korg top cover 0 thwww

karaitivu logo mobile

அம்பாறை மாவட்டத்திலிருந்து பொறியியல் மற்றும் மருத்துவ பீடங்களுக்கு தெரிவான மாணவர்களை அங்கத்தவர்களாக கொண்ட உயர் கல்விக்கான ஒன்றியம் (AAE) அமைப்பின் கல்வி ஊக்குவிப்பு வருடாந்த செயற்பாடுகளான செயலமர்வுகள், முன்னோடப்பரிட்சைகள்,பல்கலைக்கழக விண்ணப்ப வழிகாட்டல், மற்றும் வினாவிடைபோட்டி போன்றவை நடார்த்தப்படுகின்றன. அந்த வகையில் தொடர்ச்சியாக இவ்வருடம் 6வது முறையாக வருடாந்த செயற்பாடுகளில்ஒன்றான 2018 க.பொ.த உயர்தர பரிட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கிடையே நடர்த்தப்படும் வினாவிடைபோட்டியின் இறுதிச்சுற்று போட்டியும் பரிசளிப்பு வைபவமும் 10.04.2018(செவ்வாய்க்கிழமை) அதிதிகள் ஆசிரியர்கள் மற்றும் மருத்துவ பொறியியல் பீட சிரேஸ்ட மாணவர்களின் முன்நிலையில் 2017 உயர்தரப்பரிட்சையில் சித்தியெய்தி மருத்துவ மற்றும் பொறியியல் பீடத்துக்கு தெரிவாகியுள்ள மாணவர்களினால் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் விஞ்ஞான பீட மாணவர்கழுக்கு வெகு விமர்சையாக நடாத்தப்பட்டது. வினாவிடைப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு திருக்கோவில் விநாயகபுரம் மகாவித்தியாலய அணியும், கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை அணியும், கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை அணியும், விபுலானந்தா மத்திய கல்லூரி அணியும் போட்டியிட்டிருந்தன. இதில் இறுதிச் சுற்றுக்கு தெரிவான கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை, திருக்கோவில் விநாயகபுரம் மகாவித்தியாலயம் அணிகளுக்கிடையிலான இறுதிச்சுற்று போட்டி நடைபெற்று இறுதிச்சுற்றுப் போட்டியில் உவெஸ்லி உயர்தரப் பாடசாலை வெற்றி பெற்று உயர்கல்விக்கான ஒன்றியத்தின் 2018 இற்கான வினாவிடைபோட்டியின் சம்பியனாக தெரிவு செய்யபட்டது. வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள், மற்றும் சான்றிதல்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதில் உவெஸ்லி உயர்தர பாடசாலை மாணவன் குணரட்ன வினேஜித் மிகச்சிறந்த முறையில் போட்டியில் தனது திறமை கொண்டு பாடசாலையின் வெற்றிற்கு பலம் சேர்த்தார் என்பது குறிப்பிடதக்கது. இந் நிகழ்வில் அதிதிகளாக திருமதி.டாக்டர் C . தேவராஜன், உவெஸ்லி உயர்தரப் பாடசாலை அதிபர்.திரு.பிரபாகரன்,விநாயகபுரம் மகா வித்தியாலய அதிபர் திரு.அன்ரன் ஆகியோரும்; மற்றும் கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் பிரதிநிதிகளும், கல்முனை தமிழ் இளைஞர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் மற்றும் ஆசிரியர்கள், பெற்றேர்கள், மருத்துவ பொறியியல் பீட சிரேஷ்ட்ட மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கு நடுவர்களாக இரசாயனவியல் ஆசிரியை திருமதி.சுரேஷ்குமாரி, பௌதிகவியல் ஆசிரியர் திரு. தெய்வீகன் ஆகியோர் கடமையாற்றினர்AA 1

AA 2

AA 3

AA 4

                                                                                      மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்

சூடான செய்திகள்*

தொடர்பான செய்திகள்

புதியவை