகளுக்கு எழுதிய கட்டுரைகளிற் சில கீழே கொடுக்கப்படுகின்றன. இதற்கு ஈழமணி (1948) விபுலாநந்த நினைவு மலரில் திரு. மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்கள் தொகுத்து எழுதிய கட்டுரை மிகவும் துணைபுரிந்தது. அத்துடன் படிவமலர் பெரிதும் உதவியது. அடிகளார் எழுதிய கட்டுரைகள் இவ்வளவுதான் என்று முடிவு கூறமுடியாது. என்பார்வைக்குக் கிடைத்தவைதான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

 


தமிழில் எழுதிய கட்டுரைகள்:

01. பூஞ்சோலைக்காவலன் : வங்க நாட்டுக்கவி ரவீந்திர நாத் தாகூர் அவர்கள் இயற்றிய 'கார்டனர்' என்னும் ஆங்கிலப் பக்கங்களின் தமிழ் மொழிப் பெயர்ப்பு. செந்தமிழ் தொகுதி – 20, பக்கம் 301-307 (சித்திரை – வைகாசி – 1922) செந்தமிழ் தொகுதி – 22, பக்கம் 69-77. (கார்த்திகை – 1923)
02. மேற்றிசைக் செல்வம் : செந்தமிழ் தொகுதி – 20 பக்கம் 381-390, 469-474 (சித்திரை – வாகாசி 1922) செந்தமிழ் தொகுதி – 21, பக்கம் 185 – 192 (ஆணி 1923) செந்தமிழ் தொகுதி – 22, பக்கம் 121 – 130.
03. விஞ்ஞான தீபம் : செந்தமிழ் தொகுதி – 20, பக்கம் 413 – 440 (சித்திரை – வைகாசி – 1922) செந்தமிழ் தொகுதி – 21, பக்கம் 1 – 10, 61 – 68 (கார்த்திகை – 19922) செந்தமிழ் தொகுதி – 22, பக்கம் 209 – 222 (கார்த்திகை – 1923)
04. பொருணூற் சிறப்பு : செந்தமிழ் தொகுதி – 21 பக்கம் 123 – 130, 560 – 564 (சித்திரை – வைகாசி – 1922)
05. யவன புரத்துக் கலைச்செல்வம் : செந்தமிழ் தொகுதி – 21, பக்கம் 501 – 507 (புரட்டாதி – 1923)
06. மஹாலக்ஸ்மி தோத்திரம் : (செய்யுள்) செந்தமிழ் தொகுதி – 22, பக்கம் 241 – 245 (மாசி – 1924)
07. சூரிய சந்ரோற்பத்தி : செந்தமிழ் தொகுதி – 21, பக்கம் 245 – 251 (ஆணி – 1923)
08. மலைகடலுற்பத்தி : செந்தமிழ் தொகுதி – 21, பக்கம் 349 – 356 (ஆணி – 1923)
09. மதங்கசூளாமணி : செந்தமிழ் தொகுதி – 22, பக்கம் 321 – 344, 361 – 368, 401 – 422, 467 – 489 (1924) செந்தமிழ் தொகுதி – 23, பக்கம் 1 – 24, 73 – 86, 121 – 130, 161 – 172, 201 – 206 (1925)
10. ஐயமும் அழகும் : செந்தமிழ் தொகுதி – 38, பக்கம் 29 – 34 (மார்கழி – 1940 - 1941)
11. வண்ணமும் வடிவும் : செந்தமிழ் தொகுதி – 38, பக்கம் 49 – 56 (மார்கழி – 1940 - 1941)
12. நிலவும் பொழிலும் : செந்தமிழ் தொகுதி – 38, பக்கம் 113 – 120 (1940 – 1941)
13. மலையும் கடலும் : செந்தமிழ் தொகுதி – 38, பக்கம் 169 – 176 (1940 – 1941)
14. கவியும் சால்பும் : செந்தமிழ் தொகுதி – 38, பக்கம் 177 – 184 (1940 – 1941)
15. நாடும் நகரும் : செந்தமிழ் தொகுதி – 38, பக்கம் 193 – 200 (பங்குனி – 1942)
16. சங்கீத மகரந்தம் : செந்தமிழ் தொகுதி – 38, பக்கம் 337 – 344 (1942)
17. எண்ணலளவை : செந்தமிழ் தொகுதி – 38, பக்கம் 473 – 482 (1924)
18. இசைக்கிரமம் : செந்தமிழ் தொகுதி – 38, பக்கம் 401 – 410 (1941 – 1942) செந்தமிழ் தொகுதி – 39, பக்கம் 57 – 68 (மார்கழி - 1941 – 1942) பக்கம் 509 – 521 (புரட்டாசி 1942 – 1943) செந்தமிழ் தொகுதி – 40, பக்கம் 33 - 46 (மார்கழி 1942 – 1943)
19. உலக புராணம் : செந்தமிழ் தொகுதி – 39, பக்கம் 19 – 31 (மார்கழி 1941 – 1942)
20. வங்கியம் : செந்தமிழ் தொகுதி – 39, பக்கம் 373 – 376 (1942)
