திருக்குளிர்ச்சி சடங்கு தொடர்பான பொது மக்களுக்கான அறிவித்தல் !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வியாழன், 13 மே, 2021

திருக்குளிர்ச்சி சடங்கு தொடர்பான பொது மக்களுக்கான அறிவித்தல் !!!

 #காரைதீவு_ஸ்ரீ_கண்ணகை_அம்மன்_ஆலய_வருடாந்த_திருக்குளிர்ச்சி_சடங்கு_தொடர்பான_பொது_மக்களுக்கான_அறிவித்தல்


அன்பார்ந்த அம்பிகை அடியார்களே ! கிழக்கிலங்கையில் தனிச்சிறப்புப் பெற்ற ஆலயமான காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்களூர்ச்சி வைபவம் எதிர்வரும் 17.05.2021 திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் கடற்தீர்த்தம் எடுத்தலுடன் ஆரம்பமாகி 25.05.2021 செவ்வாய்க்கிழமை அதிகாலை திருக்குளிர்ச்சி பாடுவதுடன் நிறைவுபெறவுள்ளது .

நாட்டில் தற்போது கொரோணாத் தொற்று நிலைமை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு செல்லும் நிலையில் மக்களின் பாதுகாப்புக் கருதி இச்சமயச் சடங்கினை மாத்திரம் சம்பிரதாய முறைப்படி நடத்த அம்பாள் திருவருள் கூடியுள்ளது .

அதன்படி கொவிட் - 19 தடுப்புப் பிரிவினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி இச் சடங்கினை நடத்துவது தொடர்பில் பின்வரும் விடயங்கள் பற்றி தங்களின் கவனத்திற்கு அறியத் தருகின்றோம் .
01. திருக்குளிர்ச்சி காலப்பகுதியில் பொதுமக்கள் எவரும் எக்காரணம் கொண்டும் ஆலயத்தினுள் வர அனுமதிக்கப்படமாட்டார்கள் .
02. பக்தர்களின் நன்மை கருதி பகல் இரவுப் பூஜைகளின் ஒலி , ஒளிபரப்பு நேரடியாக நடைபெ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . எனவே பக்தர்கள் உரிய ஆசாரங்களைப் பேணி வீட்டிலிருந்தவாறே வழிபாடுகளை மேற்கொள்வதுடன் இக்கொடிய கொரோணா நோயிலிருந்து அனைவரும் விடுபடப் பிரார்த்திக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .
03. இம்முறை ஆலயக் கதவு திறந்தபின்னர் எவ்விதமான நேர்கடன்களோ , பூஜைப் பொருட்களோ ஆலயத்தினால் பெற்றுக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .
04. இந்த நாட்களில் அங்கப் பிரதட்சனை , கற்பூர விளக்கு எடுத்தல் போன்ற எந்தவித செயற்பாடுகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது . 05. ஆலய உற்சவ காலப்பகுதியில் ஆலய வளாகத்தினுள் அல்லது அதன் சூழலில் கடைகள் வைப்பது , ஒன்றுகூடுவது , யாசகம் பெறுதல் போன்றன முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது .
06. மேலும் இந்நிபந்தனைகளை மீறுவோர் மீது தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய் தொடர்பான சட்டவிதிகளின் கீழ் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் .

எனவே , இத்திருக்குளிர்ச்சி சடங்கினை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவினரின் மேற்பார்வையோடு நடத்த தங்களின் பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

இவ்வண்ணம் ,

காரைதீவு பிரதேச செயலாளர் , பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரின் அறிவுறுத்தல்களுக்கமைய ,
ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய நிர்வாகத்தினர் .

நன்றி



Post Bottom Ad

Responsive Ads Here

Pages