korg top cover 0 thwww

karaitivu logo mobile

ஸ்ரீ நவநாத சித்தர் குருபூசையில் காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சித்தர் ஆலய மெய் அன்பர்கள்.

மத்திய மலையகத்திலே நாவலப்பிட்டியை அடுத்து கொத்தமலை வீதியில் தலவாக்கலை நோக்கிச் செல்லும் நெடும்பாதையில் அமைந்துள்ளது குயின்ஸ்பரி தோட்டம். குயின்ஸ்பரியில் அமையும் சிவத்தலம் ஸ்ரீ நவநாதேஸ்வரம் ஆகும். ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் இணைந்த திருத்தலம் நவநாதேஸ்வரம் ஆகும். சித்தர்கள் பக்தர்களை ஈர்க்கும் வழிபாட்டிடமாகவும், தியாண நிலையமாகவும் அமைவது இந்நவநாதேஸ்வரம். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த சித்தர்களுள் நவநாத சித்தரும் ஒருவர். சித்தத்தை சிவன் பால் வைத்தவர்கள் சித்தர்களாவர். நவநாதேஸ்வரத்தின் அற்புதம் என்னவெனில் சுவாமியின் சமாதியில் தோன்றிய சுயம்புலிங்கத் தோற்றப்பாடாகும்.

குயின்ஸ்பெரியும் கொல்லிமலையும் நவநாதச் சித்தரது உணர்விலே ஒரே இடமாகவே கருதப்பட்டது என்பது இத்தலவரலாறு முலமாகவும் அனுபவமூலமாகவும் உணரமுடிகின்றது. இங்கு தைப்பொங்கல் தினத்தில் காட்டிலே அமைந்துள்ள குகைக்கருகிலே 'வனபோஜனம்' என்னும் சிறப்பு வழிபாடு நடைபெறுவதுண்டு. அதாவது குகைக்குச் செல்லும் தனிவழிப்பாதை காட்டுவழிப்பாதையாகும். ஆலயத்தில் இருந்து குகைக்குசெல்ல 2மணித்தியாலம் நடக்கவேண்டியுள்ளது. ஆறுகள் கடந்தும், மலைகள் மீது ஏறியும் இறங்கியும் வினைப்பயன் தீர்க்கவேண்டும். பசியும் ஏற்படும், களைப்பும் நேரிடும், சில இடங்களில் அட்டைகளும் தீண்ட நேரிடும். இவ்வாறு தடைகளை தாண்டி செல்லும் போது சுவாமியின் தியானக்குகை மடமும் திரிசூலக் கோவில் உள்ள இடம் தென்படும். இவ்விடமானது பலர் இருந்து வழிபாடு செய்யும் வண்ணம் படிக்கட்டுக்கள் நிறைந்துள்ளது. இவ்வமைப்பானது ஏணிப்படி வடிவில் காணப்படுகின்றமை கலை நுட்பமானதும் அனைவருக்கும் வழிபாடு தென்படும் வகையிலும் அமையப்பட்டுள்ளது. அதனருகில் திரிசூலங்கள் நிறைந்த ஆலயம் காணப்படுகின்றது. திரிசூலங்களுள்ள இடத்திலே உள்ள பாறை இடுக்கில் முட்டைகள் வைக்கும் இடம் காணப்படுகின்றது. வனபோஜன வைபவத்தின் போது பக்தர்கள் பல்லாயிரக் கணக்கில் முட்டைகளை வைப்பர். அவை பின்னர் காணாமற் போவதாகவும் இன்றும் ஐதீகம் உண்டு. இன்றும் இவ்வழமை நிகழ்ந்து வருகிறது. வனபோஜனத்தின் போது மாமிசங்கள்பலியிடப்பட்டு பெருங்கற்பாறை அடுப்பில் வேகவைத்து உணவாக படைத்து இறைவழிபாடு செய்து கூட்டாக இணைந்து உண்பார்கள். இத்தகைய இடத்தினை நோக்கியே காரைதீவு சித்தானைக்குட்டி சித்தர் மெய்அன்பர்கள் பாதயாத்திரையாக செல்வர். இம்முறை விசேடமாக தொலைவில் அமைந்துள்ள இன்னுமோர் குகைக்கும் சித்தரின் துணையுடன் சென்று தியானத்தில் ஈடுபட்டு வந்துளள்னர்.

வருடாவருடம் பங்குனி உத்திரத்தினம் சுவாமியின் குருபூசை கொண்டாடப்படுகிறது. முதல் நாள் இரவு ஏழு மணியளவில் கொடிமரம் முருகனுக்கும், சித்தருக்கும் மன்றாடி விழாவை ஆரம்பிக்கம் முகமாக நாட்டு வீதி அலங்கார வேலையில் ஈடுபடுவர். காலை யாகபூசையின் பின்னர் குயின்ஸ்பரி மக்களால் பால்குடம் மற்றும் பலவகை காவடி எடுத்து சமாதி ஆலயத்தை நோக்கி நடையாக பவனிவருவார்கள். ஆண்களும் பெண்களும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆடை அணிகலன்கள் அணிந்திருப்பார்கள். சிறுபிள்ளைகள் முதல் முதியவர் வரை பால்குடம் ஏந்தியும், ஆண்கள் பறவக்காவடிகள், முட்காவடிகள், பாற்காவடிகள் எடுத்தும், தெய்வம் ஆடியும், கட்டுப்பாடல்கள் பாடியவாறும், அரோகரா கோசத்துடனும் தங்கள் பக்தியை வெளிப்படுத்தி ஆலயம் நோக்கி ஊர் மக்கள் அனைவருமே செல்வார்கள். அதனைத் தொடர்ந்து பாலாபிஷேகம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஸ்ரீ தேவசேனாதிபதி முருகனுக்கு விசேடபூசைகள் இடம்பெறும். அதன் பின்னரே சித்தருக்கும் நாகபூஷனி அம்மனுக்கும் பூசைகள் இடம்பெறும். சுவாமிகள் இலங்கைக்கு வருகை தரும் போது உடுத்திருந்த பொக்கிஷமான ஆடையை சமாதி அருகில் வைத்து பூசை செய்வார்கள். பிரசாதமாக விபூதி, தீர்த்தம் பகிரப்படும். பின்னர் வருகை தந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். மாலை 7மணியளவில் இடும்பன் பூசையுடன் குருபூசை நிகழ்வுகள் இனிதே நிறைவு பெறும்.
இவ்வாறு அட்டமா சித்துக்கள் செய்து பெரும்புகழ் ஈட்டவல்லவராக இருந்தும் அடியாருக்கு அடியாராகத் தோன்றிப் பாமர மக்களின் மத்தியில் தான் ஒரு பாமரனாகவே தோன்றிப் பக்தியை வளர்த்தார். 1902ஆம் ஆண்டு பங்குனித்திங்கள் பூரணையில் நிரம்பிய உத்தர நட்ஷத்திரத்தில் தாம் ஏற்கனவே கூறப்பட்ட நேரத்தில் நிர்விகர்ப்ப நிலையடைந்தார்கள்.

நவநாதம் என்று சொல்லப்பா நாவினால் - உன்தன்
நெஞ்சம் குளிர்ந்து வாழ்ந்திடுவாயப்பா...!!

தொகுப்பு :-
வைரமுத்து சத்தியமாறன் (டீ.யு)
சித்தானைக்குட்டி புரம்,
காரைதீவு-03.

na1

na2

na3

na4

na5

na6

சூடான செய்திகள்*

புதியவை