21. மதுரை இயற்றமிழ் மகாநாட்டுத் தலைவர் பேருரை : செந்தமிழ் தொகுதி – 39, பக்கம் 465 - 480 (ஆவணி - 1942)
22. சங்கீத பாரிஜாதம் : செந்தமிழ் தொகுதி – 39, பக்கம் 525 – 536 (1942)
23. தில்லி மாநகர்த் திருவமர்மார்பன் திருக்கோயிற் காட்சி : செந்தமிழ் தொகுதி – 40, பக்கம் 1 – 8 (கார்த்திகை 1942)
24. நட்டபாடைப் பண்ணின் எட்டுக்கட்டளைகள் : செந்தமிழ் தொகுதி – 41, பக்கம் 9 – 14 (1943)
25. தென்னாட்டில் ஊற்றெடுத்த அன்புப் பெருக்கு வடநாட்டில் பரவிய வன்முறை : செந்தமிழ் தொகுதி – 40, பக்கம் 73 – 80. செந்தமிழ் தொகுதி – 41, பக்கம் 41 – 46 (மார்கழி 1943 – 1944)
26. பாரிஜாதவீணை : செந்தமிழ் தொகுதி – 42, பக்கம் 1 – 4 (கார்த்திகை 1944)
27. இமயம் சேர்ந்தகாக்கை : தமிழ்ப்பொழில் - 16ம் துணர், பக்கம் 367 – 375 (இக்கட்டுரை உரைநடை விருந்து என்னும் நூலிலும் வெளிவந்தது. பக்கம் 85 – 91, 4ம் பதிப்பு 1955)
28. உள்ளம் கவர்கள்வன் : தமிழ்ப்பொழில் - 16ம் துணர், பக்கம் 335 – 341.
29. திருக்குறள் முதலதிகாரமும் திருச்சிரபுரத்துத் திருப்பதிகாரமும் – தமிழ்ப் பொழில் 16ம் துணர், பக்கம் 207 – 213.
30. நீரரமகளிர் இன்னிசைப்பாடல் : தமிழ்ப்பொழில் - 16ம் துணர், பக்கம் 291 – 296
31. பண்ணும் திறனும் : தமிழ்ப்பொழில் - 16ம் துணர், பக்கம் 391 – 448
32. லகர வெழுத்து : தமிழ்ப்பொழில் - 16ம் துணர், பக்கம் 189 – 195
33. உணவு : தமிழ்ப்பொழில் - 17ம் துணர், பக்கம் 9 - 13
34. குழலும் யாழும் : தமிழ்ப்பொழில் - 17ம் துணர், பக்கம் 26 – 30, 35 - 43
35. கண்ணகியார் வழக்குரை : தமிழ்ப்பொழில் - 17ம் துணர், பக்கம் 59 - 61
36. எண்ணும் இசையும் : தமிழ்ப்பொழில் - 17ம் துணர், பக்கம் 67 – 71, 95 – 107, 127 – 130, 158 - 160
37. பாலைத்திரிபு : தமிழ்ப்பொழில் - 17ம் துணர், பக்கம் 246 – 249, 278 – 281, 306 – 309, 338 – 341, தமிழ்பொழில் 18ம் துணர், பக்கம் 5 - 12
38. சுருதி வீணை : தமிழ்ப்பொழில் - 18ம் துணர், பக்கம் 41 – 48, 81 - 87
39. இயலிசை நாடகம் : தமிழ்ப்பொழில் - 18ம் துணர், பக்கம் 160 – 170
40. கங்கையில் எழுதியிட்ட ஓலை : (செய்யுள்) தமிழ்ப்பொழில் - 18ம் துணர், பக்கம் 411 – 441
41. பேரையூர் அம்பாள் குளம் பொய்யாத விநாயகர்திருவடி பரவிய தேவபாணி : தமிழ்ப்பொழில் - 22ம் துணர், பக்கம் 314 – 315 (சித்திரை – 1946)
42. சோழ மண்டலத்தமிழும் ஈழமண்டலத்தமிழும் : கலைமகள், பக்கம் 82 – 88 (1941)
43. தமிழில் எழுத்துக் குறை : கலைமகள்
44. ஆங்கிலவாணி : (ஆங்கில நாட்டின் கலைச்செல்வத்தை விளக்குவது) பண்டித மணி மு.கதிரேசச்செட்டியார் அவர்களின் 60ம் ஆண்டு நிறைவு விழா வெளியீடாகிய மணிமலரில் வெளிவந்தது.
45. மானசவாவி : திரு. பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களின் 60வது ஆண்டு நிறைவு விழா மணிமலரில் வெளியிடுவதற்காக எழுதப்பட்டது.
46. பயனுள்ள கல்வி : செந்தமிழ்ச்செல்வி - 12ம் சிலம்பு, பக்கம் 410 – 413 (1933ஃ34) (வித்தியாசமாசாரப் பத்திரிகை – பக்கம் 195-202 மார்ச் 1934)
47. தமிழ்;க்கலைச் சொல்லாக்க மகாநாடு தலைமையுரை : செந்தமிழ்ச்செல்வி - 15ம் சிலம்பு, பக்கம் 99 – 102, 149 - 155 (1936-37) (1936ம் ஆண்டு செப்டம்;பர் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் பேசியது)

