korg top cover

korg top cover mob

Womens day

பார் போற்றும் பெண்மையை 
நாம் போற்றும் மகளீர் தினம்

அனைத்து மகளீர்க்கும் எமது இணையக்குழுவினரின்

சர்வதேச மகளீர் தின வாழ்த்துக்கள்

சர்வதேச மகளீர் தினம் உருவான வரலாறு

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8–ம் நாள் உலகம் முழுவதும் மகளீர் தினம் கொண்டாடப்படுகிறது. இனம்,மொழி,கலாச்சாரம்,பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது. இதனை முன்னிட்டு உலக நாடுகளில் இத்தினத்தை பல்வேறுபட்ட தொனிப்பொருளில் ஆண்களுக்கு நிகரான உரிமைகளை முன்வைத்து கொண்டாடப் பெறுகின்றது.. 

1857 ஆம் ஆண்டு நியோர்க் ஆடைத் தொழிற்சாலையில் பெண்கள் 16 மணித்தியாலங்களும் ஆண்கள் 10 மணித்தியாலங்களும் வேலை செய்யவேண்டும் என்ற கட்டளைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற் கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து 1911 ஆம் ஆண்டு தொடக்கம் சர்வதேச மகளீர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8–ம் நாள் உலகம் முழுவதும் மகளீர் தினம் கொண்டாடப்படுகிறது. இனம்,மொழி,கலாச்சாரம்,பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு உலக நாடுகளில் இத்தினத்தை பல்வேறுபட்ட தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பழங்காலத்தில் கிரேக்கத்தில் போரை முடிவுக்கு கொண்டு வர பெண்கள் போராடினார்கள். பிரெஞ்சு புரட்சியின் போது பெண்கள் சுகந்திரம்,சமத்துவம் மற்றும் சகோதரத் தன்மை வேண்டி போராடினார்கள். ஆனால் கடந்த நூற்றாண்டில்தான் பெண்கள் தினம் கொண்டாடுவது கடைபிடிக்கப்பட்டது. 

1909-இல் அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சியின் அமெரிக்கா முழுவதும் பெண்கள் தினம் பிப்ரவரி 28-ல் கொண்டாடப்பட்டது. அதன் பின் பிப்ரவரி கடைசி ஞாயிற்றுகிழமை பெண்கள் தினம் கொண்டாடுவதாக அறிவிக்கப்பட்டது.  1910 ம் ஆண்டில் 17 நாடுகளிலிருந்து வந்திருந்த பெண்கள் கோபன்கேஹனில் கூடி பெண்கள் தினத்தை சர்வதேச அளவில் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன் பின் சர்வதேச அளவில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

1911 மார்ச்19 ல் முதல் சர்வதேச பெண்கள் தினம் இலட்சக்கணக்கான பெண்கள் அணிவகுத்த பேரணியால் அமர்க்களப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் 140 பெண்கள் வேலைக்கு சென்ற இடத்தில் கருகி இறந்தனர்.இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் நலன் கருதும் சட்டங்கள் அமெரிக்காவில் இயற்றப்பட்டன. 

இந்த சர்வதேச மகளீர் தினத்தை உலக நாடுகளில் ஒரே தினத்தில் கொண்டாடவேண்டும் என்பதற்கமைய 1913 ஆம் ஆண்டு தொடக்கம் ஒரே தினத்தில் இத்தினம் அணுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நாவும் பெண்கள் முன்னேற்றத்துக்காவும் அவர்கள் சமத்துவ கோரிக்கைகளுக்காவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. 1945-ல் சான்பிரான்ஸ்கோவில் நடந்த உடன்பாட்டின்படி பெண்களுக்கு சம உரிமை என்பது அடைப்படை உரிமையாக்கப்பட்டது. பெண்கள் தொடர்பான சர்வதேச கொள்கைகள், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றம் திட்டங்கள், லட்சியங்கள்  உள்ளிட்டவற்றை மேம்படுத்த ஐக்கிய நாடு உழைத்துள்ளது. 

1975- ம் ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடு அறிவித்தது. 1977-ல் ஐக்கிய நாடு பொதுச் சபையில் சர்வதேச பெண்கள் தினத்தை ஐக்கிய நாடு பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு பெண்கள் மாநாட்டுக்கும் ஐக்கிய நாடு ஏற்பாடு செய்தது. சர்வதேச அளவில் பெண்கள் தினம் கடை பிடிக்கப்பட்டதை அடுத்து பெண்கள் நலன் குறித்து சர்வதேச மாநாடுகளுக்கு அது ஊக்குவித்தது. 

அதன்பின் பெண்கள் தங்களது உரிமையினால் தங்களால் எதுவும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை இந்த நாள் உணர்த்தும் வகையில் உள்ளதோடு அவர்களின் முயற்சிகளுக்கு ஆண்களும் ஆக்கம், ஊக்கமும் அளிக்க வேண்டும் என்பதையும் இந்நாள் உணர்த்துகிறது. 

சட்ட நடவடிக்கைகள், பொதுக்கருத்து உருவாக்குதல், சர்வதேச நடவடிக்கைகள், பயிற்சி, ஆராய்ச்சியே அவைகள். நாட்டின் வளர்ச்சிக்கும் பெண்கள் முன்னேற்றத்துக்கும் உள்ள தொடர்புகள் அதிகம் என்றும் அதனால் பெண்கள் வளர்ச்சிக்கு ஒவ்வொரு அரசும் பாடுபடவேண்டும் என்றும் பல்வேறு அறிஞர்கள் தொடந்து கூறி வந்துள்ளார்கள், கூறியும் வருகிறார்கள். ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்கும் என்றும் பெண்களே இவ்வுலகின் கண்களென முண்டாசு கவிஞன் பாரதி முழங்கினான். அதனை இன்று உலக நாடுகளே ஏற்றுக் கொண்டு விட்டது.

இம்முறை கொண்டாடப்படும் சர்வதேச மகளீர் தினத்தை ஐக்கிய நாடுகள் சபை கல்வி பயிற்சி மற்றும் விஞ்ஞான தொழிநுட்பத்தில் சமத்துவ வாய்ப்பு, பெண்களுக்கு கண்ணியமான வேலைக்கான வழி எனும் தொணிப்பொருளில் கொண்டாடுகின்றது. 

இத்தினத்தில் உலக நாடுகளில் பெண்களின் உரிமைகள் தொடர்பாக குரல் கொடுக்கப்பட்டு வருகின்றதை நாமனைவரும் அறிந்த விடயமாகும். எனினும் இத்தினத்தை பாரிய அளவில் கொண்டாடப்பட்டாலும் பெண்களின் உரிமைகள் பேரளவில் மட்டுமே பேணப்படுவதாக அறிய முடிகின்றது.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோட்பாடுகள் பல நாடுகளில் இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி பல்வேறுபட்ட பெண்கள் உரிமை மீறல் செயற்பாடுகள் நாளாந்தம் அதிகரித்தவன்னமேயுள்ளதை நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்கின்றோம்.

பெண்கள் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உட்படுவது இ அவர்கள் கடத்தப்படுவது, அச்சுறுத்தப்படுவது, கொலை செய்யப்படுவது என பலவகையான துன்புறுத்தல்களுக்க உள்ளாக்கப்படுவது குறைந்தபாடில்லை. இலங்கையைப் பொருத்தமட்டில் கடந்த சில காலங்களாக பெண்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளமையை நாம் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.

பெண்கள் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாவதற்கு வறுமை, யுத்தம், ஆணாதிக்கம், பெண்கள் தனிமைப்படுத்தப்படல், அழகு போன்ற சில காரணங்களும் வழிசமைக்கின்றன.

பெண்களின் பிரச்சினைகளுக்க முதலில் வறுமை ஒரு காரணமாகும். இக்காரணமாக இந்த வறுமை அவர்களின் துஸ்பிரயோகத்திற்கு வழிவகுத்து அதன் இறுதிவடிவம்   வாழ்வின்   மரணத்திற்கு  இட்டுச்செல்கின்றது.

வறுமைக்கு அடுத்ததாக யுத்தமும் ஒரு காரணமாகும் ஒவ்வொரு நாட்டிலும் யுத்தம் இடம்பெறுகின்றபோது யுத்தக் காரணம் எதவாக இருந்தாலும் அதில் பங்கு கொள்பவர்கள் யுத்தத்தைக் காரணமாக வைத்து பெண்களை துன்புறுத்தவும், அவர்களுக்கு அடிபணியவைப்பதும், பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்தல் விதவைகளாக்குதல், அநாதைகளாக்குதல், மனச்சஞ்சலத்திற்குள்ளாக்குதல், ஈற்றில் அவர்களை கொலை செய்தல் என்பன சர்வசாதாரணமாக இடம்பெறுகின்றமை நாளாந்தம் தொலைக்காட்சி, வானொலி இபத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களினூடாக நாம் காண்கின்றோம்.

