korg top vipu logo 3

karaitivu logo mobile

இலங்கை நிருவாக சேவைக்கு இம்முறை (2017) ஆட்சேர்ப்பில் திறந்த அடிப்படையில் 175 பேரும், மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் 46 பேரும்; தெரிவு செய்யப்படவிருக்கின்றனர். இவ் எண்ணிக்கை இலங்கை நிருவாக சேவை வரலாற்றில் இடம்பெறும் மிகப் பெரிய எண்ணிக்கையாகும்.மேலும் இம்முறை வினாத்தாள்கள் மிகவும் கட்டமைக்கப்பட்டதாக அமைவதுடன், விடைத்தாள் மதிப்பீடானது இரு அரசகரும மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு செய்யப்படவிருக்கின்றது. இது எதுவித பாகுபாடுமின்றி நடுநிலையான பெறுபேறுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலாகும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இதனால் அதிகமான தமிழ்மொழி மூலமான பரீட்சார்த்திகள் கடந்த வருடத்தைப் போலவே இவ்வருடமும் தெரிவாகுவர் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வருட இலங்கை நிருவாக சேவை ஆட்சேர்ப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 2017பெப்ரவரி 17ம் திகதியன்று வெளியாகியது. இதன்படி விண்ணப்பிக்கவேண்டிய இறுதித் திகதி 2017 மார்ச் 20ம் திகதிஆகும். குறித்த இத்தினத்தில் திறந்த போட்டிப்பரீட்சைக்காக விண்ணப்பிப்பவர்கள் 22 தொடக்கம் 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டியதுடன் பல்கலைக்;கழக பட்டமொன்றினை பெற்றிருத்தல் வேண்டும். மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்காக விண்ணப்பிப்பவர்கள் 53 வயதிற்கு மேற்படாமல் இருப்பதுடன் பின்வரும் இரு தகமைகளில் ஏதாவதொன்றை பூர்த்தி செய்திருத்தல் போதுமானது.


1. பல்கலைக்கழக பட்டமொன்றைப் பெற்றிருப்பதுடன் அரச சேவையில் 5 வருட அனுபவத்தினை பெற்றிருத்தல்.

2. பட்டமொன்றைப் பூர்த்தி செய்யாதவர்கள் அரசசேவையில் 10 வருட சேவைக்காலத்தினை பூர்த்திசெய்திருத்தல்.

எனவே மேற் கூறப்பட்ட தகமைகளை பூர்த்தி செய்துள்ள அனைவரும் இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இப்பரீட்சை மே மாதத்தில் அல்லது யூன் மாதத்தில் இடம்பெறவிருப்பதால் பரீட்சைக்காக தம்மைத் தயார்படுத்திக் கொள்வதற்கான குறுகிய கால எல்லையொன்று வழங்கப்படுகின்றது.இக்காலத்தை வீணடிக்காது முழுமையான முயற்சியிலீடுபடுவதுடன் உயர் பதவிகளில் தமிழ் பேசும் அதிகாரிகளின் சேவை எம் சமூகத்திற்கு மிகவும் தேவையான ஒரு காரணியாக அமைகிறது. இந்த விடயத்தையும் உணர்ந்து எம் சமூக எழுச்சிக்கான பங்களிப்பையும் உங்களால் வழங்கமுடியும் என்ற மன உறுதியுடன் பரீட்சையை வெற்றிகரமாக முகம்கொண்டு இலங்கையின் முதற் தரசேவையான இலங்கை நிர்வாக சேவைக்கு நீங்கள் தெரிவாக வேண்டும் அதற்கு எமது உளங்கனிந்த வாழ்த்துக்கள்.

SLAS

சூடான செய்திகள்

காரைதீவில் உள்ள அதிசய வாழை மரம்....
வியாழக்கிழமை, 23 மார்ச் 2017
கண்ணகை அம்மனாலய சங்காபிஷேகம்......
வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017

தொடர்பான செய்திகள்

திங்கள் முதல் இலவச WiFi
வியாழக்கிழமை, 26 மார்ச் 2015

புதியவை