செய்யுள் நூல்கள்

1. கணேச தோத்திர பஞ்சகம்
2. கதிரையம்பதி மாணிக்கப்பிள்ளையார் இரட்டை மணிமாலை
3. சுப்பிரமணிய சுவாமிகள் இரட்டை மணிமாலை
4. குமாரவேணவமணிமாலை.

அடிகள் தமிழில் எழுதிய வசன நூல்கள்
1. யாழ்நூல் என்னும் இசைத்தமிழ் நூல்
2. மதங்கசூளாமணி என்னும் நாடகத் தமிழ் நூல்
3. மதுரைத் தமிழ்ச் சங்கமுத்திரசாலை
4. நடராசவடிவம். தில்லைத் திருநடனம்
5. உமாமகேஷ்வரம்
6. கலைச் சொல்லகராதியின் ஒரு பகுதி


மொழி பெயர்ப்பு நூல்கள் :
1. சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள் (மொழிபெயர்ப்பு)
2. விவேகானந்த ஞானதீபம் (மொழிபெயர்ப்பு)
3. கருமயோகம்
4. ஞானயோகம்
5. நம்மவர் நாட்டு ஞான வாழ்க்கை.

அடிகளார் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள் :

1. The book of books of Tamil land-Thirukkural (தமிழக நூல்களுள் ஒரு நூல் திருக்குறள்) Vedanta Kesari - 1940
2. The Harps of Ancient Tamil Land and the twenty two srutis of Indian Musical Theory : Culcutta Review - 1941
3. The Origin and growth of Tamil Literature (தமிழ் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்) The Culcutta Heritage of India, Sri Ramakrishna Centenary Memo. ial. Vol.iii
4. Phonotics (தமிழ் நெடுங்கணக்கின் ஒலி வடிவத்தைப் பற்றியது) Modern Review.
5. The Harp with the thousand strings, page – 21-38, Ceylon University Review (1947)
6. The Development of Tami lion Religious Thought ,Annamalai University – Journal Vol – 1 No:2
7. The Gift of Tongues an Essay on the study of Language prabudda – Bharath Golden Jubilee Number – 1945, Pages 87 – 90


