korg top cover

korg top cover mob

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய  வருடாந்த பங்குனி உத்தர அலங்கார உற்சவம்.

Ourkannakiamman

இலங்காபுரியின் பூர்ப பாகமாகிய கிழக்கிலங்கை காரைதீவு பதியில் பண்நெடுங்காலமாக போற்றி வழிபட்டு வரும் பழமை வாய்ந்த திருத்தலமாகிய காரைதீவில் சர்வான்மாக்களும் வலிபட்டுய்யும் வண்ணம் கோயில் கொண்டு அருள் பாலிக்கும் ஸ்ரீ கண்ணகி அம்பாளுக்கு நிகழும் மங்களகரமான துர்முகி வருடம் பங்குனித்திங்கள் 18ம் நாள் 31.03.2017 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு விஷேடஅபிஷேக பூஜைகளுடன் அலங்கார உற்சவம் ஆரம்பமாகி 10 நாட்கள் நடைபெற திருவருள் பாலித்துல்ளளதால் பக்த அடியார்களை ஆலையத்திற்கு வருகை தந்து தொண்டுகள் புரிந்து அம்பாளின் இஷ்ட சித்திகளைப் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றனர்  ஆலைய நிர்வாகத்தினர்.

அலங்கார உற்சவ கிரியை கால நிகழ்வுகள் 

31.03.2017  வெள்ளிக்கிழமை முதல் 08.04.2017 சனிக்கிழமை வரையும் காலை 10.00 மணிக்கு கும்ப பூசை பகல் 12.00 மணிக்கு விஷேட பூசை,மாலை 6.30 பூசையும்,மாலை 7.00 மணிக்கு நற்சிந்தனையும்,மாலை 7.30 மணிக்கு வசந்த மண்டப பூசையும் அம்பாள் உள்வீதி,வெளிவீதி திருவுலா.

06.04.2017 வியாழக்கிழமை மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலையத்தில் இருந்து காலை 8.00 மணிக்கு பாற்குட பவனி ஆரம்பமாகும்.

08.04.2017 சனிக்கிழமை மாலை அம்பாள்,விநாயகர்,முருகப்பெருமான் சகிதம் தேரோடும் வீதி வழியாக அலங்கரிக்கப்பட்ட முத்துசப்பிரத்தில்  திருவுலா வருவார்கள் .

09.04.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு சமுத்திர தீர்த்தமும்,மாலை 7.00 மணிக்கு அம்பாள் திருவூஞ்சலும் இடம்பெறும்.

10.04.2017 திங்கட்கிழமை மாலை வைரவர் பூசையுடன் நிறைவடையும் .

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் ஆலைய நிர்வாகத்தினர்.

 

 

 

சூடான செய்திகள்

Birthday Wish.....
Wednesday, 04 October 2017

புதியவை