korg top cover

korg top cover mob

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பன்னெடுங்காலமாக நம் நாட்டில் வழக்கத்தில்

உள்ள பழமொழியும் பொன்மொழியுமாகும். தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக்
கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா.

மகரத்திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு இலங்கை மலேசியா சிங்கப்பூர் ஐரோப்பிய
நாடுகள் வட அமெரிக்கா தென் ஆபிரிக்கா மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து
நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேகத் தமிழர்களால்
கொண்டாடப்படுகிறது.

பொங்கல் உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு
நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. மலேசியாஇலங்கை உள்ளிட்ட சில நாடுகளில்
பொங்கல் பண்டிகையன்று அரசு விடுமுறையும் கூட விடுகிறார்கள்.

பொங்கல் பண்டிகையின் தோற்றம் எப்போது என்று உறுதியாகத் தெரியவில்லை. 1000
ஆண்டுகளுக்கு முன்பு வந்தது இந்த பண்டிகை ஒன்று ஒரு கூற்று உள்ளது. 2000
ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது கொண்டாடப்படுகிறது என்று இன்னொரு கூற்றும்
உள்ளது.

சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு புதியீடு என்று பெயர் இருந்தது. அதாவது
ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். உழவர்கள் தை மாதத்தின் முதல்
நாளில் அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. இதுதான்
பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என்கிறார்கள்.


பொங்கல் பண்டிகை மொத்தம் 3 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகி
பண்டிகை. அடுத்த நாள் பொங்கலிடும் நாள். 3வது நாள் மாட்டுப் பொங்கல். நமக்கு
காலமெல்லாம் கை கொடுத்து உதவும் மழை சூரியன் விவசாயத்திற்குப் பயன்படும்
கால்நடைகள் ஆகியவற்றுக்கு நன்றி கூறும் நல் வாய்ப்பாக இந்த திருநாள்
கொண்டாடப்படுகிறது.

தை பிறந்தால் வழி பிறக்கும்!

கிராமத்தில் இன்றளவும் தைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். எதுவாக
இருந்தாலும் தை பிறக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்பார்கள். கல்யாணம் பேச
தை வரட்டும். ஜாதகம் பார்க்கலாம் என்று சொல்வார்கள். கொடுக்க வேண்டிய
காசுக்கும் வரவேண்டிய பணத்துக்கும் தை மாதத்தை எதிர்பார்ப்பார்கள். ஏனென்றால்
தையில்தான் அறுவடை முடிந்து கையில் காசு பணம் புரளும். சுப விசேஷங்களுக்கு தை
மாதம் மிகவும் சிறந்தது. கல்யாணம் நிச்சயதார்த்தம் வளைகாப்பு கிரகப்பிரவேசம்
என எல்லா சுபநிகழ்ச்சிகளுக்கும் இந்த மாதத்தில் குறைவிருக்காது.

தமிழர் திருநாள்... தைப் பொங்கல் அறுவடைத் திருநாள் என கூறப்படும் பொங்கல்
பண்டிகை தமிழர் பண்டிகை ஆகும். பொங்கல் என்பதற்கு சாப்பிடும் பொங்கல் என்று
பொருள் அல்ல. பொங்கிப் பெருகி வருவது என்று பொருள். தமிழர்கள்
இருக்குமிடமெல்லாம் பொங்கல் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

இலக்கியகாலத்து இந்திரவிழா!

பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே
இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க உண்மையாக இருந்து வருகிறது. இந்திரவிழா
என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. மணிமேகலையின் ஆரம்பமான
விழாவரை காதையில் இந்திர_விழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த
விழா காவிரி பூம்பட்டினத்தில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இப்போது பொங்கல்
தைப்பொங்கல் மாட்டு பொங்கல் காணும் பொங்கல் என்ற மூன்று நாட்கள் மட்டுமே
கொண்டாடப்படுகிறது.


இந்திர விழா என்ற பெயரில் நல்ல மழை பொழியவும் நாடு செழிக்கவும் இந்திரனை
ஆயர்கள் வழிபட்டு வந்தனர். ஆயர்கள் பக்தியோடும் பயத்தோடும் இந்திரனை
வழிபட்டனர். ஆகவேஇ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரைப்படி ஆயர்களுக்கும்
அவர்தம் ஆநிரைகளுக்கும் வளங்கள் தரும் கோவர்த்தன மலைக்கு ஆயர்கள் மரியாதை
செய்தனர் . இதனால் கோபமுற்ற இந்திரன் புயலாலும்இ மழையாலும் ஆயர்களை
துன்புறுத்தினான். கோவர்த்தன மலையை குடையாய் பிடித்து இந்திரனிடமிருந்து
ஆயர்களையும் அவர் தம் ஆநிரைகளையும் ஸ்ரீ கிருஷ்ணர் காத்தருளினார். பகவான் ஸ்ரீ
கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாய் பிடித்து இந்திரனிடமிருந்து ஆயர்களையும்
அவர் தம் ஆநிரைகளையும் காத்த நாளே சூரிய நாராயண பூஜையாகும்.இந்திரன் தன் தவறை
உணர்ந்து கண்ணனிடம் தன்னையும் மக்கள் வழிபட வேண்டும் என்று வேண்டிக்கொண்டதால்
தை 1-ம் நாள் முன்தினம் இந்திர வழிபாடை(போகி பண்டிகை) ஆயர்கள் கொண்டாடினர்.

தை 1-ம் நாள் சூரியபகவானை சூரியநாராயணராக பாவித்து வழிபட்டனர். அதன் மறுநாள்
தங்களின் ஆநிரைகளுக்கு விழா (மாட்டுப்பொங்கல்) எடுத்து தங்களின் உணவுகளை
அவைகளுக்கு படைத்தும் காளைகளுடன் விளையாடியும் (ஜல்லிக்கட்டுஇமஞ்சு விரட்டு)
விழாவை கொண்டாடினர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல்
கொண்டாட்டமாக மாறியது.

அயனம் என்றால் காலம் பாதை பயணம் எனப் பொருள். சாஸ்திரத்தில் தட்சிணாயனம்
உத்தராயனம் என காலத்தை இரண்டு வகையாக குறிப்பிட்டுள்ளனர். தை மாதத்தில்
சூரியன் மகர ராசியில் உத்திராடம் நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் நுழையும்போது
உத்திராயன புண்ணிய காலம் துவங்குகிறது.
நல்ல நாள் எது?.
ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் குடும்பங்களில் புதுமனை புகுதல் காதுகுத்துதல்
திருமணம் என்று ஏதாவது ஒரு சடங்குகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.
அப்படிப்பட்ட சமயங்களில் அனைவரும் தினசரி காலண்டரையோ அல்லது பஞ்சாங்கத்தையோ
பார்த்து தான் நாள் குறிப்போம்.ஒரு சிலர் ஏதாவது ஒரு ஜோசியர் அல்லது கோயில்
குருக்களிடம் கேட்டு நல்ல நாள் குறிப்பார்கள்.
மேல்நோக்கு நாள் அமிர்தயோக நாள் சுபமுகூர்த்த நாள் என பொதுவாகப் பார்த்து நாள்
குறிக்காமல் அவரவர் ராசி நட்சத்திரம் பிறந்த தேதி கிழமை இவற்றை அடிப்டையாகக்
கொண்டு நாமே நல்ல நாள் பார்க்கலாம்.
நாள் என்ன செய்யும்?
நாள் (வாரம்) திதி நட்சத்திரம்யோகம் கர்ணம் என்ற ஐந்தும் சேர்ந்ததே
பஞ்சாங்கம். இந்த ஐந்தும் அடங்கிய பஞ்சாங்கத்தில் முதல் அங்கமாக வருவது வாரம்
அதாவது கிழமை அல்லது நாட்கள்.
பஞ்சாங்கத்தில் நம் முன்னோர்கள் என்றைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்
என்பதற்குக் கூட நாள் குறித்து வைத்திருக்கிறார்கள்.
ஞாயிறு திங்கள் புதன் வியாழன் வெள்ளி ஆகிய கிழமைகள் திருமணம் ஹோமம் சாந்திகள்
போன்ற நற்காரியங்களுக்கு விசேஷமானவை.
செவ்வாய் நெருப்பு கிரகம் என்பதால் செவ்வாய்க் கிழமை அக்னி சம்பந்தமான
செயல்களுக்குரியது. சனிக்கிழமை இயந்திர சம்பந்தமான பணிகளுக்கு உரிய நாள்.

ஞாயிற்றுக்கிழமை: சூரியன் ஆரோக்கியத்தை அளிப்பவன். அதனால் நீண்டகால
பிணிகளுக்கு மருத்துவர் ஆலோசனை பெற்று மருந்து உண்ண ஆரம்பிக்கலாம். வடக்கு
திசை நோக்கி பயணம் செய்யலாம். அரசுப்பணித் தொடர்பான விஷயங்களுக்காக உரிய
அலுவலர்களை நேரில் சந்திக்கலாம்.
திங்கட்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். கிருகப் பிரவேசம் நடத்தலாம்.
காதுகுத்துதல் பெண் பார்த்தல் ருது சாந்தி செய்தல் (சாந்தி முகூர்த்தம்)
சீமந்தம் விருந்து உண்ணல் போன்ற விசேஷங்களை செய்யலாம். ஆடுமாடு வாங்குதல்
விதையிடுதல் உரமிடல்இ வியாபராம் துவங்குதல் ஆகியவையும் செய்யலாம்.
செவ்வாய்க்கிழமை: கிழக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். வாங்கிய கடனை அடைத்தல்
வயலுக்கு உரமிடல் செங்கல் சூளைக்கு நெருப்பிடுதல் ஆகியன செய்ய ஏற்ற நாள் இது.
செவ்வாய்க்கிழமைகளில் பொருள் வாங்கினால் அது வருவாயைப் பெருக்கும். அதனால்
வீட்டில் செல்வம் பெருகும்.
புதன் கிழமை: மேற்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். புதிய ஆராய்ச்சி எழுத்துப்
பணிகளைத் துவங்கலாம். வழக்குகள் சம்பந்தமாக வழக்கறிஞரை சந்தித்தல் புதுமனை
புகுதல் குளம் ஏரி கிணறு வெட்டுதல் நிலத்தை உழுதல்விதையிடுதல் அறுவடை செய்தல்
காது குத்துதல் சீமந்தம் விருந்து உண்ணல் போன்ற சுபகாரியங்கள் செய்யலாம்.
கல்வி கலை போன்றவற்றைக் கற்க ஆரம்பித்தல் ஆகியவற்றுக்கு ஏற்ற நாள் இது.
வியாழக்கிழமை: மேற்குதிசையில் பயணிக்கலாம். புதிய பணியில் சேரலாம். வங்கிப்
பணிகள் கவனித்தல் பெரிய மனிதர்களை சந்தித்தல் சீமந்தம் ருது சாந்தி காது
குத்துதல் கிருகப் பிரவேசம் விவசாயம் சம்பந்தப்பட்ட பணிகள் இவற்றைச் செய்ய
ஏற்ற தினம்.
வெள்ளிக்கிழமை: வடதிசை நோக்கி பயணம் செய்யலாம். பெண் பார்க்கச் செல்லலாம்.
காது குத்துதல் சாந்தி முகூர்த்தம் புதிய வாகனங்கள் வாங்குதல்நிலத்தினை உழுதல
உரமிடல் இவற்றைச் செய்ய ஏற்ற நாள் இது.
சனிக்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். பூமி தொடர்பான விஷயங்கள் அதாவது
வீடு நிலம் மனை வாங்குதல் விற்றல் போன்ற செயல்களுக்கும் இயந்திரங்கள்
வாங்குதல் போன்ற இரும்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் உகந்த நாள்.
திங்கள் புதன்வியாழன் வெள்ளி ஆகிய நாட்களை சுபநாட்கள் எனவும்; ஞாயிறு செவ்வாய்
சனி ஆகிய நாட்களை அசுப நாட்கள் எனவும் சிலர் கூறுவர். சுப நாட்களிலும் பிரதமை
அஷ்டமி நவமி ஆகிய திதிகள் வரும் நாட்களை தவிர்ப்பது நல்லது. சில கிழமைகளில்
வரும் நட்சத்திரங்களைப் பொறுத்தும் அன்று சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க
வேண்டும்.

ஒரே மாதத்தில் இரு பவுர்ணமிகள் வந்தால் அதுவும் மலமாதமே. ஆனால் பவுர்ணமி
திதியில் சுபகாரியங்கள் மட்டுமே செய்யப்படுவதால் அந்த மாதத்தினை விலக்குவது
இல்லை.
எனவே நல்லநாள் பார்த்து சுபகாரியம் செய்வோர் அல்லது இன்றிலிருந்து செய்வோம்
என்று திடசங்கற்பம் பூணுவோர் இவற்றைக்கடைப்பிடிக்க இவை உபயோகப்படலாம் என்பது
சித்தமாகும்.

அதேசமயம் பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் பட்டு வரும் பல்வேறு அவதிகள் ஒழிந்து
வரும் ஆண்டில் எல்லா வளமும் நலமும் பெற்று அமைதியுடன் வாழவும் சூரியக்
கடவுளைப் பிரார்த்திப்போம்.


. விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா

thai pongal

சூடான செய்திகள்

புதியவை