இதேபோல் சமுதாயத்தில் ஆண் ஆதிக்கம் அதிகரிப்பதால் பெண்கள் அவர்களுக்கு அடிபணியும் நிலைமை ஏற்படுகின்றது இதன்காரணமாக அவர்களை அவர்கள் தொழில்புரியும் இடங்கள், கல்வி கற்கும் நிலையங்கள் போன்ற இடங்களில் அவர்கள் இலகுவாக துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர். இவ்வாறான இடங்களில் ஏற்படும் பாதிப்புகளில் அதிகமானவை வெளிவருவதில்லை காரணம் அச்ச நிலைமையும் காரணமாக அமைகின்றது.

அடுத்து பெண்கள் தனிமைப்படுத்தப்படல் அவர்களுக்கு உரிய பாதுகாவளர்கள் இல்லாத காரணத்தால் இவ்வாறான செயற்பாடுகளைச் செய்பவர்கள் சில நேரங்களில் இனங்காணப்பட்டாலும் அவர்கள் உரிய முறையில் தண்டணைகளை அனுபவிப்பதில்லை. குறிப்பாக சிலவேளைகளில் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் கண்டும் காணாதுபோல் இருத்தல், ஆட்சி அதிகாரங்களில் உள்ள அரசியல் செல்வாக்குடையவர்கள் அதிலிருந்து பாதுகாக்கப்படல் சட்டத்தில் உள்ள சில குறைபாடுகள், பணம் படைத்தவர்களின் செல்வாக்கு  காரணமாக அதிலிருந்து தப்பித்துக் கொள்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் தொடர்ந்தும் அந்தச் செயல்களில் ஈடுபடுவதற்கு வழிகோலுகின்றதுடன் பெண்களின் சிரழிவுக்க அவை மேலும் வழுவூட்டும் செயலாக அமைகின்றது.

கடந்த பல தஸாப்தங்களை நாம் எடுத்துக் கொண்டால் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டு வழி நடாத்தப்பட்டு வந்த சந்தர்ப்பங்களை நாம் வரலாறுகள் மூலம் கற்றுக்கொண்டுள்ளோம். இதற்கு ஒரு சில சமயங்களும் ஒரு காரணமாக இருந்து வந்துள்ளது. அவர்களுக்கு உரிய பங்களிப்பை வழங்காது எல்லாவற்றிற்கும் கட்டுபாடுகளும், முட்டுக்கட்டைகளும் கொடுக்கப்பட்டதால் அவர்கள் தமது ஆற்றல்களை சமுதாயத்தின் முன் கொண்டுவர முடியாத ஒரு சூழல் உருவாக்கப்பட்டு வந்துள்ளதை நாம் அறிவோம். ஆனால் இன்றய சமுதாயத்தில் எத்துறையை எடுத்துக் கொண்டாலும் பெண்களின் பங்களிப்ப இல்லாத துறை இல்லையெனலாம்.

அந்தளவுக்கு முன்னைய காலத்திற்கு முற்றிலும் மாறுபட்ட சமுக கட்டமைப்ப உருவாகியுள்ளது. கடந்த தஸாப்தங்களில் பெண்கள் தாழ்த்தப்பட்ட, பேச்சுரிமை, கல்வி கற்கும் உரிமை, வேலை பார்க்கமுடியாத நிலை, கருத்துக் கூற முடியாத  நிலை உள்ளிட்ட பல உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவே பல துன்பியல் நிலமைகளுக்குட்பட்டவர்களாக அடிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

பெண்களைப் பொருத்தமட்டில் இன்றைய நூற்றாண்டுகள் ஏதோ ஒருவகையில் ஜனநாயக உரிமைகளைப்பெற்று ஆண்களுக்கு ஈடாக சமசந்தர்ப்பம் பெற்றவர்களாக திகழ்கின்றனர். குறிப்பாக தொழில் புரியக்கூடடிய உரிமைகள், பல அமைப்புகளுக்க தலைமை தாங்கும் சக்தி, பல நிறவயங்களை வழி நடத்தக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளமை, அரசியல்வாதிகளாக உள்ளமை, அரசாங்க ஆட்சியில் பங்குபெற்றவர்களாக காணப்படுகின்றமை, விஞ்ஞானிகளாக காணப்படல் போன்ற  பல துறைகளிலும் ஆண்களுக்கு ஈடாக ஆதிக்கம் செலுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது  மட்டுமல்லாது  பெண்கள் இன்று விண்வெளிக்குச் செல்லும் அளவிற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது மட்டுமல்லாது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

எனினும் இவ்வாறு இந்நூற்றாண்டில் சமுதாயத்தில் முன்நின்றாலும் பெண்கள் அன்று தொட்டு இன்றுவரை அவர்களுக்க எதிரான வன்முறைகளுக்கு இலக்கானவர்களாகவே காணப்பட்டுவருகின்றமை மனக்கசப்பிற்கு உட்பட்டதொரு விடயமாகும். குறிப்பாக பெண்வர்க்கம் மீது கட்டவிழ்த்துவிடப்படுகின்ற அராஜகம், வக்கிரத்தன்மை, என்பன மறைமுகமாகவும், நேரடியாகவும் பெண்கள் மீது அதிகரித்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இன்றைய கால கட்டத்தில் அதிகளவான பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகள் இடம்பெற்று வந்தாலும் அவற்றில் கணிசமானவை ஊடகங்கள் வாயிலாக வெளிவருவதில்லை அதற்கு சில காரணம்களுமுண்டு குறிப்பாக  அரசியல் செல்வாக்கும், ஊடகங்கள் மீதான தாக்குதல்களும் காரணமாக அமைகின்றன.

குறிப்பாக பெண்களும் சிறுவர்களும்  துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாவதற்கு மேற்கத்தைய நாகரீகங்களும், கலாச்சார சீரழிவுகளும்  முக்கியமான பங்கை வகிக்கின்றன. ஏனெனில் அவர்களுது கலாச்சாரத்தில் ஆணும் பெண்ணும் பொது இடங்களில் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலை காணப்படுகின்றது. அதனை  அவதானிக்கும் ஒருவர் அந்தச் செயலில் ஈடுபடுவதற்கு தூண்டுகின்றது. இதனால் அது சமூகத்தில் பாரிய தாக்கத்தை உண்டு பண்னுகின்றது எனலாம்.

எமது நாட்டைப் பொருத்தமட்டில் மேற்கத்தை நாகரீக, கலாச்சார சீரழிவுகள் அதிகளவில் தாக்கத்தை உண்டுபண்யுள்ளதுடன் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படாமை போன்ற காரணங்கள் குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகின்றது.

இவ்வாறான காரணங்கள் நேரடி மற்றும் மறைமுகத் தாக்ககங்கள் எமது நாட்டிலும் பெண்கள் துஸ்பிரயோகங்களுக்கு பாரிய தாக்கத்தை உண்டுபன்னியுள்ளது. உண்மையில் இதனைக்கட்டுப்படுத்தும் விடயத்தில்  உலக நாடுகளில் ஒரு பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றன. மதத்தலைவர்கள் கூட துஸ்பிரயோக விடயங்களில் பாரிய முயற்சிகளையும் பிரச்சாரங்களையும் மேற்கொண்டபோதிலும் அவை மூலம் ஆக்கபூர்வமான முன்னேற்றங்களைக் கண்டுகொள்ள முடியவில்லை எனலாம்.

எனவே பெண்கள் துஸ்பிரயோகம் என்று கூக்குரல் இடுவதும் நிகழ்வுகள் கொண்டாடுவதும், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் மேற்கொள்வதனாலும் கட்டுப்படுத்த முடியாது.  மாறாக சிறுபராயத்திலிருந்து சமுதாயச் சீரழிவு தொடர்பான கல்வியை புகட்டுவதும் மத ரீதியாக பெண்கள் துஸ்பிரயோகம் தொடர்பான விளிப்புணர்வுகளை மேற் கொள்வதுடன் குற்றச்செயல்கள் தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்படுவதுடன் குற்றச் செயல்களில்ஈடுபடுபவர்கள் இனங்கானப்படும் பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுத்து தண்டனைகள் வழங்கப்படுவதனை ஒவ்வொரு அரசாங்கமும் உறுதிப்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் ஓரளவாவது அவற்றை கட்டுப்படுத்த முடியுமே தவிர வேறு எந்த நடவடிக்கைகளும் ஆக்கபூர்வமான முன்னேற்றத்தை கண்டு கொள்ளமுடியாது.

சூடான செய்திகள்

புதியவை