இலங்கையின் 73 ஆவது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்படுகின்றது - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வியாழன், 4 பிப்ரவரி, 2021

இலங்கையின் 73 ஆவது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்படுகின்றது




இலங்கை  துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
இலங்கையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு மூவாயிரம் ஆண்டுகளைக் கொண்டது. இதன் புவியியல் அமைவு மற்றும் ஆழமான திருகோணமலை துறைமுகம் என்பன புராதன பட்டுப் பாதை காலந்தொட்டு இரண்டாம் உலக யுத்தம் வரை தந்திரோபாய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது. இலங்கை பல சமய, பல இன, பல மொழிகள் பேசுவோரின் தாயகமாகவுள்ளது. 

இலங்கை அதிபர் முறைமூலம் குடியரசு மற்றும் ஒற்றையாட்சி அரசால் ஆளப்படும் நாடாகும். கொழும்பு குடியேற்றவாத ஆட்சிக்காலம் முதலே இலங்கையின் தலைநகராக இருந்து வந்துள்ளது. 1977 ஆம் ஆண்டில், இலங்கையின் நிர்வாகத் தலைநகராக அண்மையில் உள்ள சிறீ ஜெயவர்த்தனபுர கோட்டையை ஆக்கும் பொருட்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடம் அங்கே கட்டப்பட்டு, கொழும்பு நகரில் உள்ள சிறீ ஜெயவர்த்தனபுர கோட்டை தலைநகராக அமைந்துள்ளது. இலங்கை தேயிலை, கோப்பி, இரத்தினம், தெங்கு, இறப்பர், கருவா ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றது.

இலங்கை "இந்து சமுத்திரத்தின் முத்து" என அதன் இயற்கை அழகினால் அழைக்கப்படுவதுண்டு. மேலும், இது "புன்னகைக்கும் மக்களின் தேசம்" எனவும் அறியப்படுவதுண்டு. இத்தீவு வெப்பமண்டலக் காடுகளையும் உயர் உயிரியற் பல்வகைமை கொண்ட பல்வேறுவகையான இயற்கை அமைப்பினைக் கொண்டது.

இந்நாடு பன்னாட்டுத் தொடர்பில் நீண்ட வரலாற்றைக் கொண்டது. இது சார்க் ஆரம்ப உறுப்பினரும், ஐக்கிய நாடுகள் அவை, பொதுநலவாய நாடுகள், ஜி77, கூட்டுசேரா இயக்கம் ஆகியவற்றின் உறுப்பினரும் ஆகும். இது ஒன்றே தென்னாசியாவில் "உயர்" மனித வளர்ச்சிச் சுட்டெண் கொண்ட நாடாகும்.

இலங்கையின் முக்கிய நகரங்களாகக் கண்டி, காலி, குருநாகல், அநுராதபுரம், யாழ்ப்பாணம், நுவரேலியா, திருகோணமலை, மட்டக்களப்பு என்பவை காணப்படுகின்றன.

பெயர்
முற்காலத்தில் இலங்கை, இலங்காபுரி, லங்கா, நாகதீபம், தர்மதீபம், லங்காதுவீபம் (வழங்கிய வடமொழியில்), சின்மோன்டு, சேலான், தப்ரபேன் (கிரேக்கர்களால்), செரெண்டிப் (அராபியர்களால்), சேரன்தீவு உட்பட மற்றும் பல பெயர்களால் அழைக்கப்பட்ட இத்தீவு, பின்னர் குடியேற்றவாத காலம் தொடக்கம் 1972 ஆம் ஆண்டில் இலங்கை ஒரு குடியரசாக அறிவிக்கப்படும் வரை சிலோன் என்று அழைக்கப்பட்டது.  

1.உலகின் முதலாவது பெண் பிரதம மந்திரியைத் தெரிந்தெடுத்த நாடு.(சிறிமாவோ பண்டாரநாயக்கா)
2.ஆசியாவில் அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை கிடைத்த முதலாவது நாடு.
3.முதலாவதாக ஆசியாவில் வானொலி ஒலிபரப்பை தொடங்கிய நாடு.
4.ஆங்கிலேயரின் முதலாவது முடிக்குரிய குடியேற்ற நாடு இலங்கையாகும்.
5.உலகின் மிக உயர்தர தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடு.
6.உலகின் அதிகூடுதலான, மிக உயர்தர கருவாவை ஏற்றுமதி செய்யும் நாடு.
7.உலகின் முதலாவது வனவிலங்கு சரணாலயம் இலங்கையிலேயே அமைக்கப்பட்டது .
8.கிரிக்கட் உலகக் கிண்ணத்தை 1996ஆம் ஆண்டு இலங்கை வென்றெடுத்தது.



 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages