korg top cover 2

korg top cover mob

உள்ளுராட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக தற்காலிக அடையாள அட்டைகளை பெற முடியும் என மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் டி.சி.அரவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிக்கும் போது அடையாளத்தை உறுதிப்படுத்துதல் அவசியம் ஆகும். இதற்காக தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதியர் அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, மதகுரு அடையாள அட்டை மற்றும் தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டையை பயன்படுத்த முடியும்.

எனினும் மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் எதனையும் வைத்திருக்காதவர்கள் கிராம அலுவலர் ஊடாக தேர்தல் ஆணைக்குழுவின் தற்காலிக அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Vote

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

Sincere Gratitude
Sunday, 19 May 2013

புதியவை