கல்முனை ஆதார வைத்தியசாலை மட்டு.அம்பாறை மாணவரிடையே நடாத்தும் கட்டுரைப்போட்டி ! முடிவுத்திகதி 28.03.2017.
கல்முனை ஆதார வைத்தியசாலை மட்டு.அம்பாறை மாணவரிடையே கட்டுரைப்போட்டியொன்றை நடாத்தவுள்ளது.
பாடசாலை மாணவ சமூகத்தினரிடையே சுகாதார அறிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு கல்முனை ஆதார வைத்தியசாலை கீழ்வரும் தலைப்புகளின் கீழ் கட்டுரைப் போட்டிகளை நடாத்தத் தீர்மானித்துள்ளது என வைத்தியசாலை அத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன் தெரிவித்தார்.
போட்டித் தலைப்புகளாக சமூகத்தில் போதைப் பொருள் பாவனை ஏற்படுத்தும் விளைவுகளும் அதனைக் கட்டுப்படுத்துவதில் சமூகத்தின் பங்களிப்பும் மாணவ சமூகம் எதிர்நோக்கும் உளநெருக்கீடுகளும்(Mental Stress)அதற்கான தீர்வுகளும்.டெங்கு நோய் பரவுதலைத் தடுப்பதில் சமூகப்பங்களிப்பு.வீதி விபத்துக்களைத் தடுப்பதில் மாணவ சமூகத்தின் பங்களிப்பு.உயர் குருதியமுக்கம்((Hypertention)இ தய நோய்கள்(Heart Diseases)நீரிழிவு(Diabetic)ஆஸ் துமா,தொய்வு(Asthma) போன்றவை 21ஆம் நூற்றாண்டில் மனித குலத்திற்கு சவாலாக இருக்கும் தொற்றா நோய்கள்(Non Communicable Diseases) ஆகும்.அவை பற்றி நாம் அறிந்திருப்பதன் அவசியம்.
கனிஸ்ட பிரிவு பரிசு விபரம் முதலாம் பரிசு டாக்டர் கே.பரமானந்தம் ஞாபகார்த்தப் பரிசு - ரூபா. 5000 இரண்டாம் பரிசு கவிஞர் நீலாவணன் ஞாபகார்த்தப் பரிசு - ரூபா. 3000மூன்றாம் பரிசு அருட்சகோதரர் எஸ்.ஏ.அய்.மத்தியூ ஞாபகார்த்தப் பரிசு - ரூபா.2000
சிரேஸ்ட பிரிவு பரிசு விபரம் முதலாம் பரிசு டாக்டர் தேவராஜன் ஞாபகார்த்தப் பரிசு - ரூபா. 10000 இரண்டாம் பரிசு மகேந்திரலிங்கம் ஞாபகார்த்தப் பரிசு - ரூபா. 5000 மூன்றாம் பரிசு இரா.சிவ அன்பு ஞாபகார்த்தப் பரிசு - ரூபா. 3000
போட்டி நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவையாவன ஒரு மாணவர் ஒரு கட்டுரை மாத்திரம் எழுதி அனுப்புதல் வேண்டும்.போட்டிகள் :-கனிஸ்ட பிரிவு மாணவர்கள் - தரம் 07,08,09,10,11 சிரேஸ்ட பிரிவு - உயர்தரப் பிரிவு மாணவர்கள்கனிஸ்ட பிரிவு மாணவர்களின் கட்டுரை 1000 சொற்களுக்குள் குறையாமலும் சிரேஸ்ட பிரிவு மாணவர்கள் 2000 சொற்களுக்குள் குறையாமலும் கட்டுரை அமைதல் வேண்டும்.
கட்டுரைகள் அனைத்தும் எதிர்வரும் 2017.03.28 ஆம் திகதிக்கு முன்னர் தங்களது பாடசாலை அதிபரால் உறுதிப்படுத்தப்பட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை நடாத்தும் மட்டக்களப்பு அம்பாறை கல்வி மாவட்ட பாடசாலைகளுக்கிடையேயான கட்டுரைப் போட்டி -2017 என தலைப்பிட்டு சுகாதார கல்விப் பிரிவு,ஆதார வைத்தியசாலை,கல்முனை – வடக்கு எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு சான்றிதழும் பணப் பரிசும் வழங்கப்படும்.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.