டெஸ்லா மோட்டார்ஸ் - Karaitivu.org

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

சனி, 20 பிப்ரவரி, 2021

டெஸ்லா மோட்டார்ஸ்டெஸ்லா மோட்டார்ஸ் ( Tesla Motors) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தானுந்து நிறுவனம். மின்சாரத்தினால் இயங்கும் தானுந்துகளை மட்டுமே தெஸ்லா உருவாக்குகிறது. இந்நிறுவனம் மின் சேமிப்புக் கலன்களையும் விற்பனை செய்கிறது. 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இது வரை டெஸ்லா ரோட்ஸ்டர், மாடல் எஸ், மாடல் எக்சு, மாடல் 3 ஆகிய மின்னுந்துகளைத் தயாரித்துள்ளது. எலொன் மசுக் இதன் நிறுவனர்.

இந்த நிறுவனம் 2003-ஆம் ஆண்டு மரத்தின் இபெர்ஹார்ட் மற்றும் மார்க் டர்பென்னிங் என்பவர்களால் நிறுவிக்கபட்டது. இவரைகளை தவிர எலோன் மசுக், ஜேபி சுட்ருபேள் மற்றும் இயன் வ்ரைட் ஆகியோரும் துணை நிறுவனர்களாக கருதப்படுகின்றனர். 2003-ஆம் ஆண்டு ஜிம் நிறுவனம் தனது EV1 எனப்படும் வாகனத்தை தயாரிப்பிலிருந்து நிறுத்திக்கொண்டதோடு மற்றும் அழிக்கவும் செய்ததை தொடர்ந்து, இவர்களுக்கு இந்த டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தை உருவாக்க உந்துகோலாக விளங்கியது.

வாகன வடிவமைப்பு/ மாதிரிகள்
டெஸ்லா நிறுவனம் கடந்த டிசம்பர் 2017 வரை மூன்றுவகையான வாகன வடிவமைப்புகளை சந்தையில் விற்பனைக்கு அறுமுகப்படுத்தியுள்ளது. இந்த் நிறுவனத்தின் முதலாம் வடிவமைப்பு Tesla Roadster தற்பொழுது விற்பனையில் இல்லை.

தற்பொழுது விற்பனையில் உள்ள மாதிரிகள்; மொடல் எஸ் (Model S) , மொடல் க்ஸ் (Modal X), மொடல் 3 (Modal 3) ஆகியவை ஆகும்.

மொடல் எஸ் (Model S)
மொடல் எஸ்-யின் தயாரிப்பு பணிகள் ஜூன் 22, 2012-யில் தொடங்க பட்டன. முதற்கட்டமாக ஐரோப்பாவில் ஆகஸ்ட் 2013 ழும்பின்னர் சீனாவில் ஏப்ரல் 2014 இந்த மொடல் எஸ் வகை வாகனங்கள் விற்பனைக்கு வந்தன. இதனை தொடர்ந்து வலதுபுறம் ஓட்டுநர் வகை வனங்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியம் ஹொங்கங் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் 2014-ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தன.  இந்த மொடல் எஸ் வகை வாகனங்கள் உலகரீதியான சில அங்கிகாரங்களை பெற்றுள்ளது. அவற்றில் குறிப்பிட்ட தக்கது, 2013-ஆம் ஆண்டு "Motor Trend Car of the Year"; "World Green Car"; Automobile Magazine's 2013 "Car of the Year" மற்றும் Time Magazine "Best 25 Inventions of the Year 2012"

மொடல் க்ஸ் (Modal X)
மொடல் க்ஸ் வகை வாகனம் அலுமானனியத்தால் உருவாக்கபட்ட வடிவமைப்பை கொண்டுள்ளது. இதன் தயாரிப்பு பணிகள் 2013 ஆம் ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்டது. இருப்பினும் பின்னர் 2015-ஆம் ஆண்டில்தான் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டன. இந்தவகை வகணங்கள் 5-, 6- மற்றும் 7 பேர் அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொடல் க்ஸ் வகை வாகனங்கள் செப்டம்பர் 2015 முதல் சந்தைக்கு விற்பனைக்கு வந்தன. நோர்வே நாட்டில் இந்த வாகனம் 2016-ஆம் ஆண்டு மின்சாரத்தால் இயங்கும் முதனிலை வாகனமாக கருதப்பட்டது.

மொடல் 3 (Modal 3)
டெஸ்லா மொடல் 3, முன்புற தோற்றம்
மொடல் 3 வகை வாகனம் டெஸ்லாவின் 3ஆம் தலைமுறை வடிவமைப்பாகும். ஆரம்பத்தில் 'மொடல் இ' பேரிருட படவேண்டியநிலையில் போர்ட் வாகன நிறுவனத்தின் நீதிமன்ற முறையீட்டினால் இந்த வகை வாகனத்தின் பெயர் மொடல் 3 என அறிவிக்கப்பட்டது. மொடல் 3 அதிகபட்சம் 500கிமு வரை மின்சாரத்தை எட்டக்கூடிய ஆற்றல் கொண்டது. 31 மார்ச் 2016 இதன் முதல் வடிவமைப்பு உலகிற்கு கட்டப்பட்ட நிலையில் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வாகனத்திற்கு முன்பணம் செலுத்தினர். ஜூலை 2017 வரை 500,000 பேர் இந்த வாகனதை வாங்க பதிந்து கொண்டனர்.

டெஸ்லா இந்த மொடல் 3 வகை வாகன உற்பத்தியில் $2 முதல் $3 பில்லியன் அமெரிக்க டாலரை முதலிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் 30 வண்டிகள் ஜூலை 28, 2017 நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் பயனீட்டாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 8,182 வண்டிகள் விற்கப்பட்டன. ஜனவரி 2018 தொடங்கி, மொடல் 3 வகை வாகனங்கள் அமெரிக்காவில் விற்பனையாகும் மின்சார வகை தணுத்துகளில் முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Responsive Ads Here

Pages