korg top vipu logo 3

karaitivu logo mobile

அப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸின் கனவுகளில் ஒன்றான, பிரம்மாண்ட கேம்பஸ் கட்டிடத்தை கலிபோர்னியாவில் நிறுவி வருகின்றது.பல சிறப்புகளை கொண்டுள்ள இந்த கட்டிடத்தை அப்பிள் நிறுவனம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களுடன் வடிவமைத்துள்ளது.தற்போது நிலவும் உலகின் மின்சக்தி தேவைக்கு ஈடுகொடுக்கும் வகையில், அப்பிள் மரபுசாரா ஆற்றல் மூலங்களை வைத்து மேற்படி நிறுவனத்தை கலிபோர்னியா அமைத்துள்ளது.அப்பிள் நிறுவனத்தின் தலைமையகமாக உருவாகிவரும் இந்த கட்டிடம் இரண்டாம் கேம்பஸ் ஸ்பேஸ்ஷிப் என பெயரிடப்பட்டுள்ளது.2011ஆம் ஆண்டில் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்டிடம், 2.8 மில்லியன் சதுர அடியில், சுமார் 5 பில்லியன் செலவில் தயாராகி வருகின்றது. இந்த கட்டிட வளாகத்தில், 8 கட்டிடங்கள் அமையவுள்ளதுடன், 80 சதவீத அளவு மரங்கள் நடப்பட்டு பச்சை பசேல் என கட்டிடம் காட்சியளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், இந்த தலைமையக கட்டிடத்தில் சுமார் 14,200 ஊழியர்கள் பணியுரியவுள்ளதாகவும், இதில் அமைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிதான் உலகின் மிகப்பெரிய வளைந்த கண்ணாடி எனவும் தகவல்.இதேவேளை, கேம்பஸ் ஸ்பேஸ்ஷிப் கட்டிடத்தின் நிர்மாணப்பணிகள் இந்த வருடம் மே மாதம் நிறைவடைந்துவிடும் என நம்பப்படுகிறது.

steev3e aqpple uni 1

steev3e aqpple uni 1

சூடான செய்திகள்

காரைதீவில் உள்ள அதிசய வாழை மரம்....
வியாழக்கிழமை, 23 மார்ச் 2017
கண்ணகை அம்மனாலய சங்காபிஷேகம்......
வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017

தொடர்பான செய்திகள்

2017இல் அப்பிள் ஐபேட் ப்ரோ 2....
சனிக்கிழமை, 10 டிசம்பர் 2016
பேஸ்புக் மெசஞ்சரில் புதிய வசதி Messenger Day .....
ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017
Google தனது புதிய logo இனை அறிமுகம் செய்தது!
புதன்கிழமை, 02 செப்டம்பர் 2015

புதியவை