korg top cover

korg top cover mob

அகில உலக இராமகிருஸ்ணமிசன் மற்றும் மடங்களின் துணைத்தலைவரும் தமிழ்நாடு சென்னைக்கிளையின் தலைவருமான அதிபூஜ்ய சுவாமி கௌதமானந்த ஜீ இன்று (27) திகதி வியாழக்கிழமை காரைதீவுக்கு விஜயம்செய்யவிருக்கிறார். இன்று 27ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.00மணியளவில் சுவாமி கௌதமானந்தர்மு த்தமிழ்வித்தகன் இ.கி.மிசன் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த
காரைதீவு மண்ணுக்கு விஜயம்செய்யவிருக்கிறார்.
ஸ்ரீ இராமகிருஸ்ணமிசனை இலங்கையில் வியாபிக்க மூலவிசையாக ஆணிவேராகத்திகழ்ந்தவர் சுவாமி விபுலானந்த அடிகளார் ஆவார். அவர் பிறந்த மண்ணை தரிசிக்கவேண்டும் என்பதால் அவரது இந்த வருகை அமைகிறது. அவருடன் இலங்கைக்கான இராமகிருஸ்மிசன் உபதலைவர் சுவாமி சர்வருபானந்தா மஹராஜ் சுவாமி இராஜேஸ்வரானந்த ஜீ மட்டுமாநில தலைவர் சுவாமி
பிரபுபிரேமானந்தா ஜீ உள்ளிட்ட பல சுவாமிகள் வருகைதரவுள்ளனர்.
அவருக்கு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து பூரணகும்பம் வைத்து பெரு வரவேற்பளிக்கப்பட்டு பாடசாலை மாணவர்களின் இந்துசமய பண்பாடுகளை பிரதிபலிக்கும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் சகிதம்அழைத்துச்செல்லப்படவிருக்கிறார்.நேராக காரைதீவு கொம்புச்சந்தியை வந்தடையும் சுவாமிக்கு அங்கிருந்து காரைதீவு இ.கி.மி.சாரதா சிறுமியரில்லம் வரை பாரிய கலாசார பாரம்பரிய
வரவேற்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சாரதாஇல்லத்தில் செங்கம்பளவரவேற்பளிக்கப்பட்டதும் சுவாமிகள் குருதேவரை வழிபட்டபிற்பாடு வேதபாராயணம் ஓதப்பட்ட பின் அங்கு நேரடியாக மக்களுக்குஅருளுரையாற்றவுள்ளார்.

samy 1

samy 1

samy 1

samy 1

சூடான செய்திகள்

Birthday Wish.....
Wednesday, 04 October 2017

தொடர்பான செய்திகள்

புதியவை