காரைதீவு பிரதேசசபை நடாத்திய புலமையாளர் கௌரவிப்புவிழா ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

காரைதீவு பிரதேசசபை நடாத்திய புலமையாளர் கௌரவிப்புவிழா !

காரைதீவு பிரதேசசபை நடாத்திய புலமையாளர் கௌரவிப்புவிழாவில்  57புலமையாளர்கள் பாராட்டிக்கௌரவிக்கப்பட்டனர்.


மேற்படி நிகழ்வு காரைதீவு விபுலாநந்தர் கலாசார மண்டபத்தில் பிரதேசசபைசெயலாளர் அ.சுந்தரகுமார் தலைமையில்   நடைபெற்றது.
முதன்மை அதிதியாக காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கலந்து சிறப்பித்தார்.
 
விழாவில் பிரதம விருந்தினராகக்கலந்துகொண்டுரையாற்றிய அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவியும் பாராளுமன்ற உறுப்பினருமானசட்டத்தரணி சிறியாணி விஜேவிக்கிரம  'நான் இன்று ஒரு வழக்கறிஞராக ஒரு பாராளுமன்ற உறுப்பினராக ஒரு மாவட்ட ஒருங்ணைப்புக்குழுத்தலைவியாக இருக்கிறேன் என்றால் அதற்குக்காரணம் நான் கற்ற கல்விதான் 'என்பதை ஆணித்தரமாகக்கூறுவேன்.என்று  தெரிவித்தார்.

57புலமையாளர்கள் பாராட்டிக்கௌரவிக்கப்பட்ட அவ்விழாவில் அவர் மேலும் உரையாற்றுகையில்:
நானும் சிறுவயதில் இந்தப்புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அதேபோல் இங்கு வந்துள்ள எனதுமகளும் கடந்த 2015இல்சித்திபெற்றபோது அவளை விட எனக்குச் சந்தோசமாகவிருந்தது.

அதேபோன்று இங்குவந்துள்ள  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் இந்தமேடையில் பாராட்டப்படும்போது எவ்வளவு சந்தோசமடைவீர்கள் என்பதை நானறிவேன் வாழ்த்துக்கள்.
கல்விதான் எமக்கு முக்கியம்.நல்லதொரு நாட்டைக்கட்டியெழுப்ப கல்விதான் அடிப்படை. அதற்காகவே எமது ஜனாதிபதி புதிய கல்வித்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளார்.
மாணவர்களை இந்த போதைப்பொருள் பாவனையிலிருந்து காப்பாற்றவேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. என்றார்.
முதன்மை அதிதி காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி. ஜெயசிறில் உரையாற்றுகையில்:
எமது நாட்டு தேசியகீதம் தமிழிலும் பாடப்படவேண்டும் என்பதில் மறுகருத்து இருக்கமுடியாது. நாம் அதற்காக எதையும் செய்வோம்.

மாவட்ட அபிவிருத்திக்குப்பொறுப்பாக இருக்கும் தலைவி சிறியாணி அம்மணியைக்கொண்டு காரைதீவை அபிவிருத்திஅடையச்செய்யும் நோக்கில் இங்கு பிரதமஅதிதியாக அழைத்துள்ளோம். என்றார்.


சிறப்புஅதிதிகளாக உபதவிசாளர் எ.எம்.ஜாகீர் உறுப்பினர்களான மு.காண்டீபன் மு.ஜலீல் இ.மோகன் எம்.பஸ்மீர் ஆ.பூபாலரெத்தினம் எம்.றனீஸ் மற்றும் சு.கட்சி காரைதீவு அமைப்பாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி ஆகியோரும் அபிவிருத்திக்குழு உறுப்பினர்களும் கலந்துசிறப்பித்தார்கள். நிகழ்ச்சியை வேதசகா தொகுத்தளித்தார்.









 


Post Bottom Ad

Responsive Ads Here

Pages