korg top cover 0 thwww

karaitivu logo mobile

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகனாலய வருடாந்த ஆடிவேல்விழா மஹோற்சவம் எதிர்வரும் ஆடி 24 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆவணி மாதம் 07ஆம் திகதி சமுத்திர தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

கிழக்கின் தென்கோடியில் நாநிலங்களின் மத்தியில் மனோரம்மியமான சூழலில் அமைந்துள்ள இவ்வாலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் கிரியைகள் யாவும் நடைபெறும் கொடியேற்றத்திருவிழா வன்று மலைத்திருவிழா மயில்திருவிழா தேர்த்திருவிழா போன்ற சிறப்பு திருவிழாக்கள் நடைபெறும்.

தேசத்துக்கோவில் என்பதால் பல ஊர்களின் உபயகாரர்கள் 15நாள் திருவிழாக்களையும் பொறுப்பெடுத்துள்ளனர்.பகல்திருவிழா காலை 7மணி தொடக்கமும் இரவுத்திருவிழா மாலை 5மணி தொடக்கமும் இடம்பெறும்.விழாக்காலங்களில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை உகந்தைமலை முருகனாலயத்திலிருந்து கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை எதிர்வரும் 15ஆம் திகதி திறக்கப்படும்.

ukan 1 copy

சூடான செய்திகள்*

தொடர்பான செய்திகள்

புதியவை