பல்கலைக்கழகத்தின் அவசியத்தை உணர்ந்தவர் சுவாமி விபுலாநந்தர்

இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பல்கலைக்கழகத்தின் அவசியத்தை உணர்ந்தவர் சுவாமி விபுலாநந்தர். இவர் பல்கலைக்கழகம் பற்றிக் கூறும் போது, 'கலை பயில்வோன் தனக்கியைந்த கல்வித் துறை இதுவெனத் தேர்ந்து, உணர்ந்து அத்துறையில் நிரம்பிய புலமை பெற முயலும் இடம் பல்கலைக்கழகமாகும்' என விளக்கியுள்ளார். இதனால் ஒரு சமூகத்தின் பல்வேறு விடயங்களை ஆராய்ச்சி செய்ய வேண்டிய தேவைப்பாடு உள்ளதால் தமிழ் நாட்டிலும் குறிப்பாக சென்னையிலும் சிதம்பரத்திலும் மற்றும் கொழும்பிலும் பல்கலைக்கழகங்கள் அமைவது சிறந்ததென விபுலாநந்தர் விரும்பினார். அதற்காக தம்மை முழுமையாக ஈடுபடுத்தினார். வளர்ச்சியடைந்த நாடுகளில் குறைவான சனத்தொகை உள்ள போதிலும் அதிகமான பல்கலைக்கழகங்கள் இருந்ததை உணர்ந்த சுவாமிகள் மேற்கூறிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் அமைவதால் பொதுமக்களிடையே கல்வியை பரப்பிடவும், மேல்நாட்டு விஞ்ஞானக் கல்வியை தமிழ்மொழி மூலம் புகட்டிடவும் பல்கலைக்கழகங்கள் அவசியம் நிறுவப்பட வேண்டுமென இவர் பல விதந்துரைகளைச் செய்தார். இதன் விளைவாக 1929இல் சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றுவதற்கு விபுலாநந்த அடிகளாரையே தகுதியெனக் கண்ட இராஜா சேர் அண்ணாமலைச் செட்டியார் அப்பதவியை ஏற்குமாறு சுவாமிகளை அழைத்தார். அதனை ஏற்றுக் கொண்டு 1931 இல் அப்பதவியில் அமர்ந்தார். இதன் மூலம் தமிழ்நாட்டில் முதற்தமிழ் பேராசிரியர் எனும் சிறப்பினையும் பெற்றுக் கொண்டார்.

இந்தக்காலப்பகுதியில் சிலப்பதிகாரத்தில் தனக்கிருந்த புலமையைப் பயன்படுத்தி பல்வேறு மாணவர்களுக்கு போதனைகளைச் செய்தார். இசை நுணுக்கம் பற்றியும்இ இசைக் கருவிகளையும் குறிப்பாக யாழையும் பற்றிய ஆராய்ச்சி அங்கு ஆழமாக இடம் பெற்றது. பின்னர் சுவாமி விவேகானந்தருடைய பல நூல்களை தமிழில் மொழி பெயர்த்தார். பிற்பட்ட காலத்தில் சென்னை பல்கலைக்கழகத்திலும் தமிழாராய்ச்சிப் பிரிவினை அமைப்பதற்கு அவர் பங்களிப்புச் செய்தார். அவ்வராய்ச்சிப் பிரிவு மூலமாக பல்வேறு விரிவுரைகளைச் செய்தார். இதற்கு பிற்பாடு 1943 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக கடைமையாற்றினார். இதனால் இலங்கையில் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பதவியைப் பெற்றார். இக்காலப்பகுதியில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையை வளர்ப்பதற்குப் பாடுபட்டார். தமிழ் முதுமாணி வகுப்புகளை ஆரம்பித்து வைத்தார். அதுபோல் 'தமிழ் வித்துவான்' வகுப்புக்களிலும் ஆர்வங் காட்டினார். இதன் மூலம் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களின் உயர் கல்விக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். மேலும் இலங்கையில் கல்வித் துறை தொடர்பான எல்லாக் குழுக்களிலும் அங்கத்தவராகத் திகழ்ந்தார். இசைக்கல்வியினுடைய வளர்ச்சிக்கும் அவர் பல முயற்சிகளைச் செய்தார். இவ்வாறு தன்னிடமுள்ள மொழிப் புலமை, ஆராய்ச்சிப் புலமை, விஞ்ஞான அறிவு, இசை சார்ந்த அறிவு போன்றவைகளைக் கொண்டு யாழ் நூலினை எழுதினார். யாழ் நூல், மதங்க சூளாமணி ஆகியன விபுலாநந்தரின் படைப்புக்களில் மிக உன்னதமானவை. எதிர்கால பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கு வித்திடும் வகையில் இவ்வாராய்ச்சி நூல்கள் அமைந்துள்ளன. இருப்பினும் இன்றுவரை இவை தொடர்பான ஆராய்ச்சிகள் கணிசமானளவு இடம் பெற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


விபுலாநந்தரது பௌதீகதீத நோக்கு:

அடிகளார் கீழைத்தேய சிந்தனை மரபில் முனிவர்களதும், சித்தர்களதும், துறவிகளதும் ஒழுக்க வாழ்வியல்களிலும் சிந்தனைகளிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இந்திய அல்லது தமிழர் வாழ்வியலின் அர்த்தத்தை உணர்ந்து கொண்டவர். இவர் தனது வாழ்வில் கடமையின் மூலமாக பல சாதனைகளைச் செய்தார். மனிதன் வாழ்வில் தனக்கும் அப்பால் ஒரு சக்தி உள்ளது என்பதை உணர்ந்த சுவாமி அவர்கள் கருத்தியல்சார் அல்லது பரம்பொருள் சார் விடயங்களை உணர்ந்து கொண்டார். ஆரம்பத்தில் இருந்தே இவரது குடும்பம் கண்ணகி வழிபாட்டில் ஈடுபாடு காட்டியதனால் அதனை அடிப்படையாகக் கொண்டு அவரது சமய சிந்தனைகளும் அமைந்திருந்தன. குறிப்பாக மனிதன் மனிதனாக வாழ்வதற்கு புலன் அடக்கமும், தியானமும் அவசியமென சுவாமி அவர்கள் அவரது கட்டுரைகள், கவிதைகள், நூல்கள் ஆகியவற்றினூடாக உணர்த்தினார்.

புலனடக்கத்தின்; இன்றியமையாமை, துறவிகள் மட்டுமன்றி இல்லறத்தாரும், ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் புலனடக்கத்தை மேற்கொள்வதால் ஏற்படக்கூடிய மாபெரும் நன்மைகள், புலன்வழி செல்வதால் ஏற்படும் மாபெரும் தீங்குகள், அழிவுகள் பற்றி நுணுக்கமாக பல கருத்துக்களை கூறுகின்றார். புலன்களை அடக்குவதன் மூலம் அரும் பெரும் சாதனைகளைச் செய்யலாம் என 'விபுலாநந்த உள்ளம்', 'விபுலாநந்த அமுதம்' எனும் இரு கட்டுரைத் தொகுதிகளிலும் உள்ள கட்டுரைகள் விசேடமாக உணர்த்துகின்றன. இதனால் சமய ஞானிகள் போலவும்இ புத்தரது போதனைகள் போலவும் மனிதன் மனிதனாக வாழ்வதற்கு அல்லது மனிதன் பௌதீக உலகில் வாழ்ந்து பௌதீகதீத உலகு தொடர்பான விடயங்களை கருத்தியல் ரீதியாக உணர்வதற்கு புலனடக்கமும்இ தியானமும் முக்கியமான கருவிகளென சுவாமிகள் சுட்டிக் காட்டுகின்றார். இவை எல்லோருக்கும் எடுத்துக் காட்டுக்களாக அமைகின்றன.

விபுலாநந்தரது கல்விச் சிந்தனைகள் :

