நேர்த்தி கடன் வழங்கும் பொருட்கள் வீடுவீடாக சென்று சேகரிப்பு... - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 1 ஜூன், 2020

நேர்த்தி கடன் வழங்கும் பொருட்கள் வீடுவீடாக சென்று சேகரிப்பு...

கிழக்கில் இன்று(01) திங்கட்கிழமை வருடாந்த கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி வைபவத்திற்கான சடங்குகள் கொரோனா நெருக்கடி காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பமாகியது.

வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திச்சடங்குகள் இன்று(01) திங்கட்கிழமை கடல்தீர்த்தம் கொணர்ந்து கல்யாணக்கால் நடலுடன் ஆரம்பமாகியது.

கொரோனா அச்சம் காரணமாக பக்தர்கள் ஆலயத்திற்கு செல்லதடை விதிக்கப்பட்டிருப்பதனால் கல்யாணக்காலுக்கான கூறைச்சாறிகளை இன்று ஆலய நிருவாகத்தினர் தேரோடும் வீதிவழியாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சென்று சேகரித்தனர்.

மக்கள் சமகால நிலையை உணர்ந்து அம்மனுக்கான கூறைச்சாறிகளை கையளித்ததுடன் நேர்த்தி மடைப்பெட்டிகளையும் அவ்வாகனத்தில் கையளித்தனர்.

வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி வைபவம் இன்று ஜூன் 1ஆம் திகதி கதவுதிறத்தலுடன் ஆரம்பமாகி 9ஆம் திகதி அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையும்.






Post Bottom Ad

Responsive Ads Here

Pages