எம் பேரன்புக்குரியவர்களே,இவ் இணையத்தளத்தை அமைத்ததன் நோக்கம் எமது காரைதீவு கிராமத்தின் சிறப்புக்களைப் பற்றியும், அதன் பாரம்பரிய கலாச்சார விழுமியங்கள் பற்றியும் எடுத்துக்கூறுவதற்காகும். அத்துடன் எமது கிராமத்தில் இடம்பெறும் சமய, கலாச்சார, சமூக, விளையாட்டு நிகழ்வுகளை இத்தளம் மூலம் ஒருங்கிணைத்து வெகு தூரஇடங்களில் வசித்துவரும் எம் மக்களை ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக உறவாடவைத்து கிராம வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கேயாகும். இது ஒரு சேவை நோக்குடன் ஆரம்பிக்கின்ற முதல் முயற்சியே. இம் முயற்சியின் வளர்ச்சியில் நீங்களும் பங்களிப்புச் செய்ய அன்போடு வரவேற்கின்றோம். இந்த இணையத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்களை info@karaitivu.org மின்னஞ்சல் மூலம் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இலவச துணை இணையநுழைவு முகவரிகாரைதீவில் உள்ள பொது இடங்களுக்கும், பொது ஸ்தாபனங்களுக்கும் எங்களது இணையத்தளத்தில் துணை இணையநுளைவு முகவரியும் (sub domain Eg: schoolname.karaitivu.org), தனிப்பட்ட இணைய பக்கங்களும் வழங்க தீர்மானித்துள்ளோம். இது தொடர்பாக WebTeam உடன் நேரில் தெடர்புகொள்ளவும். ... Web Team முக்கிய செய்திஎமது இணையத்தளத்தில் ஏதாவது 1. பொருத்தமற்ற விடயங்கள் 2. பிழையான தகவல்கள் 3. ஒரு தனி நபருடைய அல்லது நிறுவனத்தினுடைய நன் மதிப்பினைப் பாதிக்கக்கூடிய தகவல்கள் இருப்பதாக நீங்கள் கருதினால் info@karaitivu.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கு உடனே அறியத்தரவும். அது சம்பந்தமாக எம்மால் இயன்றளவு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு முறையும் செய்திகளை பிரசுரிக்கும் போது, தவறுகளைக் குறைத்தக்கொள்ள நாம் மதிகுந்த கவனம் எடுக்கின்றோம் என்பதையும் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தங்களது கருத்துக்களை, பின்னூட்டங்களை (FEEDBACK) இவ்விணையத்தளத்தில் பதிய விரும்பின் தங்களது மின்னஞ்சலின் தலைப்பாக Feedback என குறிப்பிட்டு அனுப்பிவைக்கவும். நன்றி, ... WebTeam If you find any 1. Inappropriate content 2. Wrong information 3. Information's which could affect someones dignity in this site, please inform us as soon as possible to info@karaitivu.org. We will take action as soon as possible to remove or modify that. We would like to to tell you that we are taking a greater effort to avoid such mistakes. Thank you ... WebTeam கவனிக்க!எமது காரையூர் இணையத் தோழர்களே! உமது பிறந்ததின, திருமண, மரண, மற்றும் பிற அறிவித்தல்களை இலவசமாக எமது இணையத்தில் பிரசுரிக்கவுள்ளோம். பிரசுரிக்க விரும்புவர்கள் தங்கள் அறிவித்தல்களை info@karaitivu.org மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும். அறிவித்தல்களை பிரசுரிப்பதா இல்லையா என்பது Web Team ஆல் முடிவுசெய்யப்படும்.. இது பிரதானமாக தகவல் தளம் மாத்திரமே. செய்தித்தளம் அல்ல எனபதையும் இதில் பிரசுரிக்கப்படும் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்பே பிரசுரிக்கப்படுவதாலேயே சில செய்திகள் காலந்தாழ்த்திப் பிரசுரிக்கப்படுவதையும் கவனத்தில் கொள்க. முக்கிய அறிவித்தல்எமது இணையத்தளம் பற்றி சில முறைப்பாடுகள் எமக்கு கிடைத்ததன் காரணமாக எமது இணையத்தளம் சம்பந்தமாக சில தகவல்களை முன்வைக்க விரும்புகிறோம் எமது இணையத்தமானது தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆர்வலர்களாக உள்ளவர்களும் காரைதீவின் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களுமான, karaitivu.org WebTeam இன் உறுப்பினர்களாலேயே தன்னார்வ (Voluntary) அடிப்படையில் நடாத்தப்பட்டு வருகின்றது. இதில் பிரதானமாக பல்கலைக்கழக மாணவர்களும், வேறு உயர்கல்வி நிறுவன மாணவர்களுமே உறுப்பினர்களாக உள்ளனர். இந்த இணையத்தளம் வேறு ஓருவரினதும் கட்டுப்பாட்டிலோ அல்லது வழி நடத்தலிலோ இல்லை. அத்துடன் karaitivu.org தவிர்ந்த ஏனைய எந்த நிறுவனத்திற்கோ, விளையாட்டுக் கழகத்திற்கோ பக்கச்சார்பானதாக இருக்காது. இங்கு பிரசுரிக்கப்படும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் முதலியவை பொதுவாக எமது தளத்தில் பதிவு செய்தவர்களுடையதாகவோ அல்லது இ.அஞ்சல் மூலம் அறிவிப்பவர்களுடையதாகவோ இருக்கும். மேலும் எமது இணையத்தள பதிவேற்றுனர்கள் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றமையாலும், எம்மால் வேதனத்திற்கு ஒரு செய்தியாளரை வேலைக்கமர்த்த முடியாமையாலும் உடனுக்குடன் தகவல்களை வழங்கமுடியாதுள்ளது. எனினும் விரைவில் காரைதீவின் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு செய்திதொடர்பாளரை தொண்டர் அடிப்படையில் சேர்க்கவுள்ளோம். எனினும் எமக்கு செய்திகளை அனுப்பும் எமது கிராமத்தவர்களின் அடையாளம் உறுதிப்படுத்தக்கூடியதாய் இருந்தால் நாம் அச்செய்திகளை பிரசுரிப்போம். இதில் பிரசுரிக்கப்படும் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்பே பிரசுரிக்கப்படுவதாலேயே சில செய்திகள் காலந்தாழ்த்திப் பிரசுரிக்கப்படுவதையும் கவனத்தில் கொள்க. உதாரணமாக பரீட்சை முடிவுகள் பாடசாலைகளிலிருந்தே பெற்று பிரசுரிக்கப்படும். அல்லது நம்பகமானவர்கள் எமக்கு தகவல்களை அனுப்பும்போது அவை பிரசுரிக்கப்படும். எமது இணையத்தளத்தில் ஏதாவது 1. பொருத்தமற்ற விடயங்கள் 2. பிழையான தகவல்கள் 3. ஒரு தனி நபருடைய அல்லது நிறுவனத்தினுடைய நன் மதிப்பினைப் பாதிக்கக்கூடிய தகவல்கள் உள்ளடக்கப்படததிருப்பதற்கு மிகுந்த கவனம் எடுக்கின்றோம் என்பதையும் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தங்களுடைய கருத்துக்களே எம்மை செம்மைப்படுத்துகின்றன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ... இணைய ஆசிரியர்கள் குழு |