விபுலானந்தர் ஆன்மீக நெறியுடன் இணைந்த கல்விஇ மூடப்பழக்கவழக்கங்கள் இல்லாது போதல், கல்விக்கு அடிப்படை புலன் அடக்கமும் தியானமும், கல்வியில் அனைவருக்கும் சம வாய்ப்பு, தீண்டாமை ஓழிப்பு, தாய் மொழிக் கல்வி, தேச நலன் பேணக்கூடிய கல்வி, மத வேறுபாடுகளை கருத்தில் கொள்ளாது மக்கள் ஐக்கியமாதல் போன்ற விடயங்களுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்திருந்தார். உலகின் தலைசிறந்த கல்விச் சிந்தனையாளர்களதும் உளவியலறிஞர்களதும் சீரிய கருத்துக்கள் பல பின்னிப்பிணைந்து காணப்படுகின்றன. சமயங்கள் யாவும் ஒருவனாக இருக்கும் இறைவனையே தேடுகின்றன. அவ்விறைவனின் பாதமலரை அடைவதே வாழ்க்கையின் இறுதி இலக்கு. இவ்விலக்கினை அடைவதற்கேற்ற ஞான ஒளியினை ஒருவரது அகத்தில் பிரகாசிக்கச் செய்வதையே கல்வி நோக்காகக் கொள்ள வேண்டும் என்றார். 1933இல் குமரன் பத்திரிகையில் எழுதிய 'பயனற்ற கல்வி', 1934 இல் வித்தியா சமாச்சாரப் பத்திரிகையில் எழுதிய 'பயனுள்ள கல்வி'இ 1938 இல் எழுதிய 'இலங்கை புதிய கல்வித் திட்டத்திற்கு ஆதரவு' ஆகிய கட்டுரைகள் அவரது கல்வியியற் சிந்தனைகளை வெளிப்படுத்தக்கூடிய படைப்புகளாகும்.

கல்விமுறை எவ்வாறு அமைய வேண்டுமென அடிகளார் கூறும் போது, பிறர் உதவியை நாடி எழுந்து உட்காருபவன் நொண்டி, சிறுவயதிலே எழுதவும் படிக்கவும் தெரிய வேண்டும், அதனுடன் நல்லொழுக்கமும் தெய்வபக்தியும் ஊன்ற வேண்டும். இதற்கு குருகுல கலாசாலையே அவசியமாகும். சிறுவயதிலே இம்மாதிரி கல்வி கற்ற பிறகு தன் குலத்தொழிலோ அல்லது சிறுவனுக்கு எத்தொழில் கற்க வேண்டுமென்று ஆர்வமுண்டாகின்றதோ அதனைப் போதிக்க வேண்டும், அப்படிச் செய்தால் மாணவப்பருவம் கழிந்ததும் சிறந்த தொழிலைப்பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

கலையும் அறிவியலும் இணைந்து நடைமுறையில் பயன்தரக் கூடிய வகையில் அமையும் கல்வி முறையை சுவாமி பெரிதும் விரும்பினார். அத்தோடு கலை, அறிவியல், மெய்ஞானம் ஆகிய மூன்றும் ஒருங்கிணையும் கல்வியே முழுமையான கல்வியாகும் என்னும் கருத்து அடிகளாரிடம் மேலோங்கியிருந்தது. மனிதவாழ்வுக்கு தேவையான கல்விப்பரப்புப் பற்றியும் அதனைப் பயில்வதற்கான காலவரையறை பற்றியும் அடிகளார் எடுத்துக் கூறியுள்ளதோடு எல்லாக் கலை ஞானங்களும் மனித வாழ்வு மேம்பாடடைய முக்கியமானவை என்றார். மாணவர் மனதில் இலகுவில் பதியத்தக்கதாக ஆசிரியர்களின் கற்பித்தல் அமைய வேண்டுமெனவும் ஆசிரிய தொழிலின் மகத்துவம் பற்றியும் சிந்தித்துள்ளார்.

தொகுத்து நோக்கும் போது கீழைத்தேய சிந்தனை மரபில் இயல், இசை. நாடகம், பௌதீகதீத சிந்தனைகள், கல்விச் சிந்தனைகள் என்பவற்றில் மிகவும் ஆளுமை பொருந்தியவராக சுவாமி அவர்கள் திகழ்ந்துள்ளார். இலங்கையிலும், இந்தியாவிலும் தமிழியல் சிந்தனைக்கு தன்னை அர்ப்ணித்த இவர் காந்திஜீ அவர்களுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்த அதே வேளை பாரதியாரின் புகழை வளர்ப்பதற்கு பாடுபட்டாh.; பிற மதத்தவர்களோடு நல் உறவினைப் பேணிவந்த இவர் சமயங்கள் பற்றிய புரிந்துணர்வைக் கொண்டிருந்தார். அத்தோடு சுவாமி அவர்களது கருத்துக்கள் பல மேலைத்தேய சிந்தனையாளர்களது கருத்துக்களுடன் இசைவாக உள்ளதை அவதானிக்க முடிகின்றது.

 

 

சூடான செய்திகள்

புதியவை