korg top cover

korg top cover mob

88113533ede3c74f2bdfcbc031d0719b L

சிறைச்சாலைகள் திணைக்களத்தில் வெற்றிடமாகவுள்ள சிறைக்காவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

1068 ஆண் சிறைக்காவலர்கள் மற்றும் 116 பெண் சிறைக்காவலர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக அரச சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விளம்பரங்கள் 17-11-2017 வெளியான அரச வர்த்தமானியில் பெற்றுக் கொள்ளமுடியும்.

இந்த வெற்றிடங்களுக்கு 95 வீதம் திறந்த முறையிலும், சிறைச்சாலை திணைக்களத்தில் சேவையாற்றுவோரிலிருந்து 5 வீதமும் பணியாளர்களாக சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

க.பொ.த சாதாரண தரத்தில் 06 பாடங்கள் சித்தியடைந்த 18 - 35 வயதுக்குட்பட்டோர் இதற்காக விண்ணப்பிக்க முடியும் விண்ணப்பங்கள் 18.12.2017 வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை