korg top cover

korg top cover mob

காரைதீவு விபுலானந்தா மொன்டிசோரியின் வருடாந்த விபுலவிழுதுகளின் விடுகைவிழா நாளை 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப.2.30மணிக்கு காரைதீவு விபுலானந்த மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது.
 
மொன்டிசோரிப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெறவுள்ள இவ்விடுகைவிழாவில் பிரதம அதிதியாக த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் கலந்துசிறப்பிக்கவிருக்கிறார்.
 
கௌரவஅதிதிகளாக கிழக்குமாகாணசபை உறுப்பினர்களான தவராசா கலையரசன் முருகேசு இராஜேஸ்வரன் ஆகியோரும் 
 
விசேட அதிதிகளாக காரைதீவு பிரதேசசபைச்செயலாளர் எஸ்.நாகராஜா கல்முனை றோட்டரிக்கழக தலைவர் றோட்டரியன் சுந்தரலிங்கம் சசிகுமார் காரைதீவு பிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளர் வீரகத்தி கிருஸ்ணமூர்த்தி ஜேர்மன் நம்பிக்கைஒளியின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் மனிதஅபிவிருத்தித்தாபன கிழக்கு இணைப்பாளர் தேசமான்ய பொன்னையா ஸ்ரீகாந்த் கல்முனை வலய முன்பள்ளிபேரவை இணைப்பாளர்  ஜ.எல்.எம்.அனீஸ் விபுலானந்த மணி மண்டப காப்பாளர் சின்னத்தம்பி தங்கவேல் ஆகியோர் கலந்துகொள்வார்கள்.
 
மொன்டிசோரியில் பயின்று இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 21 மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

vip mom 1

vip mom 1

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை