posted Jan 7, 2010 11:42 PM by Web Team
[
updated Mar 15, 2010 7:26 AM by Prasath Mendis Appu
]
posted Oct 9, 2009 1:54 AM by Web Team
[
updated Jan 29, 2010 9:08 PM by Prasath Mendis Appu
]
அம்பாறை மாவட்டத்தின் காரைதீவில் சுனாமி மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 72
வறிய மாணவர்களுக்கு மனித அபிவிருத்தித் தாபனம் புலமைப்பரிசிலை வழங்கி வருகிறது.
இந்தப் புலமைப்பரிசில் திட்டத்தில் தரம் 6 இல் 20 பேரும், தரம் 9 இல் 23 பேரும்,
க.பொ.த. சாதாரண தரத்தில் 10 பேரும், தரம் 8 இல் 7 பேரும், உயர்தரத்தில் 12 பேரும்
தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மாதாந்த பிரத்தியேக வகுப்புக்கான
கொடுப்பனவு இத்தாபனத்தினால் வழங்கப்பட்டு வருகிறது
இதன் படி காரைதீவு பிளஸ் கல்வியகத்தில் நடைபெற்று வரும் வகுப்புகளுக்கு பிரஸ்தாப
மாணவர்கள் சமுகமளித்து இலவசமாகக் கல்வியைப் பெற முடியும்.
தாபனத்தின் சிறுவர் குழுவில் இணைந்து கொண்ட வறிய மாணவர்களுக்கு புலமைப்பரிசில்
நிதியத்திலிருந்து நன்கொடை வழங்கப்படுவதாகவும் தாபனத்தின் இணைப்பாளர் பொன்னையா
ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
நன்றி .munainews.com
|
posted Oct 9, 2009 1:51 AM by Web Team
[
updated Jan 29, 2010 9:05 PM by Prasath Mendis Appu
]
சிறுவர் துஸ்பிரயோகத்திற்கெதிராக மனித அபிவிருத்தித் தாபனம் நடாத்திய சிறுவர் வாரத்தின் இறுதி நாளான நேற்று அம்பாறைக் கச்சேரியில் சிறுவர் விஞ்ஞாபனத்தை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கராவிடம் தாபன இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் வழங்கி வைத்து கலந்துரையாடுவதையும் அங்கு சிறுவர் நன்னடத்தை அதிகாரி ஏ.உதுமாலெவ்வை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் வி.சந்திரஸ்ரீ, உதவிக் கல்விப் பணிப்பாளர் விரி.சகாதேவராஜா, தாபன உதவி இணைப்பாளர் எம்.ஜ.றியாழ் ஆகியோர்; கலந்துகொண்டிருப்பதையும் படங்களில் காணலாம்.
நன்றி. திரு. விரி.சகாதேவராஜா |
posted Oct 9, 2009 1:44 AM by Web Team
[
updated Jan 29, 2010 9:05 PM by Prasath Mendis Appu
]
ஜ.நா. யுனொப்ஸ் திட்டத்தின் கீழ் காரைதீவில் திண்மக்கழிவு முகாமைத்துவத்தை உடனடியாக ஆரம்பிக்க காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் ந.ஜீவராசா தலைமையில் காரைதீவு விபுலானந்த மணிமண்டபத்தில் நேற்றுமுன் தினம் புதன் கிழமை மக்கள் கருத்தறி மாநாடு மணிமண்டபத்தில் நடைபெற்றபோது தவிசாளர் ந.ஜீவராசா உரையாற்றுவதையும் யுனொப்ஸ் திட்டத்தின் திட்ட இணைப்பதிகாரி டெப்ரா மக்கீன் உரையாற்றுவதைம் திட்ட அலுவலர் வி.சுதாகரன் மொழி பெயர்ப்பதையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம். நன்றி திரு. விரி.சகாதேவராஜா |
posted Oct 5, 2009 1:26 AM by Web Team
[
updated Jan 29, 2010 9:05 PM by Prasath Mendis Appu
]
காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகமும், கண்ணகி சனசமூக நலையமும், விவேகானந்தா இலவசக்கல்வி சமூக வள நிலையமும் இணைந்து நடாத்திய சர்வதேச சிறுவர் தின விழா கடந்த 01-10-2009 அன்று நடைபெற்றது.   நன்றி : திரு S.சிவராஜா
|
posted Oct 3, 2009 2:11 AM by Web Team
[
updated Jan 29, 2010 9:05 PM by Prasath Mendis Appu
]
தேசிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் சுயதொழில் அபிவிருத்திக்கான கட்டம் - 111 (20.09.2009) காசோலை வழங்கும் போதும், அதிதிகள் உரையாற்றும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தங்களின் பார்வைக்காக.
|
posted Oct 3, 2009 1:08 AM by Thevaprathapan Chellathurai
[
updated Jan 29, 2010 9:05 PM by Prasath Mendis Appu
]
we wish all karaitivu people living around the world A HAPPY & PROSPEROUS NEW YEAR
People Association of Karaitivu Canada(PAK) |
posted Oct 1, 2009 9:07 PM by Web Team
[
updated Jan 29, 2010 9:06 PM by Prasath Mendis Appu
]
காரைதீவு பிளஸ் கல்வியகமும் அதன் சமூக சேவைப்பிரிவான CRISS உம்இணைந்து நடாத்திய விஜயதசமி விழா கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் பிளஸ் கல்வியக மாணவர்கள், இலவச வகுப்புக்களில் பயிலும் மாணவர்கள் கல்விய பணிப்பாளர்கள் நலன் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

|
posted Oct 1, 2009 8:48 PM by Web Team
[
updated Jan 29, 2010 9:08 PM by Prasath Mendis Appu
]
காரைதீவு சிவா எலக்றிகல் நிறுவனத்தில் ஆயுத பூசை நிறுவன உரிமையாளர் திரு.வ.சிவாகரன் அவர்களின் தலைமையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
|
posted Oct 1, 2009 3:48 AM by Web Team
[
updated Jan 29, 2010 9:09 PM by Prasath Mendis Appu
]
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி மனித அபிவிருத்தித் தாபனம் இன்று வியாழக்கிழமை காலை கல்முனையில் மாபெரும் சிறுவர் ஊர்வலத்தையும் உவெஸ்லிக் கல்லூரியில் சிறுவர் மாநாட்டையும் தாபனத்தின் பணிப்பாளர் பி.பி.சிவப்பிரகாசம் தலைமையில் நடாத்தியது. அங்கு இடம்பெற்ற சிறுவர் ஊர்வலத்தையும் அதிதிகள் கண்டிய நடனம் உவெஸ்லி பாண்ட் வாத்தியம் சகிதம் அழைத்து வரப்படுவதையும் குத்து விளக்கேற்றுவதையும் ஆன்மீக அதிதி வண.சங்கரத்ன தேரர் ஆசியுரையாற்றுவதையும் மாணவர்கள் கலந்துகொண்டிருப்பதையும் படங்களில் காணலாம்.
ந
நன்றி - திரு விரி.சகாதேவராஜா
|
|