KDPS இன் 2ம் கட்ட கல்வி மேம்பாட்டு நடவடிக்கை ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 15 ஏப்ரல், 2020

KDPS இன் 2ம் கட்ட கல்வி மேம்பாட்டு நடவடிக்கை !

காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூகத்தின்(KDPS) செயற்பாடுகளில் கல்வி மேம்பாட்டிற்காக 2ம் கட்ட கல்வி மேம்பாட்டு நடவடிக்கை தரம் 10 தொடக்கம் தரம் 13 வரையிலான மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் செயல் அட்டைகள் காரைதீவு ஒன்றியம் ஐக்கிய ராஜ்ஜியம்(KAUK), அவுஸ்ரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியம்(AusKar) இன் அனுசரனையில் வழங்கப்பட்டன. ஏற்கனவே தரம் 3 தொடக்கம் தரம் 9 வரையிலான மாண்வர்களுக்கு செயலட்டை வழங்கப்டடிருந்தது.

இந்த செயலட்டைகள் அனைத்தும் அதிபர்களிடம்  கையளிக்கப்பட்டது. அத்துடன் அயல் கிராமமான அட்டப்பள்ளம் வித்தியாலயத்துக்கு தரம் 3 தொடக்கம் தரம் 9 மாணவர்களுக்கு அதிபர் திரு.ரகுநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.உயர்தர மாணவர்களுகாக அதிபர் திரு.M.சுந்தரராஜன் (VCC), அதிபர் திரு.R.ரகுபதி (RKM GIRLS) அதிபர் திரு.S.மணிமாறன் (SHANMUGA) அவர்களிடம் KDPS தலைவர் மற்றும் அங்கத்தவர்களால் ஒப்படைக்கப்பட்டது.செயலட்டைகள் அனைத்தும் அதற்குரிய ஆசிரியர்களினூடாக மாணவர்களிடம் ஒப்படைக்கப்படும். மாணவர்கள் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளவும். 

அத்துடன் கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.S.புவனேந்திரன் அவர்களும் கலந்துகொண்டு  ஆலோசனைகளை வழங்கியதுடன் மற்றும் அதிபர்களும் தமது ஆலோசனையளையும் நன்றியறித்தல்களையும் தெருவித்தனர்.

தகவல்
KDPS- Organizing Committee

 





 












Post Bottom Ad

Responsive Ads Here

Pages