கல்முனையில் சசி மகரிஷியின் ”படைகளின் வரவால்” கவிதை நூல் வெளியீடு ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

செவ்வாய், 22 ஜனவரி, 2019

கல்முனையில் சசி மகரிஷியின் ”படைகளின் வரவால்” கவிதை நூல் வெளியீடு !

சசி மகசிஷியின் ”படைகளின் வரவால்” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு கல்முனையில் எழுத்தாளர் உமாவரதராஜன் அவர்களின் தலைமையில் கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
கல்முனை கிறிஸ்டா இல்ல மண்டபத்தில் எதிர்வரும் 26.01.2019 சனிக்கிழமை பி.ப 3.30 மணிக்கு வெளியீட்டு நிகழ்வு இடம்பெறும்.
பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், சிவ. வவரதராஜன், செல்வி ரி.உருத்திரா ஆகியோர் நூல் விமர்சன உரைகளை நிகழ்த்துவதுடன், முதற் பிரதியை கவிஞர் மு. சடாட்சரன் அவர்கள் வெளியிட்டு வைப்பார்.
இந் நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள், இலக்கியவியலாளர்கள் என பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
சசி மகரிஷி அவர்கள் பாண்டிருப்பை சொந்த இடமாகக்கொண்டவர், இவர் உலகறிந்த கவிஞர் அமரர் சண்முகம் சிவலிங்கம் அவர்களின் இரண்டாவது புதல்வராவார் தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்துவருகிறார். சசி மகரிஷி குறிப்பிட்ட காலம் வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தில் கடமையாற்றியிருந்தவர்,
கலை இலக்கியத்தில் ஆர்வமான இவர் முன்னர் கல்முனை பிரதேசத்தில் ”நவதர்ஷிகள்” எனும் கலை இலக்கிய அமைப்பை உருவாக்குவதில் முன்னின்று செயற்பட்டவர், இந்த அமைப்பால் ”சொந்த சுமைகள்” எனும் கவிதை நூல் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்கள்.

கலை, இலக்கியம், பாடசாலை செயற்பாடுகள், விளையாட்டுக்கள், தேவாலய நிகழ்வுகள் போன்ற பொதுவான செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தி செயற்பட்ட சமூக நலன் சிந்தனை கொண்டவர்.

Post Bottom Ad

Responsive Ads Here

Pages