korg top cover

korg top cover mob

motorcyclemod

இந்தியாவில் கூகுள் மேப்ஸ் செயலியின் ஆண்ட்ராய்ட் பதிப்பில் மோட்டார் சைக்கிள் மோட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூகுள் மேப்ஸ் (v9.67.1) பதிப்பை பயன்படுத்தும் சில வாடிக்கையாளர்களுக்கு இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக கார், ஃபூட் மற்றும் ரயில் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை மோட்டார் சைக்கிள் ஆப்ஷன் இடம்பெற்றுள்ளது.
கூகுள் மேப்ஸ் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய அம்சம் மோட்டார் சைக்கிள் பயன்படுத்துவோர் பயணம் செய்ய ஏற்ற வழிகளைக் காண்பிக்கும். கூகுள் மேப்ஸ் செயலியின் மோட்டார் சைக்கிள் மோட் முதற்கட்டமாக இந்திய சந்தையில் வழங்கப்பட்டுள்ளது.

கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் நிறுவனத்தின் இதர சேவைகள் மற்ற சந்தைகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் அதிக வரவேற்பைப் பெற்று வருவதாக கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

புதிய மோட்டார் சைக்கிள் மோட் பயனாளிகளுக்கு ஏற்ற வழிகளைப் பரிந்துரைப்பதோடு, குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டிய வழித்தடத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசல் சார்ந்த முழு விபரங்கள் மற்றும் வாகன நிறுத்தம் சார்ந்த விபரங்களையும் வழங்குகிறது.

முன்னதாக இதே அம்சம் கூகுள் மேப்ஸ் செயலியின் கார் மோட் வழங்கி வந்தது.

 

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை